Benefits of Red banana : கண் பார்வையை கூராக்கும்! மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும்! செவ்வாழையில் இத்தனை நன்மைகளா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Red Banana : கண் பார்வையை கூராக்கும்! மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும்! செவ்வாழையில் இத்தனை நன்மைகளா?

Benefits of Red banana : கண் பார்வையை கூராக்கும்! மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும்! செவ்வாழையில் இத்தனை நன்மைகளா?

Priyadarshini R HT Tamil
Apr 16, 2024 10:18 AM IST

Benefits of Red banana : செவ்வாழையில் உள்ள வைட்டமின் பி6, உடல் வளர்சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்துகிறது. இதில் உள்ள பொட்டாசியம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிறு வலியை குறைக்கிறது.

Benefits of Red banana : கண் பார்வையை கூராக்கும்! மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும்! செவ்வாழையில் இத்தனை நன்மைகளா?
Benefits of Red banana : கண் பார்வையை கூராக்கும்! மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும்! செவ்வாழையில் இத்தனை நன்மைகளா?

நீரிழிவு நோய் கட்டுப்பாடு

உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரித்துவிட்டால், ஏற்படும் ஒரு வளர்சிதை கோளாறு நீரிழிவு நோயாகும். நீரிழிவு நோய்க்கு தரப்படும் பல்வேறு மாத்திரைகள், கார்போஹைட்ரேட்களை சர்க்கரையாக மாற்றுவதால் ஏற்படும், ரத்தத்தில் அதிகரிக்கும் குளுக்கோஸை தடுக்கிறது. 

செவ்வாழை டைப் 2 வகை நீரிழிவு நோயை குணப்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது சர்க்கரையை குறைவாக உடலில் சேர்க்கும் உணவுப்பட்டியலில் உள்ளது. இதனால் செவ்வாழை நீரிழிவு நோயை காக்கிறது.

மார்பக புற்றுநோய்

உலகளவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களுள் முக்கியமானது மார்பக புற்றுநோய். நா உணவில் செய்யும் மாற்றங்கள் மார்பக புற்றுநோயை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 

மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சிளை தடுக்கும் தன்மை செவ்வாழைப்பழங்களுக்கு உள்ளது. இது டானின்ஸ், ஃப்ளேவனாய்ட்ஸ், சாப்போனின்ஸ் மற்றும் ஆல்கலாய்ட்ஸ் போன்ற ஃபைட்டோகெமிக்கல்கள், புற்றுநோய்க்கு எதிரான தன்மைகளைக் கொண்டவை. அவை இதில் உள்ளது.

உயர் ரத்த அழுத்தம்

செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியச்சத்துக்கள், ரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. 

உங்கள் உடலில் உயர் ரத்த அழுத்தத்தை உணவுப்பழக்கவழக்கங்கள் கட்டுப்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செவ்வாழையை சாப்பிடுவது, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

கண் பராமரிப்பு

வயது தொடர்பான கண் நோய்கள், பார்வையிழப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். செவ்வாழையில் உள்ள லியூட்டின் மற்றும் சியாக்ஸான்தின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், கண்கள் சேதமடைவதை தடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ, ரொடாப்ஸின் என்ற புரதம், மங்கலான பார்வையை கூராக்குகிறது. பார்வைத்திறனை அதிகரிக்கிறது.

சிஸ்டமேடிக் சிலிரோஸிஸ்

சிஸ்டமேடிக் சிலிரோஸிஸ் என்ற பெண்களுக்கு ஏற்படக்கூடிய அரியவகை நோய், சருமம் மற்றும் சரும திசுக்களை கடினமாக்கி, இறுக்கமாக்கும் தன்மைகொண்டது. நுரையீரல் போன்ற உடல் உள் உறுப்புக்களையும் பாதிக்கும் தன்மைகொண்டது. 

கொலோஜென் என்ற புரதம், வழக்கத்துக்கு மாறாக உடலில் சேருவதால் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த அடர் சிவப்பு நிறம் கொண்ட பழங்களில் உள்ள ஆந்தோசியனின் இதை கட்டுப்படுத்த உதவும். செவ்வாழை என்பது இந்நோயை கட்டுப்படுத்தும்.

இதில் அதிகம் உள்ள இரும்புச்சத்துக்கள், இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் அனீமியாவைக் கட்டுப்படுத்துகிறது.

செவ்வாழையில் உள்ள நார்ச்சத்துக்கள், வயிறு நிறைந்த உணர்வைக் கொடுத்து, தேவையற்ற நொருக்குத்தீனிகள் உட்கொள்வதை தடுக்கிறது. 

இதனால் உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது. செவ்வாழையில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை அதிகரித்து, மலச்சிக்கலைப் போக்குகிறது.

செவ்வாழையில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியச் சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

செவ்வாழையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள், ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.

செவ்வாழையில் உள்ள வைட்டமின் பி6, உடல் வளர்சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்துகிறது. இதில் உள்ள பொட்டாசியம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிறு வலியை குறைக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.