எலும்பை பலப்படுத்தும் கருப்பு உளுந்தில் இப்படி காரசாரமா பொடி செஞ்சு பாருங்க.. எக்ஸ்ட்ரா இரண்டு இட்லி கேப்பாங்க! சத்தானது
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  எலும்பை பலப்படுத்தும் கருப்பு உளுந்தில் இப்படி காரசாரமா பொடி செஞ்சு பாருங்க.. எக்ஸ்ட்ரா இரண்டு இட்லி கேப்பாங்க! சத்தானது

எலும்பை பலப்படுத்தும் கருப்பு உளுந்தில் இப்படி காரசாரமா பொடி செஞ்சு பாருங்க.. எக்ஸ்ட்ரா இரண்டு இட்லி கேப்பாங்க! சத்தானது

Pandeeswari Gurusamy HT Tamil
Published Oct 05, 2024 05:00 AM IST

கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானமும் எளிதாகும். நீரிழிவு நோயாளிகள் கருப்பு உளுந்தை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு ஒழுங்குபடுத்தப்படும். இந்த கருப்பு உளுந்தில் ருசியான இட்லி பொடியை செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.

எலும்பை பலப்படுத்தும் கருப்பு உளுந்தில் இப்படி காரசாரமா பொடி செஞ்சு பாருங்க.. எக்ஸ்ட்ரா இரண்டு இட்லி கேப்பாங்க! சத்தானது
எலும்பை பலப்படுத்தும் கருப்பு உளுந்தில் இப்படி காரசாரமா பொடி செஞ்சு பாருங்க.. எக்ஸ்ட்ரா இரண்டு இட்லி கேப்பாங்க! சத்தானது

கருப்பு உளுந்து இட்லி பொடி செய்ய தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து – 1 கப்

கடலை பருப்பு – அரை கப்

கட்டி பெருங்காயம் – ஒரு சிறிய உருண்டை

வர மிளகாய் – 10 – 20 (உங்கள் வழக்கமான கார அளவுக்கு ஏற்ப கூடுதலாகவும், குறைவாகவும் சேர்த்துக்கொள்ளலாம்)

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

பூண்டு - 10 பல்

புளி - குட்டி நெல்லிக்காய் அளவு

கருப்பு உளுந்தம் பொடி செய்முறை

ஒரு கடாயில் கருப்பு உளுந்தை நன்றாக வாசம் வரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வறுத்தால் மிகவும் நன்றாக வறுபடும்.

பின்னர் கடலை பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பருப்புகள் கருக விடாமல் கைவிடாமல் வறுக்க வேண்டும்.

பின்னர் வர மிளகாயை நன்றாக வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலையையும் தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கட்டி பெருங்காயமாக எடுத்தால் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடாயில் பொறித்து எடுத்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அனைத்தையும் நன்றாக வாசம் வரும் வரை வறுத்து எடுத்த பின் ஒரு தட்டில் வைத்து நன்றாக ஆற வைக்க வேண்டும்.

அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பொருட்கள் நன்றாக ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கல் உப்பாக சேர்த்தால் அரைக்கும்போதே சேர்த்துக்கொள்ள வேண்டும். தூள் உப்பு எனில் அரைத்த பின்னர் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த கறுப்பு உளுந்து பொடி சாதம், இட்லி, தோசை என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட்டுக்கொள்ளலாம்.

நீங்கள் சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து இந்த பொடியை தூவி சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.

அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.