Constipation Remedy : குடலில் தேங்கிக்கொண்டு வெளியேற மறுக்கும் மலத்தை அகற்றவேண்டுமா? இது உதவும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Constipation Remedy : குடலில் தேங்கிக்கொண்டு வெளியேற மறுக்கும் மலத்தை அகற்றவேண்டுமா? இது உதவும்!

Constipation Remedy : குடலில் தேங்கிக்கொண்டு வெளியேற மறுக்கும் மலத்தை அகற்றவேண்டுமா? இது உதவும்!

Priyadarshini R HT Tamil
Jul 02, 2024 01:37 PM IST

Constipation Remedy : குடலில் தேங்கிக்கொண்டு வெளியேற மறுக்கும் மலத்தை அகற்றவேண்டுமெனில் நீங்கள் இதை செய்யலாம். அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Constipation Remedy : குடலில் தேங்கிக்கொண்டு வெளியேற மறுக்கும் மலத்தை அகற்றவேண்டுமா? இது உதவும்!
Constipation Remedy : குடலில் தேங்கிக்கொண்டு வெளியேற மறுக்கும் மலத்தை அகற்றவேண்டுமா? இது உதவும்!

இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அந்த வகையில் இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

மலச்சிக்கல்

நாம் மலம் கழிக்கும்போது, முற்றிலும் மலம் வெளியேறுகிறதா என்றால் இல்லை. முதலில் கெட்டியாகவும், கடைசியாக கொஞ்சம் கொழகொழப்பாகவும் இளகி வெளியேறினால்தான் நமது மலக்குடலில் இருந்து மலம் முற்றிலும் வெளியேறிவிட்டது என்று பொருள். ஆனால் சிலருக்கு மலம் வெளியில் வராது. அவர்களுக்கு இந்த ஒரு பானம் உதவும். 

நாள்பட்ட மலச்சிக்கல் நமது உடலில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும். மலச்சிக்கல் இருந்தாலும் வயிறு உப்பிக்கொண்டு தொப்பை போன்ற உணர்வைத்தரும். எனவே அதற்கு உதவும் இந்த ஸ்மூத்தியை நீங்கள் தினமும் பருகினால் அது உங்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்

பப்பாளி – ஒரு கப் (சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

(பப்பாளியில் பப்பைன் என்ற எண்சைம் உள்ளது. அது செரிமானத்தை சிறப்பாக்க உதவும். இதில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை முற்றிலும் போக்கும். செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்து, மலத்தை வெளியேற்றவும் உதவும். மேலும் பப்பாளிப்பழம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளையும் தருகிறது.

பால் – ஒன்றரை கப்

வாழைப்பழம் – 2

செய்முறை

இந்த மூன்றையும் சேர்த்து அரைத்து ஸ்மூத்தியாக்கி அதை தினமும் காலையில் பருகவேண்டும். இதை தினமும் காலையில் பருகுவது உடலுக்கு மேலும் பல நன்மைகளையும் தருகிறது. எனவே நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள். 

இந்த பானத்தை தினமும் கட்டாயம் பருகிவிடுங்கள். உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்னைகள் தீர்ந்த பின்னரும் நீங்கள் இதை எடுத்துக்கொண்டால் நல்லது. வேறு பக்கவிளைவுகளும் ஏற்படாது. நீங்கள் இதை எடுப்பதை விட்டுவிடக்கூடாது. எனவே பிரச்னைகள் தீர்ந்த பின்னர் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் எடுக்கலாம். 

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.