Cooking Tips : பஞ்சு போன்ற மிருதுவான ஆப்பம் சாப்பிட வேண்டுமா? இதோ அதன் பக்குவத்தை தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cooking Tips : பஞ்சு போன்ற மிருதுவான ஆப்பம் சாப்பிட வேண்டுமா? இதோ அதன் பக்குவத்தை தெரிந்துகொள்ளுங்கள்!

Cooking Tips : பஞ்சு போன்ற மிருதுவான ஆப்பம் சாப்பிட வேண்டுமா? இதோ அதன் பக்குவத்தை தெரிந்துகொள்ளுங்கள்!

Priyadarshini R HT Tamil
Aug 27, 2024 11:12 AM IST

Cooking Tips : பஞ்சு போன்ற மிருதுவான ஆப்பம் சாப்பிட வேண்டுமா? இதோ அதன் பக்குவத்தை தெரிந்துகொண்டு, இதுபோன்ற ஆப்பம் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

Cooking Tips : பஞ்சு போன்ற மிருதுவான ஆப்பம் சாப்பிட வேண்டுமா? இதோ அதன் பக்குவத்தை தெரிந்துகொள்ளுங்கள்!
Cooking Tips : பஞ்சு போன்ற மிருதுவான ஆப்பம் சாப்பிட வேண்டுமா? இதோ அதன் பக்குவத்தை தெரிந்துகொள்ளுங்கள்!

ஆப்பமும் தோசையைப்போன்றதொரு உணவுதான். ஆரம்ப காலத்தில் தோசை வெறும் அரிசியை மட்டும் வைத்து வார்க்கப்பட்டது. பின்னர்தான் அதனுடன் கருப்பு உளுந்து கலந்து செய்யப்பட்டது. ஆனால் ஆப்பத்தின் ரெசிபி மட்டும் பல ஆண்டுகள் மாறாமல் இருந்தது. ஆப்பத்தின் செய்முறை ஸ்ரீரங்கம் கோயிலின் கல்வெட்டில் காணக்கிடைக்கிறது. அந்தக்கோயிலின் தெய்வத்துக்கு ஆப்பம் படைக்கப்பட்டது. ஆப்பத்தை புளிக்கவைக்க பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. இலங்கையில் ஆப்பத்துக்கு பெரிய வரலாறே உள்ளது. ஆப்பத்தில் பல வகையும் உள்ளது.

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – ஒரு கப்

பச்சரிசி – அரை கப்

வெள்ளை அவல் – அரை கப்

(நைஸ் அவல் மற்றும் கெட்டி அவல் என எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)

உளுந்து – கால் கப்

வெந்தயம் – ஒரு ஸ்பூன்

தேங்காய் துருவல் – அரை கப் (மாவு அரைக்கும்போது சேர்க்கவேண்டும்)

செய்முறை

இட்லி அரிசி, பச்சரிசி, வெள்ளை அவல், உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து நன்றாக 4 முதல் 5 மணி நேரங்கள் ஊறவைத்துவிடவேண்டும். பின்னர் அதை எடுத்து கழுவி வைத்துக்கொள்ளவேண்டும்.

தேங்காயின் ஓட்டுடன் சேர்ந்த பகுதியில்லாமல் வெள்ளைப் பகுதியை மட்டும் பூக்களாக துருவிக்கொள்ளவேண்டும்.

முதலில் கிரைண்டர் அல்லது மிக்ஸி எதிர் மாவு அரைக்கிறீர்களோ அதில் தேங்காயை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதனுடன் சேர்த்து ஊறவைத்த அரிசி மற்றும் உளுந்தை சேர்த்து அரைக்க வேண்டும்.

உங்களிடம் அவல் இல்லையென்றால் ஒரு கப் வடித்த சாதத்தை அரைக்கும்போது சேர்த்துக்கொள்ளலாம். வெந்தயம் கட்டாயம் சேர்க்கவேண்டும்.

மாவை நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். இட்லிக்கு அரைப்பது போல் கொரகொரப்பாக அரைக்கக்கூடாது.

மாவை வழித்து அதில் தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாகவே கரைத்த வைத்துவிடவேண்டும்.

அதை மூடிவைத்து 8 மணி நேரம் நன்றாக புளிக்க வைக்கவேண்டும். ஆப்பத்துக்கு நன்றாக புளிக்கவைப்பது மிகவும் அவசியம். எனவே அது கட்டாயம் தேவை.

சரியான பக்குவத்தில் நீங்கள் மாவு அரைத்திருந்தீர்கள் என்றால், அது புளிக்கவைக்கும்போது நன்றாகவே பொங்கிவரும்.

அதை மிருதுவாக கலந்துவிடவேண்டும். மாவை நாம் தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாகத்தான் கரைத்து வைத்திருந்தோம். எனவே அதற்கு இப்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளவேண்டும்.

மாவு மிகவும் கெட்டியாக இருக்கக்கூடாது. ஆப்ப சட்டியில் ஊற்றி நாம் அதை அனைத்து புறங்களிலும் சுழற்றிவிடவேண்டும். அப்போதுதான் ஆப்பம் நன்றாக இருக்கும்.

ஆப்ப சட்டியில் மாவை ஊற்றி நன்றாக சுற்றி விடவேண்டும். பின்னர் மூடிவைத்து வெந்தபின் எடுத்தால் சூப்பர் மிருதுவான பஞ்சு போன்ற ஆப்பம் தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள கடலைக்கறி, பட்டாணி கறி அல்லது தேங்காய்ப்பால் செய்து கொள்ளலாம். நீங்கள் நான்வெஜ் பிரியர் என்றால், மட்டன், சிக்கன் குழம்புகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.