உங்கள் செரிமான மண்டலம் நன்றாக இயங்குகினால், உங்கள் உடல் ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவை நன்றாக உறிஞ்சும்.
உங்களால் இலகுவாக மற்றும் எளிதாக தினமும் மலம் கழிக்க முடிகிறது என்றால், அதுவும் தினமும் இருமுறை முடிகிறது என்றால், உங்களின் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படுகிறது என்று பொருள்.
உங்கள் செரிமான மண்டலம் சிறப்பான முறையில் செயல்பட்டால் உங்கள் சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
ஒரு சிறப்பான செரிமான மண்டலம் உங்களை பல்வேறு உணவுகளையும் சாப்பிடுவதற்கு அனுமதிக்கிறது. எவ்வித அசவுகர்யங்களும் இல்லாமல் உங்களால் எந்த உணவையும் உட்கொள்ள முடிகிறது.
உங்களுக்கு செரிமானம் சிறப்பாக இருந்தால், அதனால் உங்களில் நியூரோட்ரான்ஸ்மிட்டர்களின் உற்பத்தி சிறப்பாக இருக்கும்.
உங்களின் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருந்தால், உங்களுக்கு சர்க்கரை சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் தோன்றாது.
உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் 70 சதவீதம் உங்கள் குடலில்தான் உள்ளது. ஆரோக்கியமான செரிமான மண்டலம் உங்களின் இயற்கை எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.