Karuveppilai kuzhambu: தக்காளி இல்லாமல் சுவையான கருவேப்பிலை குழம்பு எப்படி செய்வது!
கருவேப்பிலை குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கருவேப்பிலை - 2 கப்
எண்ணெய் - 2 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிது
செய்முறை
ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கி கொள்ளவும். அது ஆறிய பிறகு மிக்சியில் போட்டு பொடியாக எடுத்து கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், வெந்தயம் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
பிறகு வெங்காயம், பூண்டு போட்டு நன்கு வதக்கவும். வதங்கிய பிறகு உப்பு சேர்த்து கலக்கவும்.
அறைத்து வைத்து இருக்கும் கருவேப்பிலை பொடியை சேர்த்து நன்கு கலக்கவும். பச்சை வாசனை போனவுடன் கலந்து வைத்து இருக்கும் புளி தண்ணீரை ஊற்றவும்.
10 நிமிடம் நன்கு கொதித்தவுடன், பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
சூடான சாதத்தில் இந்த கருவேப்பிலை குழும்பு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்