தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்துவிட்டதா? பதறவேண்டாம்! அதை குறைக்க உதவும் 8 உணவுகள் எது?

உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்துவிட்டதா? பதறவேண்டாம்! அதை குறைக்க உதவும் 8 உணவுகள் எது?

Priyadarshini R HT Tamil

Nov 04, 2024, 07:00 AM IST

google News
உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்துவிட்டால் அதை குறைக்க உதவும் இந்த 8 உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்துவிட்டால் அதை குறைக்க உதவும் இந்த 8 உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்துவிட்டால் அதை குறைக்க உதவும் இந்த 8 உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

யூரிக் அமிலம்

உங்கள் உடலில் அதிகம் யூரிக் அமிலம் இருந்தால், அது ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படும். நீங்கள் சாப்பிடும் உணவு மற்றும் பானங்களில் உள்ள பியூரின்கள் என்ற வேதிப்பொருட்களை உடைக்கும்போது உங்கள் உடலில் உருவாகும் கழிவுப்பொருள் ஆகும். பொரும்பாலான யூரிக் அமிலத்தை உங்கள் ரத்தமே கரைத்துவிடும். அதை உங்கள் சிறுநீரத்திற்கு கொண்டு சென்று நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது, வெளியேற்றிவிடும். ஆனால் உங்கள் உடலில் அதிகளவில் யூரிக் அமிலம் இருந்தால், அப்போது ஹைப்பர்யூரிசிமியா ஏற்படுகிறது. இந்த அதிகப்படியாக யூரிக் அமிலம் உங்கள் உடலில் ஒன்றுசேர்ந்து கற்களாக மாறி, உங்கள் மூட்டுகளில் ஆரித்ரிட்டிஸ் நோயை ஏற்படுத்துகிறது. உங்கள் சிறுநீரகத்தில் சிறுநீரக கற்களையும் ஏற்படுத்துகிறது. இந்நோயை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். இந்நோய் ஏற்பட்டால் நீங்கள் அதிகளவு தண்ணீர் குடிக்கவேண்டும். மருந்து மாத்திரைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். 5ல் ஒருவருக்கு இந்நோய் ஆபத்து உள்ளது.

அறிகுறிகள்

உங்கள் ஹைப்பர்சிமீயா உள்ளது எனில, அது உங்கள் வலிகளைக் கொடுத்து, உங்கள் உடல் முழுவதிலும் சேதத்தை ஏற்படுத்தும்.

உங்கள் எலும்புகள், மூட்டுகள், சவ்வுகளில் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும்.

சிறுநீரக நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ஃபேட்டி லிவர் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்கள் என அனைத்தை நோய்களையும் ஏற்படுத்தும்.

ஹைப்பர்யூரிசிமியா ஏற்பட்டால், பெரும்பாலும், அறிகுறிகள் தோன்றுவதில்லை. பெரும்பாலும், சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாதவரை பெரும்பாலானோருக்கு இது தெரிவதில்லை.

மூட்டுகளில் கடும் வலி, சிவத்தல், இறுக்கம், வீக்கம், கொழகொழப்பு, நெருப்பு போன்ற சூரி ஆகியவை ஏற்படும்.

சிறுநீரகத்தில் கற்கள் தோன்றினால் ஏற்படும் அறிகுறிகள்

பின்புறத்தில் வலி

வாந்தி

காய்ச்சல்

சிறுநீரில் ரத்தம்

சிறுநீர் கழிக்கும்போது வலி

சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமம்

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

சிறுநீரில் துர்நாற்றம்

உடலில் அதிக யூரிக் அமிலத்தை கொண்டுவரும் உணவுகள்

சிவப்பு இறைச்சி

ஈரல்

கால் உணவுகள்

ஃப்ரூக்டோஸ் கார்ன் சிரப் நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள்

மது

பாதிப்பு ஆபத்துக்கள்

உடல் பருமன்

ஆண் குழந்தைக்கு பிறக்கும்போதே ஏற்படும்

மதுவை வழக்கமாக எடுத்துக்கொள்ளும்போது

அதிக ப்யூரின்கள் நிறைந்த உணவு உட்கொள்ளும்போது

மரபணுக்கள்

ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்களுக்கு

ரத்த பரிசோதனை செய்யும்போது உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகம் உள்ளது என்று தெரிந்தால், நமது உணவில் நார்ச்சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்துக்கள் உள்ள உணவை அதிகளவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். புதிய செல்களை உருவாக்கக் கூடிய உணவுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

யூரிக் அமிலம் உடலில் அதிக அளவு உள்ளவர்கள் மாதுளை மற்றும் வெள்ளிரி பழத்தின் சாறை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகம் சுரந்தால், அது, சிறுநீரக கற்கள் உள்ளிட்ட கோளாறுகளை ஏற்படுத்தும். எனவே உங்கள் உடலில் சரியான அளவில் யூரிக் அமில அளவுகளை பராமரிக்க வேண்டும். இதற்கு நீங்கள் சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். அவை என்னவென்று பாருங்கள்.

செரி பழங்கள்

செரி பழங்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆந்தோசியானின்கள் உங்கள் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. செரிகளை நீங்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைகளில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இவையும் யூரிக் அமில அளவைக் குறைக்க வல்லது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் சிறுநீர் வழியாக யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகின்றன. உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்க சிட்ரஸ் பழங்களை உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஆப்பிள்

ஆப்பிள்களில் மாலிக் அமிலம் உள்ளது. இது உங்கள் உடலில் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்துக்கும், யூரிக் அமிலத்தை சமமாக பராமரிக்கவும் உதவுகிறது. எனவே நீங்கள் அடிக்கடி ஆப்பிள் எடுத்துக்கொள்வது, உங்கள் உடலில் யூரிக் அமிலம் உருவாவதை தடுக்கிறது.

செலரி

செலரி, உங்கள் உடலில் அமிலங்களை நடுநிலையாக்கும் தன்மை கொண்டது. இது உங்கள் உடலில் யூரிக் அமில அளவுகளை குறைக்கும் தன்மை கொண்டது. செலரியில் உள்ள குறைவான கலோரிகளால் நீங்கள் இதை சாலட்களில் சேர்த்துக்கொள்ளலாம்.

கிரீன் டீ

கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதை சிறுநீரகத்தின் இயக்கத்தை அதிகரித்து யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகின்றன. இயற்கை முறையில் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்துவதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது.

பெரிகள்

பெரிகளில் குறிப்பாக ஸ்ட்ராபெரிகள் மற்றும் ப்ளூபெரிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி உடலில் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள் வலியைப் போக்குகிறது.

நார்ச்சத்துக்கள்

நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த காய்கறிகளான கேரட், வெள்ளரி மற்றும் குடை மிளகாய் ஆகியவை உங்கள் உடலில் யூரிக் அமிலத்தின் அளவை முறையாகப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது செரிமானத்துக்கு உதவி, உங்கள் உடலில் உள்ள யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகின்றன. இந்த காய்கறிகள், ஆல்கலைன்களை ஏற்படுத்தி, உடலில் அமில அளவை முறைப்படுத்துகின்றன.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் உள்ள ஆரோக்கிய கொழுப்புகள் உங்கள் உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்காது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் இதயம் மற்றும் மூட்டு ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. இதனால் சமைக்க ஏற்ற உணவாக ஆலிவ் எண்ணெய் உள்ளது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி