Deworming Home Remedy : குழந்தைகளின் குடற் புழுக்களை அடித்து விட்டும் வேப்பஞ்சாரம்! எத்தனை எளிதாக செய்யலாம் பாருங்க!
Sep 09, 2024, 12:46 PM IST
Deworming Home Remedy : குழந்தைகளின் குடற் புழுக்களை அடித்து விட்டும் வேப்பஞ்சாரம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு நாம் சில மருத்துவகுறிப்புக்களை, குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
குழந்தைகளின் குடலில் புழுக்கள் அதிகம் வந்துவிட்டால் அவர்களின் பசி குறைந்துவிடும். அவர்கள் எரிச்சல் உணர்வுடன் இருப்பார்கள். குடலில் சேர வேண்டிய சத்துக்கள் எதுவும் சேராது. சத்தான உணவுகளும் கொடுத்தும் பயனில்லை.
பச்சிளம் குழந்தைகள் உடலை வித்யாசமான முறையில் அசைத்தால் அவர்களுக்கு குடலில் புழுக்கள் உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். பற்களை கடித்தாலும் குடலில் புழுக்கள் உள்ளது என்று பொருள்.
குடல் புழுக்கள் குழந்தைகள் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளுள் ஒன்று. குழந்தைகள் வயிற்றில் புழு வந்தால் அவர்கள் உடல் தேறாது. எனவே அவர்களுக்கு வேப்பஞ்சாரம் செய்து கொடுக்கவேண்டும்.
இது அவர்களின் குடலில் உள்ள புழுக்களை அடித்து வெளியேற்றும். குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப இதை கொடுக்கவேண்டும்.
இரவு நேரத்தில்தான் குடற்புழுக்களால் அவதிப்படுவார்கள். இரவு நேரத்தில்தான் பூச்சிகள் முட்டையிடும் அதற்காக குழந்தையின் ஆசனவாய்ப்பகுதிக்கு வரும். அப்போது வேப்பங்கட்டகளை எரித்த சாம்பலை, மையான பவுடராக்கி அதை ஆசனவாயில் தூவிவிடவேண்டும்.
அதை தேய்த்துவிட்டால் ஆசன வாயில் புண்கள் வந்துவிடும் எனவே அப்பகுதியில் படும்படி வைத்துவிடவேண்டும் அல்லது வேப்ப எண்ணெயைக் கூட தடவிவிடலாம். இதை மூன்று நாட்கள் செய்தால், புழுக்களின் முட்டைகள் அழிக்கப்படும்.
அதனுடன் சேர்த்து இந்த வேப்பஞ்சாரத்தையும் கொடுக்கவேண்டும். இப்படி செய்யும்போது குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்கள் மொத்தமும் நீங்கி விடும்.
தேவையான பொருட்கள்
வேப்ப கொழுந்து – 20 இலைகள்
சீரகம் – ஒரு சிட்டிகை
ஓமம் – அரை சிட்டிகை
செய்முறை
வேப்பங் கொழுந்து, சீரகம், ஓமம் ஆகிய மூன்றையும் சின்ன உரலில் சேர்த்து இடித்து 100 மில்லி லிட்டர் தண்ணீருடன் கலந்து கொதிக்க விடவேண்டும். இது கால்வாசியாக குறைந்தவுடன் இதை வடிகட்டி, ஒரு வயது குழந்தைகளுக்கு 5 மில்லி லிட்டர் மாதம் இரண்டு முறை கொடுக்கவேண்டும் வயிற்றில் உள்ள புழுப்பூச்சிகள் வெளியேறிவிடும்.
பெரிய குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை 20 மில்லி லிட்டர் வரை அவர்களின் வயதுக்கு ஏற்ப அதிகரித்துக்கொண்டே செல்லலாம். இந்த வேப்பஞ்சாரம் குழந்தைகளின் வயிற்றில் உள்ள பூச்சி புழுக்களை வெளியேற்றிவிடும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்