Balanced Meals: அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியமான வாழ்வு வேண்டுமா? ஊட்டச்சத்து நிறைந்த சமச்சீர் உணவு முறை இதோ!
Sep 27, 2024, 02:00 PM IST
Balanced Meals: அனைத்து வயதினருக்கும் அவர்களது வயதிற்கு ஏற்றவாறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு கிடைக்க வேண்டும். சீரான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதற்கு தேவையான உணவுகள் வரையறுக்கப்பட்டு உள்ளன.
அனைத்து வயதினருக்கும் அவர்களது வயதிற்கு ஏற்றவாறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு கிடைக்க வேண்டும். சீரான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதற்கு தேவையான உணவுகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு வயதினருக்கும் ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு சீரான உணவு அவசியம். அன்றாட உணவுகளில் தினை, ஓட்ஸ், தேன் மற்றும் மியூஸ்லி போன்ற பல்வகைப் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வரும் தனித்துவமான ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். மேலும் இவற்றை வைத்து சுவையான மற்றும் திருப்திகரமான உணவை சமைக்கவும் முடியும்.
சமச்சீர் வாழ்க்கைக்கான உணவு பொருட்கள்
இது குறித்து மேரிகோ லிமிடெட் நிறுவனத்தின் தலைமை ஆர் & டி அதிகாரி டாக்டர் ஷில்பா வோரா எச்டி லைஃப்ஸ்டைலுக்கு அளித்த பேட்டியில் பல அறிவுரைகளை தெரிவித்துள்ளார். அதன் படி, “ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அத்தியாவசிய வைட்டமின், தாதுக்கள், உடலுக்குத் தேவையான ஆரோக்கியம், உடலுக்கான ஆற்றல், செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியம் ஆகிய பலன்களை தருகின்றன. உதாரணமாக தினை போன்ற தானியங்கள் புரதம், நார்ச்சத்து, அத்தியாவசியமாக தேவைப்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றை வழங்கும் வளமான மூலப்பொருளாக உள்ளது. கரையக்கூடிய நார்ச்சத்துக்காக அறியப்படும் ஓட்ஸ், கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்கவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும், மேலும் அதன் தன்மையானது சமையல் செய்யும் போது அனைத்து உணவுகளிலும் எளிதாகச் சேர்க்க உதவுகிறது.
உணவிற்கு தேவையான இனிப்பை தேன் வழியாக பெறலாம். இது ஒரு இயற்கை இனிப்பு பொருளாகும். இதனை உங்கள் உணவில் சேர்க்கும் போது இனிப்பு சுவையை தரும் அதே வேளையில் சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது" எனத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கூறுகையில், “மறுபுறம் மியூஸ்லி என்ற உணவுப்பொருளில் முழு தானியங்கள், கொட்டைகள், விதைகள் மற்றும் பழங்களின் கலவையை உள்ளது. மேலும் மியூஸ்லியில் செய்யப்படும் உணவுகள் சுவையுடனும் இருக்கின்றன. ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு சுவையான மற்றும் திருப்திகரமான சமச்சீரான உணவிற்காக ஓட்ஸ், தேன் மற்றும் மியூஸ்லி ஆகியவற்றை உள்ளடக்கிய அத்தியாவசிய சத்தான உணவுகளை சாப்பிடுவதற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம்." எனவும் கூறினார்.
சீரான உணவிற்கான ரகசியம்
ஆத்மந்தன் ஆரோக்கிய மையத்தின் மருத்துவ இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மனோஜ் குடேரி கூறுகையில், ‘எல்லா வயதினருக்கும் ஏற்ற தட்டில் 40% பழங்கள் மற்றும் காய்கறிகள், 25% மெலிந்த புரதங்கள், 20% மாவுச்சத்துள்ள கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் 15% ஆரோக்கியமான கொழுப்புகள் என்ற கணக்கில் இருக்கக வேண்டும்’ என வலியுறுத்தினார்.மேலும் “ஒரு சீரான உணவு என்பது கட்டுப்பாட்டைப் பற்றியது மட்டுமல்ல. இது நீண்டகால நல்வாழ்வை ஊக்குவிக்கும் நிலையான, ஆரோக்கியமான உணவை உருவாக்குவது பற்றியது. அனைத்து வயதினருக்கும், தாவர அடிப்படையிலான உணவுகள், புரோபயாடிக்குகள் மற்றும் மஞ்சள் மற்றும் ஒமேகா -3 போன்ற அழற்சி எதிர்ப்பு பொருட்கள் சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். மேலும் உடல் பருமனைக் குறைக்கவும், செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. தாகம் எடுக்கும் போது தண்ணீருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறந்த ஆரோக்கியமான உடலுக்கு சர்க்கரை கலந்த குளிர் பானங்களைத் தவிர்க்கவும். இத்தகைய உணவு முறையை பல்வேறு, ஊட்டச்சத்து நிறைந்த விருப்பங்களுடன் உருவாக்குவது, உங்கள் உடலுக்கு உயிர் மற்றும் நீண்ட ஆயுளுக்கு எரிபொருளை வழங்குவதை உறுதி செய்கிறது' எனத் தெரிவித்தார்.
டாபிக்ஸ்