தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  முளைகட்டிய தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்கிறீர்களா? அதை எப்படி செய்ய வேண்டும்? வழிமுறைகளைப் பாருங்கள்!

முளைகட்டிய தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்கிறீர்களா? அதை எப்படி செய்ய வேண்டும்? வழிமுறைகளைப் பாருங்கள்!

Priyadarshini R HT Tamil

Oct 25, 2024, 10:33 AM IST

google News
முளைகட்டிய தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்கிறீர்களா? அதை எப்படி செய்ய வேண்டும்? அதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அவற்றை நீங்கள் கட்டாயம் பின்பற்றவேண்டும். அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
முளைகட்டிய தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்கிறீர்களா? அதை எப்படி செய்ய வேண்டும்? அதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அவற்றை நீங்கள் கட்டாயம் பின்பற்றவேண்டும். அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

முளைகட்டிய தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்கிறீர்களா? அதை எப்படி செய்ய வேண்டும்? அதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அவற்றை நீங்கள் கட்டாயம் பின்பற்றவேண்டும். அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் உணவில் முளைக்கட்டிய தானியங்களை சேர்த்துக்கொள்ளப்போகிறீர்கள் என்றால், அதை தயாரிக்கும்போது கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் நீங்கள் முளைக்கட்டிய பயிரை அப்படியே சாப்பிடப்போகிறீர்கள். அதில் பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. அந்த பாக்டீரியாக்க உங்களுக்கு கேடுகளை விளைவிக்கலாம். நீங்கள் ஆரோக்கியம் என்று சாப்பிடும் முளைக்கட்டிய பயிர்களே உங்களுக்கு நஞ்சாகலாம். எனவே நீங்கள் முளைக்கட்டிய தானியங்களை தயாரிக்கும்போதும், அவற்றை உட்கொள்ளும்போது, அதிக கவனத்துடன் இருக்கவேண்டும். முளைக்கட்டிய தானியங்களில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆனால் அதை தயாரிப்பதை கவனத்துடன் செய்யவேண்டும். முதலில் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். அதுதான் அதன் நன்மைகளை அதிகரிக்கும். எனவே நீங்கள் தானியங்களை முளைக்கட்டி சாப்பிடும் முன் எண்ணற்ற விதிகளை கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று பாருங்கள்.

தானியங்கள் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்துகொள்ளவேண்டும்

உணவு தானியங்கள் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்துகொள்ளவேண்டும். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதும், உள்ளூரில் வாங்கியதும் சிறந்தது. அதுதான் தானியங்கள் ஃபிரஷ்ஷாக கிடைப்பதற்கான வாய்ப்பாகவும், பாதுகாப்பான ஒன்றாகவும் இருக்கும்.

சுத்தமான பாத்திரத்தை பயன்படுத்த வேண்டும்

நீங்கள் தானியங்களுக்கு பயன்படுத்தும் பாத்திரங்கள், அவற்றை உபயோகிக்கும் இடங்கள் தூய்மையானதாக இருக்கவேண்டும். மூளை கட்டும் முன், அவற்றை சுத்தம் செய்து பயன்படுத்துவதுதான் அவற்றை எவ்வித மாசுபாட்டிலும் இருந்து காக்கச்செய்யும் வழிகளுள் ஒன்றாகும்.

பாதுகாப்பான சுத்தமான தண்ணீர்

தானியங்களை முளைகட்டுவதற்கு முன் ஊறவைக்கவேண்டும். அதற்கு பயன்படுத்தும் தண்ணீர் தூய்மையானதாக இருக்கவேண்டும். நீங்கள் பருகுவதற்கு பயன்படுத்தும் தூய்மையான பாதுகாப்பான தண்ணீரையே ஊறவைக்கவும் பயன்படுத்துங்கள். தானியங்களை அலசவும், ஊறவைக்கவும் இந்த தண்ணீரே சிறந்தது. குழாயில் இருந்து பெறப்படும் தண்ணீர் மிகவும் மோசமானதாகவும், குளோரின் கலந்ததாவும் இருக்கம். எனவே நீங்கள் பருகும் முன் அதை வடிகட்டிக்கொள்ளவேண்டும். இதை வடிகட்டி பருகுவதுதான் பாதுகாப்பானது. எனவே அந்த தண்ணீரையே ஊறவைக்கவும் பயன்படுத்துங்கள்.

ஊறவைக்கும் முன் நன்றாக அலச வேண்டும்

ஊறவைக்கும் முன் தானியங்களை நன்றாக அலசவேண்டும். ஊறவைத்த பின்னரும் அதை நன்றாக அலசி வடித்துக்கொள்ளவேண்டும். இதை ஒரு நாளில் இருமுறை அதாவது 12 மணி நேரத்துக்கு ஒருமுறை செய்யவேண்டும். கோடை காலங்களில், வெப்பமான நேரங்களில் இதை 6 மணி நேரத்துக்கு ஒருமுறை செய்யவேண்டும்.

ஊறவைக்கும் நேரம்

ஊறவைக்கும் நேரம் மற்றும் வெப்பநிலை மிகவும் அவசியம். அறை வெப்பநிலையில், 6 மணி நேரம் அல்லது ஓரிரவு ஊறவைக்கவேண்டும். தானியங்களைப் பொறுத்து அவற்றை ஊறவைக்கும் கால அளவு மாறுபடும். எனவே நீங்கள் பல்வேறு தானியங்களை முளைக்க வைக்கப் போகிறீர்கள் என்றால், ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஊறவைத்துக்கொள்ளுங்கள்.

உட்கொள்ளும் முன் பரிசோதிக்கவேண்டும்

முளைகட்டிய தானியங்களை உட்கொள்ளும் முன் பரிசோதித்துக்கொள்ளவேண்டும். அதில் இருந்து துர்நாற்றமோ அல்லது நிறம் மாறியிருந்தாலோ நீங்கள் அதை பயன்படுத்தக்கூடாது.

சமைக்காமல் சாப்பிடுவது

குறைவான நோய் எதிர்ப்பு கொண்டவர்கள், இந்த முளைகட்டிய தானியங்களை சமைத்து சாப்பிடுவதே சிறந்தது. அவர்கள் பாக்டீரியாக தொற்றுக்கள் ஏற்படும் ஆபத்தை தடுக்க, அவற்றை சமைத்து உண்ண வேண்டும்.

உணவு நஞ்சாதல்

சமைக்காமல் உட்கொள்ளப்படும் தானியங்களில், உணவு நஞ்சாகும் தன்மை அதிகம் இருக்கும். ஏனெனில் அவற்றில் இ கோலி மற்றும் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் உருவாக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும். இந்த தானியங்கள் ஈரப்பதத்தில் முளைக்கவைக்கப்படுவதால், அவற்றில் இந்த பாக்டீரியாக்கள் எளிதில் உருவாகிவிடும். எனவே மிகுந்த கவனத்துடன் தானியங்களை முளைக்க வைக்கவேண்டும்.

ஆயுர்வேதம் கூறுவது என்ன?

முளைகட்டிய தானியங்கள் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியவை. இதனால் வாதம் மற்றும் கபத்தை உங்கள் உடலில் தூண்டக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதால், கவனம் தேவை.

சரிவிகித உணவு

முளைகட்டிய தானியங்களை நீங்கள் வெப்பமான மற்றும், சமைத்த உணவுகளுடன் பரிமாறினால் அதன் குளிர்ச்சியான தன்மை சமமாக பார்க்கப்படும். வேகவைக்கப்பட்ட, தானியங்களை உங்கள் சூப் மற்றும் சரிவிகித உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் உடல் நலனுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரும்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை