உடலில் ஏற்படும் தசைப்பிடிப்பு, அதனால் உருவாகும் வலி பலருக்கு தொல்லை தரும் விஷயமாகவே உள்ளது
By Muthu Vinayagam Kosalairaman Nov 16, 2024
Hindustan Times Tamil
தன்னிச்சையான சுருக்கங்கள் காரணமாக தசைப்பிடிப்பு ஏற்பட்டு வலி மற்றும் அசௌகரியத்துக்கு வழிவகுக்கும்
திடீரென ஏற்படும் தசைப்பிடிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்
உடற்பயிற்சி செய்வதற்கு முன், பின், உயற்பயிற்சியின் போதும் உடலில் உள்ள நீர் இருப்பை சமமாக வைப்பதற்கு ஏதுவாக போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும். இதனால் நீர்இழப்பு காரணமாக தசைப்பிடிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது
எந்த விதமான உடல் செய்பாடு செய்வதற்கு முன் தசைகளை தளர்வடைய செய்ய உடல் உறுப்புகளை ஸ்டெர்ட்ச் செய்ய வேண்டும். இரவு நேரத்தில் தூங்கும்போது கால்களில் தசைப்பிடிப்பு பலருக்கு ஏற்படுவதுண்டு. இதை தடுக்க தூங்கும் முன் கால்களை நன்கு ஸ்டெர்ட்ச் செய்யலாம்
அதிகப்படியான புகையில், காஃபைன் பயன்பாட்டை குறைக்க வேண்டும். இவை இரண்டும் தசைப்பிடிப்புக்கு வழிவகுக்கும்
தசைப்பிடிப்புக்கு காரணமாக வைட்டமின், தாதுக்கள் குறைபாடு இருக்கிறதா என்பதை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதை நிவர்த்தி செய்யவும்
உடற்பயிற்சி செய்வதற்கு முன், விளையாடுவதற்கு முன் உடலை தயார்படுததும் விதமாக வார்ம்அப் செய்யுங்கள். இதனால் திடீர் தசைப்பிடிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது
கார்த்திகை மாதம் தொடங்கி விட்டது. பெரிய கார்த்திகை எனும் கார்த்திகை திருநாள் இன்னும் சில தினங்களில் வரப்போகிறது. கார்த்திகை தீபம் ஏற்றும் போது பின்பற்றவேண்டியவை.