Top 10 Benefits of Sprouts : புரதம், ஆற்றல் என முளைக்கட்டிய தானியங்களை காலையில் உண்பதால் எத்தனை நன்மைகள் பாருங்கள்!-top 10 benefits of sprouts see how many benefits of eating sprouted grains in the morning like protein and energy - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Top 10 Benefits Of Sprouts : புரதம், ஆற்றல் என முளைக்கட்டிய தானியங்களை காலையில் உண்பதால் எத்தனை நன்மைகள் பாருங்கள்!

Top 10 Benefits of Sprouts : புரதம், ஆற்றல் என முளைக்கட்டிய தானியங்களை காலையில் உண்பதால் எத்தனை நன்மைகள் பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Sep 15, 2024 10:19 AM IST

Top 10 Benefits of Sprouts : புரதம், ஆற்றல் என முளைக்கட்டிய தானியங்களை காலையில் முதல் உணவாக எடுத்துக்கொள்வதால் உங்கள் உடலுக்கு எத்தனை நன்மைகள் கிடைக்கிறது என்று பாருங்கள்.

Top 10 Benefits of Sprouts : புரதம், ஆற்றல் என முளைக்கட்டிய தானியங்களை காலையில் உண்பதால் எத்தனை நன்மைகள் பாருங்கள்!
Top 10 Benefits of Sprouts : புரதம், ஆற்றல் என முளைக்கட்டிய தானியங்களை காலையில் உண்பதால் எத்தனை நன்மைகள் பாருங்கள்!

செரிமானம்

முளைகட்டிய தானியங்களில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை உங்கள் செரிமான மண்டலத்தின் ஆற்றலை அதிகரித்து எளிதாக செரிமானமடையச் செய்கின்றன. இதனால் மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்பட்டு உங்கள் குடல் இயக்கம் சீராக நடைபெறுகிறது. எனவே உங்கள் செரிமானம் மண்டலம் சிறப்பான இயங்க காலையில் முளைகட்டிய தானியங்களை உட்கொள்வது சிறந்தது.

ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதை அதிகரிக்கிறது

ஊறவைத்து முளைகட்டப்பட்ட தானியங்களில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஏனெனில், ஊறவைத்து முளைகட்டப்பட்ட தானியங்கள் எளிதாக செரித்துவிடும். இதனால், உங்கள் உடல் இரும்பு, கால்சியம் மற்றும் சிங்க் ஆகிய சத்துக்களை எளிதில் உறிஞ்சும் ஆற்றல் பெறும்.

அதிக புரதம்

முளைக்கட்டிய பாசிப்பருப்பில் தாவரப்புரதம் அதிகளவில் உள்ளது. இது உங்கள் உடலில் புரதத்தை அதிகரிக்கச் செய்கிறது. எனவே புரதம் வேண்டுவோர் இதை தினமும் காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். குறிப்பாக சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுவோரின் புரத தேவையை பூர்த்தி செய்கிறது. அதிக புரதச்சத்துக்கள் கொண்ட காலை உணவு தசைகளின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத்தருகிறது.

எடை குறைப்பு

முளைக்கட்டிய தானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது உங்களின் உணவு ஏக்கத்தை கட்டுப்படுத்துகிறது. உங்கள் உடல் எடையை முறையாக பராமரிக்க இவை சிறந்தது. இது உங்களை அதிகம் உட்கொள்வதில் இருந்து விலக்கிவைக்கிறது. நீங்கள் இதை காலையில் சாப்பிட்டால் பின்னர் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்பட்டு, நீங்கள் எதையாவது சாப்பிட்டு உடல் எடை அதிகரித்துக்கொள்வதை தடுக்கிறது.

நோய் எதிர்ப்பாற்றல்

முளைக்கட்டிய தானியங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை இது வலுப்படுத்துகிறது. எனவே இதை அதிகம் எடுத்துக்கொண்டால், அது உங்கள் உடலில் தொற்று மற்றும் நோய்கள் அடிக்கடி ஏற்படுவதை தடுக்கிறது. இது ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றல்தான் உங்களின் எதிர்ப்பு முறை. அதற்கு முளைக்கட்டிய தானியங்கள் உதவும்.

ரத்தச் சர்க்கரை அளவு பராமரிப்பு

முளைகட்டிய தானியங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது. இவை லோ கிளைசமிக் இண்டக்ஸ் உணவுகள் பட்டியலில் உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் ரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்று விரும்பினால், அவர்களுக்கு இது சிறந்த தேர்வு. ரத்த சர்க்கரையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதை தடுக்கும்.

சரும பளபளப்பு

முளைகட்டிய தானியங்களில் அதிகஅளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உங்கள் சருமம் பொலிவு பெற உதவும். சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைத்து, உங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். இவைதான் சரும பிரச்னைகளுக்கு காரணமாகும். முகப்பருக்கள் மற்றும் சுருக்கங்களைப் போக்கும்.

இதய ஆரோக்கியம்

முளை கட்டிய தானியங்கள் இதயத்துக்கு நல்லது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள், உங்கள் உடலில் எல்டிஎல் கொழுப்பை குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தை போக்குகிறது. எனவே காலையில் முதலில் நீங்கள் எடுக்கும் முளைகட்டிய தானியங்கள் உங்களின் இதயம் நன்றாக செயல்பட உதவுகிறது.

ஆற்றல் அளவை அதிகரிக்கிறது

ஊறவைத்து முளைகட்டப்பட்ட தானியங்கள், நீங்கள் காலையில் எழுந்தவுடன் சோம்பலாக உணர்ந்தால் சுறுசுறுப்பைத் தரும். அதில் மெக்னீசியம், இரும்பு மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் சத்துக்கள் உள்ளது. இவை உங்களுக்கு இயற்கை ஆற்றலைக் கொடுக்கிறது. இதனால் உங்களுக்கு ஆற்றல் கிடைப்பதுடன், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் உள்ளீர்கள்.

உடலை ஆல்கலைஸ் செய்கிறது

உங்கள் உடலில் ஆல்கலைனை சமப்படுத்த முளைகட்டிய தானியங்கள் உதவுகின்றன. இது உங்கள் உடல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆல்கலைன் டயட் வீக்கத்தை குறைத்து, எலும்பை வலுப்படுத்தி, ஆர்த்ரிட்டிஸ் போன்ற நிலைகளை சரிப்படுத்துகிறது. எனவே காலையில் முதல் உணவாக முளைகட்டிய தானியங்களை உட்கொண்டால், அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இந்த சமநிலையை எட்டவும் உதவுகிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.