தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Detox Drink : ஒரு வாரம் இதை மட்டும் செய்ங்க போதும்; கல்லீரல், குடல் இரண்டும் சுத்தமாகும், நச்சுக்கள் வெளியேறும்!

Detox Drink : ஒரு வாரம் இதை மட்டும் செய்ங்க போதும்; கல்லீரல், குடல் இரண்டும் சுத்தமாகும், நச்சுக்கள் வெளியேறும்!

Priyadarshini R HT Tamil

Jul 15, 2024, 11:00 AM IST

google News
Detox Drink : ஒரு வாரம் இதை மட்டும் செய்தால் போதும். உங்கள் கல்லீரல், குடல் இரண்டும் சுத்தமாகும், நச்சுக்கள் வெளியேறி உங்கள் உடல் ஆரோக்கியம் பெருகும்.
Detox Drink : ஒரு வாரம் இதை மட்டும் செய்தால் போதும். உங்கள் கல்லீரல், குடல் இரண்டும் சுத்தமாகும், நச்சுக்கள் வெளியேறி உங்கள் உடல் ஆரோக்கியம் பெருகும்.

Detox Drink : ஒரு வாரம் இதை மட்டும் செய்தால் போதும். உங்கள் கல்லீரல், குடல் இரண்டும் சுத்தமாகும், நச்சுக்கள் வெளியேறி உங்கள் உடல் ஆரோக்கியம் பெருகும்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

தேவையான பொருட்கள்

கிவி – 3

கிவி சூப்பர் ஃபுட் உணவுகளுள் ஒன்று. இதில் உள்ள உட்பொருட்கள், வீக்கத்தை அடித்து விரட்டுகிறது. ஃபேட்டி லிவர் எனப்படும் கொழுப்பு கல்லீரல் பிரச்னைகளை அடித்து விரட்டுகிறது. 

இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி சத்துக்களும், நோய் தொற்றுக்களையும், வீக்கத்தையும் விரட்டியடிக்கிறது.

கிவி சாப்பிடும்போது, வயிற்றில் உள்ள மலம் அனைத்தும் ஒன்றுசேர்க்கப்பட்டு, வெளியேற்றப்பட்டு மலச்சிக்கல் நீங்குகிறது. தேவையானபோது மலத்தை வெளியேறச் செய்கிறது. 

இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. குடலுக்கு தேவையான ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உருவாகவும் உதவுகின்றன.

கிரீன் ஆப்பிள் – 1

கிரீன் ஆப்பிளில் உள்ள பெக்டின் உணவை நன்றாக உடைத்து அதில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்ச உதவுகிறது. இதில் உள்ள நார்ச்த்துக்கள் உங்கள் உடலை சுத்தம் செய்ய உதவுகிறது. உடல் வளர்சிதையை அதிகரிக்கிறது. இதன் கழிவுநீக்க குணத்துக்காக ஆப்பிளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

யோகர்ட் – அரை கப்

உடல் பருமனை குறைப்பதற்கு யோகர்ட் உதவுகிறது. இன்சுலின் ஹார்மோன் சுரப்பையும் முறைப்படுத்த உதவுகிறது. நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் உணவாகவும் உள்ளது.

இஞ்சிப் பொடி – ஒரு ஸ்பூன்

இஞ்சிப் பொடி இல்லாவிட்டால், ஒரு இன்ச் இஞ்சியை சேர்த்துக்கொள்ளுங்கள்.

இஞ்சி வீக்கத்தை குறைத்து, செரிமானத்தை தூண்டுகிறது. செல்களின் சேதத்தை தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் வியர்வையை வெளியேற்ற உதவுகிறது. இது மலக்குடல், சிறு குடல், பெருங்குடல் மற்றும் கல்லீரல் என அனைத்து உறுப்புக்களையும் சுத்தம் செய்கிறது.

செய்முறை

கிவி, கிரீன் ஆப்பிள், யோகர்ட் மற்றும் தண்ணீருடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து அடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் இஞ்சிப்பொடியைத் தூவவேண்டும். இது ஸ்மூத்தி பதத்தில் இருக்கவேண்டும். 

இஞ்சிப்பொடி இல்லாதபட்சத்தில், இஞ்சியை தோல் நீக்கி துருவி அடிப்பதற்கு முன்னரே மிக்ஸியில் சேர்த்து, ஸ்மூத்தியுடனே அடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

இந்த பானத்தை தினமும் காலை மற்றும மாலை இருவேளையும் ஒரு வாரத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும். இதைச் செய்யும்போது உங்கள் குடல் மற்றும் கல்லீரலில் உள்ள ஒட்டுமொத்த கழிவுகளும் அடித்து வெளியேற்றப்படும். 

மேலும் இந்த பானம் உங்கள் இதய ஆரோக்கித்தையும் மேம்படுத்தும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி