Onion Chutney : ‘அடுப்பே வேண்டாம்.. அசத்தலான ‘பச்சை சட்னி’ செய்யலாம்.. செலவும் கம்மி.. ருசி எங்கேயோ..’
Sep 02, 2024, 11:39 AM IST
Onion Chutney : கிராமங்களில் ஒரு காலத்தில், ஒரே தேர்வாக இருந்த இந்த சட்னியை இன்று ஓரிரு ஓட்டல்களில் நீங்கள் பார்க்கலாம். ருசி என்பது ஒருபுறம், பட்ஜெட் ரீதியாகவும் உதவும் என்பது முக்கிய காரணம். இப்படிப்பட்ட பச்சை சட்னியை நீங்களும் செய்து, அதன் ரசிகராக மாறுங்கள்.
Onion Chutney : இட்லி, தோசை ப்ரியர் என்றால், உங்களுக்கு இந்த சட்னியை தெரிந்திருக்க வேண்டும். மேஹியை விட வேகமாக தயாரிக்க முடியும் இந்த சட்னியை, ருசியிலும், தோற்றத்திலும் பார்க்க அவ்வளவு அருமையாக இருக்கும் இந்த சட்னி தான், ஒரு காலத்தில் கிராமங்களின் ஃபேவரைட் சட்னியாகும். இதோ இந்த பச்சை சட்னியை தயாரிக்கத் தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கம்:
தேவையான பொருட்கள் என்ன?
- கருவேப்பிலை
- காய்ந்த மிளகாய்
- ஒரு பூண்டு
- 100 கிராம் சின்ன வெங்காயம்
- தக்காளி 2
- பெருங்காயத் தூள்
- தாளிக்க சிறிது எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
எளிய செய்முறை விளக்கம் இதோ
மிக்ஸி ஜாரில் சிறிது கருவேப்பிலை, 5 காய்ந்த மிளகாய், ஒரு பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும். கருவேப்பிலை நிறைய சேர்த்தால் கசப்பு வந்துவிடும். கவனமாக இருக்கவும். இப்போது மிக்ஸியில் நன்றாக அவற்றை அரைக்கவும். பேஸ்ட் போல வந்ததும், மிளகாய் உள்ளிட்டவை சரியாக அரைந்துள்ளதா என்பதை ஒருமுறை பார்த்துக் கொள்ளவும். அதன் பின் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து அரைக்கவும். இப்போது பார்க்க கலராக அழகாக இருக்கும்.
இப்போது அரைத்து வைத்த கலவையை தாளிக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, சிறிது கடுகு போடவும். கால் டீஸ்பீன் பெருங்காயத்தை வாசனைக்காக போடவும். சிறிது நேரம் கழித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியை அதனுள் போடவும். நன்றாக கலந்துவிடவும். தக்காளி, வெங்காயத்தின் பச்சை வாடை போகும் அளவுக்கு பிரட்டிவிடும். தண்ணீர் வற்றி, பச்சை வாடை போயிருக்கும்.
இப்போது அடுப்பை அணைத்துவிட்டு, இறக்கிவிடவும். இப்போது கமகமனு வாசனை நிறைந்த ருசியான பச்சை சட்னி ரெடியாக இருக்கும். சிலர் தாளிப்பு இல்லாமல், நேரடியாகவும் சட்னியை பயன்படுத்துவார்கள். அதுவும் ருசியானதாகவே இருக்கும். சிலருக்கு பச்சை வாடை பிடிக்காது. அவர்கள் மட்டும் தாளிப்பு செய்து அதன் பின் பயன்படுத்தலாம்.
எப்படி செய்தாலும், இந்த பச்சை சட்னி, திகட்டாமல் சாப்பிட ருசியாக இருக்கும். இட்லி, தோசைக்கு இந்த சட்னியை பயன்படுத்தினால், வேறு எந்த சட்னியையும் விரும்பி சாப்பிடமாட்டார்கள். அந்த அளவிற்கு அதன் ருசியும், தோற்றமும் சிறப்பாக இருக்கும்.
மேலும் சுவையான சமையல் குறிப்புகள், பாரம்பரிய உணவுகள் செய்முறை குறித்து அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். எங்களின் சமூக வலைதள பக்கங்கள் மூலமும் எங்களை பின் தொடரலாம்.
டாபிக்ஸ்