தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  நள்ளிரவில் திடீரென விழித்துவிட்டு மீண்டும் உறங்க முடியாமல் அவதியா? காரணமும், தீர்வும் இதுதான்!

நள்ளிரவில் திடீரென விழித்துவிட்டு மீண்டும் உறங்க முடியாமல் அவதியா? காரணமும், தீர்வும் இதுதான்!

Priyadarshini R HT Tamil

Nov 25, 2024, 11:30 AM IST

google News
இரவு உறக்கத்திற்கு இடையில் விழித்துவிட்டு மீண்டும் உறங்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா?
இரவு உறக்கத்திற்கு இடையில் விழித்துவிட்டு மீண்டும் உறங்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா?

இரவு உறக்கத்திற்கு இடையில் விழித்துவிட்டு மீண்டும் உறங்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா?

மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். மேலும் இன்றைய மாசுபாட்டால் நமக்கு சரும தொற்றுகள் முதல் புற்றுநோய்கள் வரை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. முடி உதிர்வு என நம் அழகையும் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. அதற்கும் வீட்டிலிருந்தே நாம் சில தீர்வுகளை பின்பற்ற முடியும். எனவே நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும், அழகையும் பராமரிக்க சில மருத்துவகுறிப்புக்களையும் அழகு குறிப்புக்களையும் தெரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

நள்ளிரவில் திடீரென்று உறக்கம் கலைய காரணம் என்ன?

உங்களுக்கு திடீரென நள்ளிரவைக் கடந்து ஒரு 2 அல்லது மூன்று மணிக்கு மேல் விழிப்பு வந்துவிடுகிறதா? உறக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? எனில் அதற்கு காரணம் உங்கள் உடலில் திடீரென சர்க்கரையின் அளவு குறைவதுதான். மேலும் எண்ணற்ற காரணங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த சர்க்கரை குறைவது, சிலருக்கு மனஅழுத்தம் கூட காரணமாக இருக்கலாம். அதற்கு நீங்கள் மருத்துவரை அணுகவேண்டும். ஆனால் அதற்கு முன் நீங்கள் இதை முயற்சிக்கலாம்.

என்ன செய்யலாம்?

திடீரென உறக்கம் கலைந்து மீண்டும் உறக்கம் வருவதில்லையா? அப்படி உங்களுக்கு விழிப்பு ஏற்பட்டால், எழுந்து ஒரு வாழைப்பழம் அல்லது கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். அல்லது பிஸ்கட்கள் கூட எடுத்துக்கொள்ளலாம். இது உங்கள் உடலில் ஏற்படும் சர்க்கரை குறைபாட்டை அந்த நேரத்திற்கு சரிசெய்யும். இதனால் உங்களுக்கு உறக்கம் மீண்டும் வரும். ஆனால் இது உங்களுக்கு நிவாரணம் கொடுத்தால் தொடரலாம். இல்லாவிட்டால் மருத்துவரிடம் செல்வதுதான் சிறந்த தீர்வாகும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி