தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இட்லிகள் மீந்துவிட்டதா? கவலைப்படவேண்டாம்! போண்டாக்கள் செய்து ஈவ்னிங் ஸ்னாக்ஸாக்கிவிடலாம்!

இட்லிகள் மீந்துவிட்டதா? கவலைப்படவேண்டாம்! போண்டாக்கள் செய்து ஈவ்னிங் ஸ்னாக்ஸாக்கிவிடலாம்!

Priyadarshini R HT Tamil

Nov 03, 2024, 12:31 PM IST

google News
இட்லிகள் மீந்துவிட்டதா? கவலைப்படவேண்டாம். போண்டாக்கள் செய்து ஈவ்னிங் ஸ்னாக்ஸாக்கிவிடலாம். மழைக்காலத்தில் ஸ்னாக்ஸ் கவலை இல்லை.
இட்லிகள் மீந்துவிட்டதா? கவலைப்படவேண்டாம். போண்டாக்கள் செய்து ஈவ்னிங் ஸ்னாக்ஸாக்கிவிடலாம். மழைக்காலத்தில் ஸ்னாக்ஸ் கவலை இல்லை.

இட்லிகள் மீந்துவிட்டதா? கவலைப்படவேண்டாம். போண்டாக்கள் செய்து ஈவ்னிங் ஸ்னாக்ஸாக்கிவிடலாம். மழைக்காலத்தில் ஸ்னாக்ஸ் கவலை இல்லை.

மழைக் காலத்தில் என்ன ஸ்னாக்ஸ் செய்யவேண்டும் என்று குழப்பம் உங்களுக்கு ஏற்படுகிறதா? அதே நேரத்தில் இட்லியும் மீந்துவிட்டதா? என்ன செய்யலாம்? மீந்த இட்லியை வைத்து போண்டா செய்யமுடியும். இதை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள். இதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. சிறிது கடலை மாவு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை என சேர்த்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் சேர்த்து பிசைந்து, உருட்டி, பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். இட்லி போண்டாக்கள் சுவையானதாகவும் இருக்கும். இவை சிறந்த மாலை நேர சிற்றுண்டிகளாகவும் இருக்கும். இதை நீங்கள் சாதத்திற்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். மீந்துபோன இட்லிகளையும் பயன்படுத்த ஒரு வழியாகவும் அமையும். நீங்கள் இந்த போண்டாக்களை சாப்பிட விரும்பினால், காலையில் இட்லிகள் அதிகமாக செய்துகொள்ளுங்கள்.

தேவையான பொருள்கள்

இட்லி – 4

கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு (தாராளமாக எடுத்துக்கொள்ளவேண்டும்)

செய்முறை

இட்லிகளை உதிர்த்து வைத்துக்கொள்ளவேண்டும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் உதிர்த்து வைத்துள்ள இட்லி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைமாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவேண்டும். இது மாவு பதத்துக்கு மாறிவரும். இதை சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி, அந்த உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். எண்ணெயிலே நன்றாக பிரட்விட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

நன்றாக வெந்ததை எடுத்து, எண்ணெய் வடிகட்டியில் சேர்த்து வடித்துக்கொள்ளவேண்டும். சுவையான இட்லி போண்டா தயார். இதை மழைக்காலத்தில் மாலை நேரத்தில் ஸ்னாக்ஸாக சாப்பிடலாம்.

இட்லி

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான காலை உணவு இட்லி. இலங்கையிலும் இது பிரபலம். அரிசி, உளுந்து சேர்த்து அரைத்த மாவை புளிக்கவைத்து இட்லி தயாரிக்கப்படுகிறது. வெள்ளை உளுந்து அல்லது கருப்பு உளுந்து இரண்டும் இட்லி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை உளுந்தை அப்படியேவும், கருப்பு உளுந்தென்றால் அதன் தோலை கொஞ்சம் நீக்கிவிட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். புளிக்க வைக்கும்போதும் அதில் உள்ள மாவுச்சத்துக்கள் மற்றும் கஞ்சிப்பதம் நீக்கப்படுகிறது. இதனால் உடல் இதை எளிதாக செரித்துவிடுகிறது. இட்லியில் ரவை, ஜவ்வரிசி, சம்ம ராவை, சேமியா ஆகியவற்றிலும் தயாரிக்கப்படுகிறது.

கன்னட மொழியில் வரலாற்று புத்தங்களில் இட்லி வெறும் கருப்பு உளுந்தை மட்டுமே வைத்து தயாரிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளது. கருப்பு உளுந்தை மேரில் ஊறவைத்து அரைத்து இட்லி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தயிரின் தண்ணீர் மற்றும் மசாலாக்கள் சேர்த்து இட்லி தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று நாம் சாப்பிடும் நவீன இட்லி நமக்கு இந்தோனேசியாவில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அங்குதான் புளிக்க வைத்து உணவு தயாரிக்கும் முறை பாராம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தோனேசியாவில் இந்து அரசர்கள் அமர்த்திய சமையல் கலைஞர்கள் இட்லியை கண்டுபிடித்திருக்கலாம். அங்கிருந்து இந்த உணவு இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தோனேசியாவில் கெட்லி என்ற உணவு இட்லிபோலேவே இருக்கும் என்று வரலாறு கூறுகிறது. மேலும் புளிக்கவைக்கும் செயல்பாடு இயற்கையில் நடக்கும் ஒன்று என்பதால் அது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இங்கு அனைத்து கலாச்சாரங்களிலும் புளிக்க வைக்கும் பழக்கம் உள்ளது.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி