முள்ளங்கி உங்கள் உடலுக்கு தரும் நன்மைகளை பாருங்கள்! செரிமானம் முதல் புற்றுநோய் தடுப்பு வரை நீள்கிறது!
Oct 05, 2024, 12:58 PM IST
முள்ளங்கி உங்கள் உடலுக்கு தரும் நன்மைகளை பாருங்கள். செரிமானம் முதல் புற்றுநோய் தடுப்பு வரை என இந்தப் பட்டியல் நீள்கிறது
முள்ளங்கி நீர்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த காய். இதனால் தான் இதை இன்று பலரது வீடுகளில் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் சாம்பாரில் சேர்த்து சாப்பிடவேண்டும் என்று நினைக்கிறார்கள். இது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குவதுடன், சிறுநீரகக் கோளாறுகளையும் போக்குகிறது. சிறுநீர் பாதை தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. அதுமட்டுமன்றி உடலுக்கு எண்ணற்ற நன்மைகளையும் முள்ளங்கி தருகிறது. முள்ளங்கியை சாம்பாரில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது முள்ளங்கியை துருவி பொரியல் செய்து சாப்பிடலாம் அல்லது முள்ளங்கியின் மணம் பிடிக்காதவர்களுக்கு அதை சட்னியாக அரைத்து சாப்பிடலாம். இப்படி முள்ளங்கியை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள எண்ணற்ற வழிகள் உள்ளது. இந்த முள்ளங்கியில் உள்ள நன்மைகளை நீங்கள் தெரிந்துகொண்டால், கட்டாயம் வாரத்தில் ஒரு நாள் உணவில் சேர்த்துக்கொள்வீர்கள். முள்ளங்கியில் எண்ணற்ற வகைகள் உள்ளது. அனைத்தும் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுப்பவைதான். முள்ளங்கியில் உள்ள நன்மைகளைப் பார்க்கலாம்.
புற்றுநோயைத் தடுக்கிறது
முள்ளங்கியில் புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் தன்மை உள்ளது. இது கட்டிகள் வளர்வதையும் தடுக்கிறது. இதன் மொறுமொறுப்பான தன்மை உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. இது உங்கள் உடலை குடல், சிறுநீரகம், பெருங்குடல், வயிறு மற்றும் வாய் புற்றுநோய்களில் இருந்து காக்கிறது.
உடல் எடை குறைப்பு
முள்ளங்கி உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஒரு முள்ளங்கியில் ஒரு கலோரி தான் உள்ளது. கொழுப்பு, கார்போஹைட்ரேட் இல்லை. இதில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது.
பூஞ்ஜைகளைப் போக்குகிறது
முள்ளங்கி இயற்கை பூஞ்ஜைகளுக்கு எதிரான ஒன்றாக உள்ளது. முள்ளங்கிச்சாறில் பூஞ்ஜைகளை அழிக்கும் எண்சைம்கள் உள்ளது. இந்த பூஞ்ஜைகள் மனிதர்களுக்கு ஈஸ்ட் தொற்றுகள் ஏற்பட காரணமாகிறது. எனவே முள்ளங்கி சாலட் செய்து சாப்பிடும்போது இந்த பூஞ்ஜைகள் உங்கள் உடலில் இருந்து அடித்து விரட்டப்படுகின்றன.
சரும பளபளப்பு
முள்ளங்கியில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், இதில் உள்ள சிங்க் மற்றும் பாஸ்பரஸ் உங்கள் உடலில் வறண்ட சருமம், முகப்பருக்கள் மற்றும் ரேஷ்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்துக்கள், உங்கள் சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது. இதை அரைத்து முகத்துக் மாஸ்க் போடும்போது உங்கள் முகம் பொலிவடைகிறது.
நீர்ச்சத்து
நீர்ச்சத்துக்கள் உங்கள் சருமத்துக்கு மிகவும் தேவையானது. முள்ளங்கியில் உங்கள் முழு உடலுக்கும் தேவையான நீர்ச்சத்து உள்ளது. ஏனெனில் இது நீர்ச்சத்துக்கள் நிறைந்த காயாகும். நல்ல நீர்ச்சத்து உங்கள் உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. இது உங்கள் மனதை மாற்றுகிறது. இது உங்கள் உடலில் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கிறது. உங்களுக்கு சிறுநீரகத் தொற்றுகள் இருந்தால் அதை குணப்படுத்துகிறது.
ஆரோக்கியமான இதயம்
முள்ளங்கியின் இயற்கை ஆந்தோசியானின்கள் இல்லை. இந்த ஃப்ளேவனாய்ட்கள் சிவப்பு முள்ளங்கிக்கு அதன் சிவப்பு நிறத்தை மட்டும் கொடுக்கவில்லை. இது உங்கள் இதயம் ரத்தத்தை நன்றாக பம்ப் செய்யவும் உதவுகிறது.
செரிமான ஆரோக்கியம்
முள்ளங்கியில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் உங்கள் செரிமான மண்டவத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. ஒரு கப் முள்ளங்கியில் ஒரு கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது.
ரத்த அழுத்தம்
முள்ளங்கியில் பொட்டாசியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. கொலாஜென் உற்பத்திக்கு உதவுகிறது. இது ரத்த நாளங்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. முள்ளங்கியில் ரத்த செல்களை சேதத்தைக் கட்டுப்படுத்தும் குணங்கள் உண்டு. ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் தன்மையும் உள்ளது.
உடலில் உள்ள கழிவுகளைப் போக்குகிறது
முள்ளங்கி கல்லீரலுக்கும், வயிற்றுக்கும் மிகவும் நல்லது. இவ்விரு உறுப்புகளில் உள்ள கழிவுகளை நீக்கும் ஒன்றாக முள்ளங்கி உள்ளது. முள்ளங்கி, ரத்த சிவப்பணுக்கள் சிதைவதை குறைக்கிறது. இதனால் மஞ்சள் காமாலையின்போது உங்கள் உடல் காக்கப்படுகிறது. இது உங்கள் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது.
நோய் எதிர்ப்புத்திறன்
ஒரு கப் முள்ளங்கியில் உங்கள் அன்றாட தேவையில் 15 சதலீதம் வைட்டமின் சி சத்தக்கள் உள்ளது. இது உங்கள் நோய் எதிர்ப்பு மண்லத்தை மட்டும் வலுப்படுத்தவில்லை. உங்கள் உடலின் வளர்சிதையையும் முறைப்படுத்த உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள கொழுப்புகளை ஆற்றலாக மாற்ற முள்ளங்கி உதவுகிறது.
டாபிக்ஸ்