தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Carrot Dosa: ருசியான கேரட் தோசை.. பார்க்கும் போதே சாப்பிட தூண்டும்.. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது!

Carrot Dosa: ருசியான கேரட் தோசை.. பார்க்கும் போதே சாப்பிட தூண்டும்.. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது!

Mar 21, 2024, 04:14 PM IST

google News
Carrot Dosa:கேரட் தோசையை கொஞ்சம் வித்தியாசமாக சாப்பிடுங்கள். இதை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். கேரட் தோசை சற்று காரமாக செய்தால், பெரியவர்கள் கூட விரும்புவார்கள். சட்னியுடன் சாப்பிட்டால், அதன் சுவை அமோகமாக இருக்கும். கேரட் தோசை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
Carrot Dosa:கேரட் தோசையை கொஞ்சம் வித்தியாசமாக சாப்பிடுங்கள். இதை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். கேரட் தோசை சற்று காரமாக செய்தால், பெரியவர்கள் கூட விரும்புவார்கள். சட்னியுடன் சாப்பிட்டால், அதன் சுவை அமோகமாக இருக்கும். கேரட் தோசை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.

Carrot Dosa:கேரட் தோசையை கொஞ்சம் வித்தியாசமாக சாப்பிடுங்கள். இதை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். கேரட் தோசை சற்று காரமாக செய்தால், பெரியவர்கள் கூட விரும்புவார்கள். சட்னியுடன் சாப்பிட்டால், அதன் சுவை அமோகமாக இருக்கும். கேரட் தோசை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.

Carrot Dosa Recipe: காலை உணவு என்றாலே இட்லி, தோசை, பூரி தான் நினைவுக்கு வரும். குறிப்பாக தோசைக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இப்போது அதே தோசையை சாப்பிடாமல்... கேரட் தோசையை கொஞ்சம் வித்தியாசமாக சாப்பிடுங்கள். இதை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். கேரட் தோசை சற்று காரமாக செய்தால், பெரியவர்கள் கூட விரும்புவார்கள். சட்னியுடன் சாப்பிட்டால், அதன் சுவை அமோகமாக இருக்கும். கேரட் தோசை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம். 

மசாலா கேரட் தோசை செய்முறைக்கு தேவையான பொருட்கள்

அரிசி - ஒரு கப்

உளுந்தப்பருப்பு - ஒரு கப்

துருவிய கேரட் - ஒரு கப்

மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்

மிளகாய் - அரை ஸ்பூன்

பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

இஞ்சி விழுது - ஒரு ஸ்பூன்

எண்ணெய் - போதுமானது

சீரகம் - ஒரு ஸ்பூன்

உப்பு - சுவைக்க

தண்ணீர் - போதுமானது

மசாலா கேரட் தோசை செய்முறை

1. அரிசி மற்றும் பருப்பை தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

2. பின் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

3. ஒரே இரவு முழுவதும் குறைந்தது 8 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.

4. மறுநாள் தோசை மாவை நன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.

5. இப்போது கேரட்டை சேர்க்க தேவையான தாளிப்பை செய்யாம்.

6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி ஒரு கப் துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.

7. அதில் மஞ்சள், சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

8. சிறிது உப்பு சேர்க்கவும்.

9. நான்கு நிமிடம் வதக்கிய பிறகு பேஸ்டாக கலக்கவும்.

10. அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

11. மசாலா தோசைக்கு உருளைக்கிழங்கு கறி செய்வது போல் கேரட் தோசைக்கு இந்த கேரட் கலவையை செய்ய வேண்டும்.

12. இப்போது அடுப்பில் தேசை கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை போடவும்.

13. தோசையின் மீது இந்த கேரட் கலவையை ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி சேர்த்து தோசை முழுவதும் பரப்பவும்.

14. நன்றாக வெந்ததும் தோசையை மடித்து தட்டில் வைக்கவும்.

சாதாரண தோசையை விட இந்த தோசையில் கூடுதலாக கேரட்டைப் பயன்படுத்தியுள்ளோம். எனவே சாதாரண தோசையுடன் ஒப்பிடும்போது இந்த கேரட் தோசை மிகவும் சுவையாக இருக்கும். இந்த கேரட் தோசையை ஒருமுறை செய்தால், மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்பீர்கள். இது குழந்தைகளுக்கு சிறந்த காலை உணவு என்று கூறப்படுகிறது.

சில சமயம் லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாகவும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் சாப்பிடுவதால், உடலுக்கு ஏராளமான சத்துக்கள் கிடைக்கும். இந்த தோசை செய்வது மிக எளிது. இது அதிக நேரம் எடுக்காது. கேரட்டை அரைக்க சிறிது நேரம் ஆகும். ஒவ்வொரு முறையும் கேரட்டை பொரியலாக சமைப்பதற்கு பதிலாக, இந்த கேரட் தோசை செய்வதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை