சர்க்கரையை சட்டுன்னு குறைக்கணுமா.. இந்த ஒரு காயில் அடிக்கடி பச்சடி செய்து கொடுங்க.. ருசி அட்டகாசமா இருக்கும்!
மேலும் சொறி, சிரங்கு, தேமல், முடி உதிர்வு என பல பிரச்சினை உள்ளவர்கள் இந்த கோவக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. கோவக்காய் சர்க்கரையை குறைக்கும் ஆற்றல் கொண்டது. ருசியான ஆந்திரா ஸ்டெயில் கோவக்காய் பச்சடி எப்படி செய்வது என பார்க்கலாம்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் சொறி, சிரங்கு, தேமல், முடி உதிர்வு என பல பிரச்சினை உள்ளவர்கள் இந்த கோவக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. கோவக்காய் சர்க்கரையை குறைக்கும் ஆற்றல் கொண்டது. ருசியான ஆந்திரா ஸ்டெயில் கோவக்காய் பச்சடி எப்படி செய்வது என பார்க்கலாம்.
ஆந்திரா ஸ்பெஷல் கோவக்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்
கோவக்காய் - கால் கிலோ
தக்காளி -2
உப்பு -தேவையான அளவு
பெருங்காயத்தூள் -1 ஸ்பூன்
கொத்தமல்லி- ஒரு கைபிடி
நல்லெண்ணெய்- தேவையான அளவு
மிளகாய் வத்தல் - 10
வேர்க்கடலை-1 கைபிடி
மிளகு -2 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
பூண்டு - 30 பல்
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - 2 கொத்து
தாளிப்பிற்கு தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
கோவக்காய் பச்சடி செய்முறை
கோவைக்காயை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கோவக்காயை சேர்த்து வதக்க வேண்டும். கோவக்காய் நன்றாக வதங்கிய பிறகு அதில் ஒரு 2 தக்காளியை நறுக்கு சேர்த்து வதங்க விட வேண்டும். கோவக்காய்க்கு தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கைபிடி கொத்த மல்லியையும் சேர்த்து நன்றாக வதங்கும் வரை கலந்து விட வேண்டும். கடாயை மிதமான தீயில் வைத்து வதக்குவது நல்லது. கோவக்காய் தக்காளி இரண்டும் நன்றாக வதங்கிய பிறகு அதை ஆற விட வேண்டும்
மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு அதில் 10 மிளகாய் வத்தலை சேர்க்க வேண்டும். அதனுடன் ஒரு கைபிடி நிலக்கடலை, 2 ஸ்பூன் மிளகு மற்றும் 1 ஸ்பூன் சீரகத்தையும் சேர்க்க வேண்டும். அதில் 30 பூண்டு பற்களை சேர்க்க வேண்டும். 4 நறுக்கிய பச்சை மிளகாயையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இரண்டு கொத்து கறிவேப்பலையையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பூண்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸி ஜாரில் ஏற்கனவே தனியாக வதக்கி எடுத்த கோவைக்காய் தக்காளியை தனியா பேஸ்ட் செய்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் மிளகாய் வத்தல் மிளகு சீரகம் சேர்த்து வதக்கிய மசாலா பொருட்களை தனியாக மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் செய்து எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது தாளிப்பு கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன் உளுந்தம் பருப்பு சேர்க்க வேண்டும். கடுகு வெடித்த பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
பின்னர் ஏற்கனவே அரைத்து எடுத்த நிலக்கடலை மிளகாய் வத்தல் பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அது நன்றாக வதங்கிய பிறகு அரைத்து எடுத்த கோவக்காய் யையும் சேர்க்க வேண்டும். நன்றாக கலந்து விட வேண்டும். இதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கலந்து வதக்க வேண்டும். அவ்வளவுதான் ருசியான கோவக்காய் பச்சடி ரெடி
சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையான காமினேஷன். ருசி அட்டகாசமான இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது.
குறிப்பு : தக்காளிக்கு பதிலாக புளி சேர்த்தும் செய்யலாம். அவர் அவர் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயை கூட்டி குறைத்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்