தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  படுத்த உடனே ‘கொர்’ என்ற ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா? இதை வைத்து இரவு பாதங்களில் மசாஜ் செய்யங்கள்!

படுத்த உடனே ‘கொர்’ என்ற ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா? இதை வைத்து இரவு பாதங்களில் மசாஜ் செய்யங்கள்!

Priyadarshini R HT Tamil

Oct 07, 2024, 10:03 AM IST

google News
படுத்த உடனே ‘கொர்’ என்ற ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா? அதற்கு பாதங்களில் இந்த எண்ணெயைக் கொண்டு நீங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
படுத்த உடனே ‘கொர்’ என்ற ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா? அதற்கு பாதங்களில் இந்த எண்ணெயைக் கொண்டு நீங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

படுத்த உடனே ‘கொர்’ என்ற ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா? அதற்கு பாதங்களில் இந்த எண்ணெயைக் கொண்டு நீங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

உங்கள் கால்களில் மெக்னீசியம் எண்ணெயை தடவுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். மெக்னீசிய எண்ணெயை உங்கள் கால்களில் தடவுவது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. தினமும் இரவில் உங்கள் கால்கள் மற்றும் பாதங்களில் மெக்னீசிய எண்ணெயை தடவுவதை வழக்கமாகக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. மெக்னீசியத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகளை இங்கு தெரிந்துகொள்ளலாம். உங்கள் உடலில் 300 பயோகெமிக்கல் மாற்றங்களுக்கு மெக்னீசியம் தேவை. ஆனால் 75 சதவீதம் மக்களுக்கு அவர்களுக்கு தேவையான அளவு மெக்னீசியச் சத்துக்கள் கிடைக்கவில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே உங்கள் கால்களில் மெக்னீசிய எண்ணெயை தடவுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பாருங்கள்.

ஒரு நபர் தினம் 310 மில்லி கிராம் முதல் 32 மில்லி கிராம் அளவுக்கும், ஆண்கள் 400 முதல் 420 மில்லி கிராம் அளவுக்கும் மெக்னீசியத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

உங்கள் உடலுக்குத் தேவையான மெக்னீசியச் சத்துக்களைப் பெறுவதற்கு மெக்னீசிய எண்ணெயை உங்கள் சருமத்தில் நேரடியாக பூசுவது சிறந்த வழி என்று கூறப்படுகிறது. மெக்னீசியம் எண்ணெயை காலில் தடவுவதால், உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. உங்கள் கால்களில் இதை முதலில் தடவும்போது அது உங்களுக்கு கூச்ச உணர்வைக் கொடுக்கலாம். நீங்கள் எண்ணெயைத் தடவி இரவு முழுவதும் வைக்கலாம் அல்லது அரை மணி நேரத்தில் கழுவிவிட்டு படுத்துக்கொள்ளலாம். இதன் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

உறக்கம்

நீங்கள் இரவில் உறக்கமின்றி புரண்டு, புரண்டு படுக்கும் நபரா? எனில், உங்களுக்கு இந்த மெக்னீசிய எண்ணெய் மசாஜ் நன்றாக உதவும். உங்களுக்கு நல்ல இரவு உறக்கத்தைத் தரும். மெக்னீசியம் உங்கள் உடலில் மெலோடோனினை முறைப்படுத்துகிறது. இந்த ஹார்மோன்தான் உங்கள் உறக்கத்துக்கு காரணமாகிறது.

தசை வலி

மெக்னீசியம் எண்ணெயை நீங்கள் உங்கள் பாதங்களில் தடவுவதால், அது உங்களின் தசைகளை அமைதிப்படுத்துகிறது. இதனால் அவர்களின் தசைகள் இலகுவாகலாம். நாள் முழுவதும் அதில் உள்ள அழுத்தம் குறையும். குறிப்பாக உங்கள் உடற்பயிற்சியின்போது உங்கள் உடலில் ஏற்படும் வலிகளைப் போக்கும்.

மனஅழுத்தம் குறைவு

உங்கள் பணி அல்லது உறவுகளில் உள்ள பிரச்னைகளால் உங்களுக்கு அதிகளவில் மனஅழுத்தம் ஏற்படுகிறதா? எனில் மெக்னீசியம் எண்ணெய் அதற்கு ஒரு நல்ல தீர்வு தரும். உங்கள் பாதங்களில் நீங்கள் மெக்னீசிய எண்ணெயை தடவினால் போதும் அது உங்கள் அமைதியான உணர்வைத்தரும். உங்கள் மனதை அமைதிப்படுத்தும். மெக்னீசியம், உங்கள் உடலில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உடலில் செரோடினின் சுரக்கும் அளவை அதிகரிக்கிறது. இந்த செரோடினின் உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும் ஹார்மோன் ஆகும்.

மலச்சிக்கலைப் போக்குகிறது

மெக்னீசியம், மலச்சிக்கலைப் போக்குகிறது. உங்களின் மலத்தை இலகுவாக்கி, இறுகுவதை தடுத்து குடல் ஆரோக்கியத்தை காக்கிறது. மலத்தில் உள்ள தண்ணீரை எடுத்து, மெக்னீசியம் உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது. இது வயிற்றில் உள்ள வலியைப் போக்குகிறது. மலத்தை எளிதாக வெளியேற்ற உதவுகிறது.

மாதவிடாய் வலி

உங்களுக்கு மாதவிடாயின்போது கடும் வலி ஏற்படும் என்றாலோ அல்லது வயிறு உப்புசம் ஏற்பட்டாலோ உங்கள் பாதங்களில் மெக்னீசியம் எண்ணெயில் மசாஜ் செய்தால், அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத்தரும். உங்கள் தசைகளை அமைதிப்படுத்தி, வலியைக் குறைக்கும். ஒற்றைத் தலைவலியைப் போக்கும். பெண்களுக்கு மெனோபாஸ்க்கு முந்தைய அறிகுறிகளைப் போக்கும்.

தினமும் இரவில் உங்கள் கால்களில் மெக்னீசியம் எண்ணெயை தடவுவதை நீங்கள் வழக்கமாகக்கொண்டால், இது உங்கள் உடலுக்கு போதிய அளவு மெக்னீசியச் சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை செய்யும்.

நீங்கள் மெக்னீசிய எண்ணெய் மசாஜை வழக்கமாக்கிக்கொள்ளவில்லையென்றால், உங்கள் உணவில் போதிய அளவு மெக்னீசியச் சத்துக்கள் சேர்த்துக்கொள்வதை உறுதிசெய்துகொள்ளுங்கள். உங்கள் உணவில் கீரைகள், பரங்கிக்காய் விதைகள், பாதாம், முந்திரி, வாழைப்ழங்கள், டார்க் சாக்லேட்கள் சேர்த்துக்கொள்வதை வழக்கமாக்குங்கள் அல்லது ஆரோக்கிய உணவுடன் மெக்னீசிய எண்ணெய் தடவுவதை பழக்கமாக்குங்கள். உணவில் இருந்து மெக்னீசியச் சத்துக்களை எடுக்கிறீர்கள் என்றால், தினமும் உணவில் கீரைகள் கட்டாயம் சேர்க்கவேண்டும். பரங்கிக்காய் விதைகள், முந்திரி, பாதாம், பிஸ்தா, வாழைப்பழங்கள், டார்க் சாக்லேட் என எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி