‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ நீங்கள் டீன் ஏஜ் குழந்தையின் பெற்றோரா? அவர்களிடம் இதை மட்டும் பேசுங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ நீங்கள் டீன் ஏஜ் குழந்தையின் பெற்றோரா? அவர்களிடம் இதை மட்டும் பேசுங்க!

‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ நீங்கள் டீன் ஏஜ் குழந்தையின் பெற்றோரா? அவர்களிடம் இதை மட்டும் பேசுங்க!

Priyadarshini R HT Tamil
Oct 25, 2024 06:00 AM IST

‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ நீங்கள் டீன் ஏஜ் குழந்தையின் பெற்றோரா? அவர்களிடம் இதை மட்டும் பேசுங்கள். இவைதான் அவர்களின் எதிர்காலத்தை வளமாக்குபவையாகும்.

‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ நீங்கள் டீன் ஏஜ் குழந்தையின் பெற்றோரா? அவர்களிடம் இதை மட்டும் பேசுங்க!
‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ நீங்கள் டீன் ஏஜ் குழந்தையின் பெற்றோரா? அவர்களிடம் இதை மட்டும் பேசுங்க!

நீ எப்படி இருக்கிறாயோ அதுதான் அழகு

நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் இதை கட்டாயம் பேசவேண்டும். ஏனெனில் இந்த வயதில் குழந்தைகளின் தோற்றம் குறித்து அவர்கள் பல குழப்பங்கள் மற்றும் தெளிவின்மைகளால் சிக்கித் தவிப்பார்கள். அவர்களிடம் எப்படி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது குறித்து பேசுங்கள். தோற்றத்தை கடந்து நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது குறித்து பேசுங்கள். அவர்களின் பலத்தில் அவர்களை கவனம் செலுத்த அறிவுறுத்துங்கள். அவர்களின் தனித்தன்மையை கொண்டாடுவதன் மூலம் அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுங்கள்.

நட்பு சக அழுத்தம் பற்றியதல்ல

சக அழுத்தம் மற்றும் மரியாதையான நண்பர்களை தேடிக்கொள்வதன் அவசியம் குறித்து பேசுங்கள். அவர்களுக்கு சவாலான நேரங்களில் இல்லை என்று கூறுவது எப்படி என்று கற்றுக்கொடுங்கள். அவர்களின் மதிப்பீடுகளுக்கு உண்மையாக இருப்பது குறித்து உணர்த்துங்கள்.

நீங்கள் சரியில்லை என்று உணர்ந்தாலும் சரிதான்

கோவம், பயம், பதற்றம் குறித்து பேசும் உரையாடல்களை இயல்பாக்குங்கள். அவர்களுக்கு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுங்கள். அவர்களை எழுது அறிவுறுத்துங்கள். உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுங்கள். இது அவர்களுக்கு உணர்வு ரீதியான அறிவுத்திறன் மற்றும் மீண்டெழும் திறனை அதிகரிக்கச் செய்யும்.

ஆன்லைனில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும்

அவர்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது குறித்து விளக்குங்கள். அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் குறித்து கற்றுக்கொடுங்கள். அது அவர்களின் நல்ல பெயருக்கு பாதுகாப்பைத்தரும். அவர்களுக்கு பொறுப்புடன் நடந்துகொள்வது மற்றும் கவனத்துடன் ஆன்லைனில் உலவுவது குறித்து ஊக்கப்படுத்துங்கள்.

அவர்களின் இலக்குகளை நோக்கிதான் அவர்கள் பயணம் செய்கிறார்கள்

கல்வியின் மதிப்பு குறித்து உரையாடுங்கள். அவர்கள் எட்டக்கூடிய இலக்குகளை அவர்களுக்கு வகுத்துக்கொடுங்கள். அவர்களுக்கு அவர்களின் இலக்குகளை நிர்ணயிக்க தேவையானவற்றை உருவாக்கிக்கொடுங்கள். அவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான திட்டத்தை உருவாக்கிக்கொடுங்கள். அவர்களுக்கு ஒழுக்கத்தின் பங்கு மற்றும் தொடர் வெற்றியின் பங்கு ஆகியவற்றை முன்னிலைப்படுத்திக் காட்டுங்கள்.

ஆரோக்கியமான உறவுகள் எல்லைகளை உடைக்காது

ஆரோக்கியமான உறவுகளின் தரம் குறித்து பேசுங்கள். நம்பிக்கை மற்றும் மரியாதை குறித்து உரையாடுங்கள். அவர்களுக்கு எல்லைகளை வகுப்பது எப்படி என்று கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு பரஸ்பர ஒப்புதலை எப்படி அங்கீகரிப்பது என்று தெரியப்படுத்துங்கள். அவர்களுக்கு ஆபத்தான உறவை கண்டுபிடிக்கவும், தவிர்க்கவும் கற்றுக்கொடுங்கள்.

உணர்வுகள் உந்தித் தள்ளும்போது என்னுடன பேசு

அவர்களின் உளவியல் ஆரோக்கியம் குறித்து உரையாடுங்கள். எவ்வித களங்கத்தையும் குறைக்க அது உதவும். அவர்களுக்கு தேவைப்படும்போது உதவி கோருவதற்கும், அதற்காக வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் தயாராக இருங்கள். இது அவர்களின் மனஆரோக்கியத்தை அதிகரிக்கும். அவர்களுக்கு தேவையான ஆதரவைத்தரும்.

உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்

அவர்களின ஆர்வங்கள் குறித்து உரையாடுங்கள். அவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான ஆதரவை அவர்களுக்கு கொடுங்கள். அவர்களை பல்வேறு வழிகளில் செல்ல அறிவுறுத்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும். அவர்களுக்கு வாழ்வில் சரியான தேர்வுகளைச் செய்யவும் உதவும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.