தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இந்த 5 பழக்கம் உங்ககிட்ட இருக்கா? அச்சச்சோ, உடனே மாத்துங்க; இல்லாவிட்டால் மூளை காலி!

இந்த 5 பழக்கம் உங்ககிட்ட இருக்கா? அச்சச்சோ, உடனே மாத்துங்க; இல்லாவிட்டால் மூளை காலி!

Priyadarshini R HT Tamil

Dec 20, 2024, 11:51 AM IST

google News
உங்களின் மூளையை பாதிக்கும் கெட்ட பழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களின் மூளையை பாதிக்கும் கெட்ட பழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களின் மூளையை பாதிக்கும் கெட்ட பழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களிடம் உள்ள இந்த 10 பழக்கங்கள்தான் உங்களின் மூளை பாதிக்கும் செயல்கள். இதற்கு முன்னர் உள்ளதைப்படித்து உங்கள் மூளையை எப்படி கூராக்கவேண்டும் என்று தெரிந்துகொண்டு இருப்பீர்கள். ஆனால், இப்போது உங்கள் மூளையை பாதிக்கும் பழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொண்டு அதை காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். உங்களின் அன்றாட இந்த பழக்கங்கள்தான் உங்கள் மூளைக்கு எமன் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். மூளைதான் உடலுக்குத் தேவையான முக்கியமான உறுப்பு ஆகும். இது உங்கள் சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் உடல் இயக்கங்கள் என அனைத்தையும் பாதிக்கிறது. எனினும், சில அன்றாட பழக்கவழக்கங்கள், நீங்கள் கவனிக்காமல் விட்டதாகக் கூட இருக்கலாம். அவை நாளடைவில் உங்கள் மூளையின் திறனை பாதிக்கலாம். உங்கள் மூளையை பாதுகாக்க உங்களுக்கு விழிப்புணர்வு தேவை. எனவே நீங்கள் கவனமான இருந்து இந்த பழக்கங்களை கைவிடுத்து, உங்களின் மூளை சேதமடைவதை தடுக்கவேண்டும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலை உணவு சாப்பிடாவிட்டால்

நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலை உணவை சாப்பிடாவிட்டால், அது உங்கள் மூளைக்கு தேவையான குளுக்கோஸ் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் செய்துவிடும். இதனால் கவனகுறைவு மற்றும் எச்சரிக்கை உணர்வை இல்லாமல் செய்துவிடும். நீண்ட நேரம் உணவு இல்லாமல் இருந்தால் மூளை ஆரோக்கியம் பாதிக்கப்படும். இது உங்கள் உடலின் ஆற்றலைக் குறைக்கும். மேலும் உங்கள் மூளையின் செயல் திறனை பாதிக்கும். இது உங்களுக்கு மனஅழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கச்செய்யும். இது உங்களின் திறனை பாதிக்கும்.

பலவேலைகளை செய்வது

தொடரந்து நீங்கள் பல வேலைகளை செய்யும்போது, அது உங்கள் மூளையை அதிகம் தூண்டும். இதனால், உங்கள் கவனம் குறையும். மூளையின் திறன் பாதிக்கப்படும். ஆழ்ந்த சிந்தனைகளைத் தடுக்கும். இது உங்கள் மூளையின் திறன்களை பாதிக்கும். உங்களின் நினைவாற்றலை குறைக்கும். இதனால் உங்களால் ஒரு வேலையையும் உருப்படியாக முடிக்க முடியாது. உங்களால் தகவல்களை நீண்ட நேரமும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது.

அதிக இரைச்சலுடன் ஹெட்ஃபோன்களை பயன்படுத்துவது

அதிக இரைச்சலுடன் ஹெட் ஃபோன்களை பயன்படுத்துவது, உங்களின் காதுகளின் கேட்கும் திறனை பாதிக்கும். இதனால் உங்கள் மூளையில் எதிர்மாறையான பாதிப்புகள் ஏற்படும். கேட்கும் திறனை இழக்கும்போது, உங்களுக்கு நினைவாற்றல் இழப்பு ஏற்படுகிறது. இது காதில் கேட்கும் விஷயங்களை நேரடியாக மூளைக்கு கொண்டு சென்று மூளைக்கு அதிக பழுவைக் கொடுத்து, உங்களுக்கு சோர்வு, நினைவாற்றல் இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

போதிய உறக்கமின்மை, இரவு வெகு நேரம் விழித்திருப்பது

போதிய உறக்கம் இல்லாவிட்டால் அது உங்கள் மூளையின் திறனை பாதிக்கும், இது உங்களுக்கு நினைவாற்றல் இழப்பையும் ஏற்படுத்தும். நினைவுகளை மூளை ஒட்டுமொத்தமாக்கி தக்கவைக்கும் திறனை பாதிக்கும். போதிய உறக்கமின்மை கற்றலை பாதிக்கும், முடிவெடுக்கும் திறனைக் குறைக்கும் மற்றும் உணர்வுகளை முறைப்படுத்தும். நாட்கள் செல்லச்செல்ல, உறக்க குறைபாடு, அல்சைமர் போன்ற நினைவாற்றலை இழக்கும் நியூரோஜெனிரேடிவ் நோய்களான அல்சைமர் போன்றவற்றை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் மூளையின் முக்கிய பாகங்கள் சுருங்கும்.

ப்ளு வண்ண ஒளியை அதிக நேரம் பார்ப்பது (ஸ்கிரீன் வெளிச்சம்)

அதிகப்படியான ஸ்கிரீன் நேரம் என்பது உங்கள் மனநிலை தூண்டலை குறைக்கும். இது நீங்கள் அதிக நேரம் உட்கார்ந்துகொண்டே வாழும் வாழ்க்கையைத் தரும். இது நினைவாற்றலை பாதிக்கும், நீங்கள் கவனிக்கும் நேரத்தைக் குறைக்கும், ஒட்டுமொத்த நலனை பாதிக்கும். அதிகம் நீங்கள் திரையில் மூழ்கும்போது, அது உங்களின் உறக்க சுழற்சியையும் பாதிக்கிறது. இது உங்களின் மூளை ஆற்றலை மேலும் பாதித்து, உங்களின் மனஆரோக்கியத்தை குலைக்கிறது.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி