Ragi Malt Premix : ராகி மால்ட் ப்ரீ மிக்ஸ்! சத்துக்கள் நிறைந்த, எளிதாக செய்யப்கூடிய பானம்! குழந்தைகளுக்கு சிறந்தது!-ragi malt premix ragi malt premix a nutritious easy to make drink great for kids - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ragi Malt Premix : ராகி மால்ட் ப்ரீ மிக்ஸ்! சத்துக்கள் நிறைந்த, எளிதாக செய்யப்கூடிய பானம்! குழந்தைகளுக்கு சிறந்தது!

Ragi Malt Premix : ராகி மால்ட் ப்ரீ மிக்ஸ்! சத்துக்கள் நிறைந்த, எளிதாக செய்யப்கூடிய பானம்! குழந்தைகளுக்கு சிறந்தது!

Priyadarshini R HT Tamil
Aug 16, 2024 03:41 PM IST

Ragi Malt Premix : ராகி மால்ட் ப்ரீ மிக்ஸி! சத்துக்கள் நிறைந்த, எளிதாக செய்யப்கூடிய பானம்! குழந்தைகளுக்கு சிறந்தது!

Ragi Malt Premix : ராகி மால்ட் ப்ரீ மிக்ஸ்! சத்துக்கள் நிறைந்த, எளிதாக செய்யப்கூடிய பானம்! குழந்தைகளுக்கு சிறந்தது!
Ragi Malt Premix : ராகி மால்ட் ப்ரீ மிக்ஸ்! சத்துக்கள் நிறைந்த, எளிதாக செய்யப்கூடிய பானம்! குழந்தைகளுக்கு சிறந்தது!

முந்திரி – கால் கப்

பாதாம் – கால் கப்

குங்குமப்பூ – கால் ஸ்பூன்

நாட்டுச்சர்க்கரை – 4 ஸ்பூன்

செய்முறை

ராகி மாவை கடாயில் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் ராகி மாவு கருகிவிடாமல் இருக்கும். மாவை வறுக்கும்போது கவனமாக இருக்கவேண்டும். வறுத்த மாவை ஆறவைக்கவேண்டும்.

அடுத்து முந்திரி, பாதாம் இரண்டையும் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக ஆறவைக்கவேண்டும்.

ஆறியபின், காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து, இவற்றுடன் குங்குமப்பூவையும் சேர்த்து அரைக்கவேண்டும்.

இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டு ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

இந்த ப்ரீ மிக்ஸை பயன்படுத்தி ராகி மால்ட் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

ராகி மால்ட் ப்ரீ மிக்ஸ் – ஒரு ஸ்பூன்

பால் – ஒரு டம்ளர்

செய்முறை

ஒரு டம்ளர் பாலை அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். பால் பொங்கியவுடன் இந்த ராகி மால்ட்டை சேர்த்து ஒரு நிமிடம் கலந்துவிட்டு, அடுப்பை அனைத்துவிடவேண்டும்.

பின்னர் அதை ஆற்றி இளஞ்சூடாக பரிமாறலாம். சூப்பர் சுவையில் ராகி மால்ட் தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பருகலாம்.

காலையில் உங்களால் சாப்பிட முடியவில்லையென்றால், இதை மட்டும் பருகினாலே போதும். உங்களுக்கு காலை உணவு எடுக்கவேண்டிய தேவையில்லை.

காலையில் பரபரப்பாக பணிக்கு செல்பவர்களுக்கு இது மிகவும் உறுதுணையான ஒன்று, செய்வது, பருகுவது இரண்டும் எளிது. எனவே பணிக்கு செல்பவர்கள் இதுபோன்ற ப்ரீ மிக்ஸ் வகைகளை செய்து வைத்துக்கொள்வது நல்லது.

ராகியின் நன்மைகள் மற்றும் சத்துகள்

100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது.

சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம். அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும்.

அதிக நார்ச்சத்து நிறைந்தது. இதனால், கேழ்வரகு உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது.

ராகி உங்களின் சருமத்திற்கு சிறந்த நண்பன். இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.

ராகியில் தலை முடி ஆரேக்கியத்துக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள், முடி உதிர்வை தடுக்கிறது. தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

ராகியை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது.

கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உணவென்றால் அது ராகி. இது பால் சுரப்புக்கு மட்டுமல்ல தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ரத்தச்சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

ராகியில் உள்ள ஃபைட்டோ கெமிக்கல்களில் கேன்சருக்கு எதிரான குணம் கொண்டது.

குளூட்டன் இல்லாத டயட் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அதற்கு ராகி சிறந்த தேர்வு. இயற்கையிலே அது குளுட்டன் ஃப்ரியாக உள்ளது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாதம் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதய நோய்களை தடுக்கிறது.

அனீமியாவுக்கு சிகிச்சையளிக்கிறது.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.