தமிழ் செய்திகள்  /  Entertainment  /  A Special Article Related To The 25th Anniversary Of The Release Of The Movie En Swasakaatrae

25 Years of En Swasakaatrae:கணினி ஹேக்கரின் காதல்.. ஜிம்பலக்கா, சின்ன சின்ன மழை துளிகள் என மொத்த ஆல்பமும் ஹிட்!

Marimuthu M HT Tamil
Feb 26, 2024 05:25 AM IST

என் சுவாசக் காற்றே திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

என் சுவாசக் காற்றே
என் சுவாசக் காற்றே

ட்ரெண்டிங் செய்திகள்

என் சுவாசக் காற்றே திரைப்படத்தின் கதை என்ன?:எல்லோரிடமும் மிகவும் பழகுவதற்கு எளிமையான வாஞ்சையான மனிதர், அருண். பகல் பொழுதில் கம்பியூட்டர் ஹேக்கராகவும், இரவு நேரத்தில் கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகிறார். அப்போது மது என்னும் பெண்ணைச் சந்திக்கும்போது காதல் வயப்படுகிறார். திருந்திவாழவேண்டும் என்று நினைக்கிறார். இதைத் தெரிந்துகொள்ளும் அருணின் சகோதரன் குரு, சிறுவயதில் இருந்து அருண் செய்த குற்றச்செயல்களைச் சொல்லியே மிரட்டி, மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களைப்புரிய வைக்கிறான்.

ஆனால், முந்தைய காலத்தில் அன்பு மீதும் வெறுப்பு மீதும் நடந்த சில சம்பவங்கள் அருணை சிறுவயதில் குற்றச்சிக்கல்களைச் சந்திக்குமாறு வைத்துள்ளது. எனவே, மனதிற்குள் அன்போடு இருக்கும் அருண், அந்த பழைய வாழ்க்கை கிடைக்காதா என ஏங்கி இருக்கிறார். எப்படி அருண் குற்றப்பின்னணியில் இருந்து வெளியில் வந்து குடும்பத்தையும் காதலையும், எப்படி தேர்வு செய்கிறார் என்பதே கதையின் மையக்கரு.

இப்படத்தில் அருண் ராஜாக, அர்விந்த் சுவாமியும்; மதுவாக இஷா கோபிகரும், குருவாக பிரகாஷ் ராஜூம், பாண்டியனாக ரகுவரனும், ஏசிபி ஆக தேவனும் நடித்துள்ளனர். இதுதவிர, வடிவேலு, தலைவாசல் விஜய், சந்தானபாரதி, சின்னி ஜெயந்த், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோர் நடித்து இருக்கின்றனர்.

தயாரிப்புப் பணிகளில் நடந்த குளறுபடி:

இப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மானின் நண்பர்களான ஆர்.எம்.சயத் மற்றும் அன்வர் அலி ஆகியோர் தயாரித்து இருந்தனர். முன்னதாக இவர்கள், லவ் லெட்டர் என்னும் படத்தைத் தயாரிக்க இருந்தனர். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான், மிஸ்டர் ரோமியோ படத்தை இயக்கிய இயக்குநர் கே.எஸ்.ரவியை வைத்து இந்தப் படத்தை எடுக்கும்படி கூறினார். அதனால், இப்படம் டேக் ஆஃப் ஆனது. அதன்பின், இப்படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் அர்விந்த் சுவாமிக்கு சரியாக சம்பளம் தரவில்லை எனப் புகார் எழுந்தது. 

ஆகையால், இப்படத்தின் தயாரிப்பாளர் அடுத்த படத்தை வெளியிடாதவாறு நீதிமன்றத்தில் தற்காலிகத்தடை பெற்றார். மேலும் இப்படத்தின் கதை அன்றைய காலங்களில் மிஷன் இம்பாஸிபிள் படத்தின் கதை எனப் பரவலாகப் பேசப்பட்டது. மேலும் இப்படத்தின் கதாநாயகி இஷா கோபிகரை, காதலர் தினம் படத்தில் நடிக்கவைக்க ஆடிசன் செய்து வைத்து இருந்தார், இயக்குநர் கதிர். ஆனால், காலதாமதம் ஆகவே, நண்பர் கே.எஸ்.ரவியிடம் ஒப்படைத்து அவருக்கு தமிழில் முதல் வாய்ப்பைப்பெற்றுத் தந்தார்.

இசை: இசை இப்படத்துக்கு மிகப்பெரிய பலமாய் இருந்தது. குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்தின் பாடல்களை அமைத்து இருந்தார். ஆனால், பின்னணி இசையை அன்றைய பிஸி திட்டங்களால் செய்யமுடியாமல் விலகினார். எனவே, இப்படத்துக்குப் பின்னணி இசையை சபேஷ் - முரளி செய்திருந்தனர்.

இப்படத்தில் இடம்பெற்று இளசு மற்றும் குழந்தைகளால் விரும்பப்பெற்ற ’ஜிம்பலக்கா ஜிம்பலக்கா ஜிம்பாலே’ பாடல் முழுக்க முழுக்க வெளிநாட்டில் எடுக்கப்பட்டதுபோல் படம் வந்தபின் ஒரு டாக் இருந்தது. ஆனால், ஹைதராபாத்தில் அப்போது புதிதாக கட்டப்பட்ட ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தான் முழுக்க முழுக்க எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் திறக்காத காட்டுக்குள்ளே, சின்ன சின்ன மழைத்துளிகள், தீண்டாய் மெய் தீண்டாய் ஆகிய மெலடி பாடல்கள் இன்றும்பலரது மனதை வருடுகின்றன. படம் வெளியாகி 25ஆண்டுகளைக் கடந்தாலும் இன்றும் இப்படத்தின் பாடல்களுக்காகவே படத்தைப் பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்