மிளகாயில் தேநீரா? காரமாக இருக்குமே என்ற கவலை வேண்டாம்; நன்மைகள் தெரிந்தால் தித்திக்கும்! 5 அற்புத குணங்களை பாருங்கள்!
Dec 15, 2024, 07:00 AM IST
மிளகாய் தேநீரை பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பாருங்கள்.
மிளகாயில் தயாரிக்கப்படும் தேநீரில் எண்ணற்ற நற்குணங்கள் உள்ளது. இந்த டீ உங்கள் உடலின் வளர்சிதையை மேம்படுத்த உதவுகிறது. இது வீக்கத்தைக் குறைக்கிறது. உங்களுக்கு டீ பிடிக்கும் என்றாலோ நீங்கள் புதிய மூலிகை தேநீரை சாப்பிட விரும்பும் நபர் என்றாலோ இந்த தேநீரை கட்டாயம் பருகுங்கள். தென்கிழக்கு ஆசியாவில் நாம் பயன்படுத்தும் இந்த தேநீர் என்பது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. மிளகாய் தேநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதில் உள்ள கேப்சைசின் என்பதுதான் மிளகாயின் சூடான தன்மைக்கு காரணம். இது உங்கள் உடல் வளர்சிதைக்கு உதவும். உங்களின் வலியைப் போக்கும். உங்களின் மனநிலையை மாற்றும். இந்த தேநீர் உங்களுக்கு தரும் இதம், நீங்கள் காரம் விரும்பி என்றால் மிகவும் பிடிக்கச் செய்யும். உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டுக்கும் ஊட்டமளிக்கும்.
மிளகாய் டீ
கட்டாஞ்சாயா அல்லது கிரீன் டீ இரண்டிலும் பச்சை மிளகாய் அல்லது வரமிளகாய் சேர்த்து தயாரிக்கப்படுவது மிளகாய் டீ. இதில் பட்டை, ஏலக்காய், இஞ்சி ஆகியவையும் சேர்க்கப்படுகிறது. இதையெல்லாம் சேர்த்து செய்யும்போது ஒரு சூப்பர் சுவையான மிளகாய் டீ கிடைக்கிறது. இதன் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
வலிகளைக் குறைக்கிறது
கேப்சைசின் என்ற உட்பொருள் தான் மிளகாய்க்கு அதன் கடும் சூட்டைத் தருகிறது. இதில் வலிகளைப் போக்கும் குணங்கள் உள்ளது. இது ஆய்வில் கிடைக்கும் தகவல். கேப்சைசின் நிறைந்த மிளகாயை நீங்கள் சாப்பிடும்போது, அது உங்களுக்கு வலியை ஏற்படுத்தும் காரணிகளை குறைக்கிறது. இதனால் உங்களின் வலி உணரும் திறன் குறைவாகிறது. ஆர்த்தரிட்டிஸ் உள்ளிட்ட நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது தசைகளில் அசவுகர்யத்தைப் போக்குகிறது. மூளைக்குச் செல்லும் வலி சிக்னல்களில் கேப்சைசின் இடையூறு ஏற்படுத்தி, குறிப்பிட்ட அளவு நிவாரணத்தைக் கொடுக்கிறது. இதனால் உங்களுக்கு வலியற்ற நல்ல வாழ்க்கை கிடைக்கிறது.
செரிமான ஆரோக்கியம்
இந்த பானம் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. கேப்சாய்சின், செரிமான எண்சைம்களை தூண்டுகிறது. இதனால் உங்களுக்கு வாயில் உமிழ்நீர் நன்றாக சுரந்து, உங்களின் செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகிறது. இதனால் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை நல்ல முறையில் உறிஞ்சுகிறது. இதையும் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. வயிறு உப்புசம், செரிமானமின்மை மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றையும் போக்குகிறது. உங்கள் செரிமான மண்டலத்துக்கும் இதமளிக்கிறது. வீக்கத்தைக் குறைத்து, ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. கார உணவுகள் உங்கள் வயிறுகளில் தொந்தரவை ஏற்படுத்தும். ஆனால் மிதமான அளவு இந்த காரமான மிளகாய் டீயை பருகும்போது அது உங்களுக்கு சிறந்த ஆரோக்கியத்தை தருகிறது.
உடல் வளர்சிதையை அதிகரிக்கிறது
கேப்சாய்சின் என்ற மிளகாயில் உள்ள கார உட்பொருள், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்துகிறது. உடல் தெர்மோஜெனிசிஸ் என்ற உடலை வெப்பமாக்கும் செயலை ஊக்குவித்து, நீங்கள் ஓய்வெடுக்கும்போதும் கலோரிக்களை எரிக்க இந்த தேநீர் உதவுகிறது. இதையும் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இது உங்கள் உடல் எடையை முறையாகப் பராமரிக்க உதவுகிறது. இதனால் உங்களுக்கு ஆரோக்கியமான உடல் எடை கிடைக்கிறது. உடல் எடையைக் குறைக்க கேப்சாசின் உதவுகிறது. இதை நீங்கள் சரிவிகித உணவுடன் எடுத்துக்கொள்ளும்போது நல்லது.
வீக்கத்தைக் குறைக்கிறது
கேப்சாய்சின் என்ற உட்பொருள்தான் மிளகாய்க்கு அதன் சூடான தன்மையைக் கொடுக்கிறது. இது வீக்கத்துக்கு எதிரான குணம் கொண்ட ஒரு பொருள் ஆகும். இது உங்கள் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும், சைட்டோகைன்கள் மற்றும் ப்ராஸ்டோகிளாண்டிகள் சுரக்க உதவுகிறது. இது உங்களின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது உங்களுக்கு ஆர்த்ரிட்டிஸ், குடல் வீக்கம், சரும வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் உடலில் வலி குறைகிறது. வீக்கம் ஏற்படாமல் தடுத்து, திசுக்கள் மீளூம் திறனை அதிகரிக்கிறது.
மனநிலையை மேம்படுத்துகிறது
உங்கள் உடலுக்கு இதமளிப்பது மட்டுமல்ல இந்த தேநீர் உங்கள் உள்புற ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. மிளகாயில் உள்ள கேப்சாய்சின், உங்கள் உடலில் எண்டோர்ஃபின்கள் அதிகம் வெளியாக உதவுகிறது. இது உடலின் இயற்கை வலிகளைப் போக்குகிறது. உங்கள் மனநிலையை மாற்றுகிறது. இந்த நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் உங்களுக்கு மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பயம் மற்றும் பதற்றத்தைப் போக்குகிறது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலனை மேம்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு அமைதி மற்றும் நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது. நீங்கள் முன்னேறிச் செல்ல இது உதவுகிறது.
டாபிக்ஸ்