இப்படியெல்லாம் நடக்குதா? வீட்டில் மூதேவி வசிப்பதற்கான அறிகுறிகள் தானாம்!
வீட்டில் துர் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் வீட்டில் மூதேவி வாசம் செய்வதாக பொருள்படும். மூதேவியின் வரவால் குடும்பத்தில் பல சச்சரவுகளும் ஏற்படுகின்றன.
ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களும் ஸ்ரீதேவியின் அம்சமான மகாலட்சுமியின் வரவை வேண்டியே பூஜை செய்வார். ஏனெனில் இந்து மத சாஸ்திரங்களின் படி மகாலட்சுமி வாசம் செய்யும் வீட்டில் லாபம் பெருகி குடும்பம் செழிக்கும் என்பது நம்பிக்கை. அதற்கு முற்றிலும் எதிராக மூதேவி எதிர்மறையான அலைகளை வீட்டிற்குள் கொண்டு வருகிறது. இவ்வாறு வீட்டில் மூதேவி இருப்பதை எளிதாக அறிந்த கொள்ள முடியும். வீட்டில் துர் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் வீட்டில் மூதேவி வாசம் செய்வதாக பொருள்படும். மூதேவியின் வரவால் குடும்பத்தில் பல சச்சரவுகளும் ஏற்படுகின்றன. இதற்கான அறிகுறிகளை காண்போம்.
துர் சம்பவங்கள்
ஒரு வீட்டில் அடிக்கடி துர் சம்பவங்கள் நடந்தால் அந்த வீட்டில் மூதேவி இருப்பதாக அர்த்தம் ஆகும். குறிப்பாக அமானுஷ்ய விஷயங்கள் அல்லது மர்ம நிகழ்வுகள் ஏதேனும் உங்களை அச்சுறுத்தினால் அது முழுக்க முழுக்க மூதேவி இருப்பதற்கான அறிகுறியாகும். வீட்டின் சமையலறையில் உள்ள உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறார். பாற்கடலில் மகாலட்சுமி இருப்பதால் உப்பிற்கு இந்த மகத்துவம் உண்டு. இந்த உப்பை அடிக்கடி நீங்கள் வீட்டில் கொட்டினால் அல்லது கைதவறி சிந்த நேர்ந்தால் அந்த இடத்தில் நிச்சயம் மூதேவி வாசம் செய்வதாக பொருள் ஆகும்.
வீட்டில் அடிக்கடி பால் திரிந்து போவது அல்லது பால் பாத்திரம் கருகி போவது போன்ற செயல்கள் நடந்தால் அந்த இடத்திலும் ஸ்ரீதேவி இல்லை, மூதேவி வாசம் செய்வதாக நாம் அறிந்து கொள்ள முடியும். எப்போதாவது இது போல நடந்தால் பிரச்சனை இல்லை, ஆனால் அடிக்கடி உங்களுக்கு இது நடந்தால் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து இருப்பதை நீங்கள் உணர முடியும்.
தண்ணீர்
வீட்டில் உள்ள குழாய்களில் தண்ணீர் சொட்டு சொட்டாக ஒழுகுவது மூதேவி வாசத்தை உங்களுக்கு தெரிவிக்கிறது. அதனை உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும். இது போன்றவற்றை சரிசெய்யாமல் இருப்பது அதிகப்படியான கடனிற்கு வழிவகுக்கும். மேலும் புது செருப்பு அறுந்து போனாலும் அது கெட்ட சகுணத்திற்கு அறிகுறியாகும். சமையல் எண்ணெய் மற்றும் குங்குமம் ஆகியவற்றை கீழே கொட்டவே கூடாது. அரிசி கழுவும் பொழுது அரிசியை வீணாக்கக் கூடாது. குறிப்பாக பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் அரிசியை கழுவும் பொழுது இது போல நடந்தால் இது மூதேவியின் செயலாகும்.
எப்போதும் அசதி, சோம்பல் தனமாக இருப்பது, அடிக்கடி கொட்டாவி வருவது போன்ற விஷயங்கள் உங்களிடம் காண நேர்ந்தால் உங்களிடமும் மூதேவி வாசம் செய்வதாக நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஸ்ரீதேவி இருக்கும் இடங்களில் சுறுசுறுப்பு மட்டுமே இருக்கும். எனவே இதிலிருந்து விடுபடுவதற்கு வாரம் ஒரு முறை வீட்டை நன்கு சுத்த செய்து சாம்பிராணி தூபத்துடன் கொஞ்சம் வெண்கடுகை சேர்த்து புகை போட்டு வாருங்கள், நல்ல பலன் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்