தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Garlic Kuzhambu : பேச்சுலர் கவனத்திற்கு.. இதோ ஈஸி ரெசிபி உங்களுக்காக.. பூண்டு குழம்பு எப்படி செய்வது!

Garlic Kuzhambu : பேச்சுலர் கவனத்திற்கு.. இதோ ஈஸி ரெசிபி உங்களுக்காக.. பூண்டு குழம்பு எப்படி செய்வது!

Divya Sekar HT Tamil
Feb 16, 2024 02:06 PM IST

சுவையான பூண்டு குழம்பு எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.இந்த பூண்டு குழம்பு நீங்கள் இரண்டு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.

சுவையான பூண்டு குழம்பு எப்படி செய்வது
சுவையான பூண்டு குழம்பு எப்படி செய்வது

ட்ரெண்டிங் செய்திகள்

வடகம்

கறிவேப்பிலை

பூண்டு காய்கள் - 20

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

புளி தண்ணீர் - 1/2 முதல் 1 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

சுவையான பூண்டு குழம்பு எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம். மிகவும் ஈஸியான ரெசிபி இது. பேச்சுலர்ஸ் இந்த ரெசிபி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்த பூண்டு குழம்பு நீங்கள் இரண்டு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். இதனை செய்து உங்கள் வீட்டில் இருக்கும் குளிர்சாதன பெட்டியில் அதாவது ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு வாரம் சாப்பிடலாம்.

முதலில் ஒரு கடாய் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தாராளமாக நல்லெண்ணையை ஊற்றி குழம்பு வடகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பிறகு இருபதில் இருந்து 25 பூண்டு பல் சேர்த்து வதக்கவும். நன்கு 5 நிமிடம் அந்த எண்ணெயிலே வதங்கும் வரை வதக்கவும். பின்னர் அதில் குழம்பு மிளகாய்த்தூள், உப்பு, ஒரு கப் புளித்தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். ஒரு பத்து நிமிடம் நன்கு வேக வைக்கவும்.

 அதாவது குழம்பு எண்ணெய் பிரிந்து நல்ல பதத்திற்கு வந்தவுடன் இறக்கி விடவும். இந்த குழம்பை நீங்கள் இரண்டு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். இந்த ரெசிபி பேச்சிலர்ஸ்க்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த பூண்டு குழம்புடன் முட்டைக்கோஸ் பொரியல் அல்லது அப்பளம் வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். இதனை ஒரு முறை சமைத்து பாருங்கள்.

பூண்டு நன்மைகள்

ஒவ்வொரு வீட்டிலும் அதன் சமையலறையில் பூண்டு இருக்கும். பூண்டு இல்லாமல் எந்த அசைவ சமையலும் முழுமையடையாது. குளிர்கால நாட்களில் ஆரோக்கியமாக இருக்க இந்த பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வழக்கமான உணவில் இந்த மூலப்பொருளை வைத்திருப்பது பல நோய்களை அகற்றும்.

பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது குளிர்கால நாட்களில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது.காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றைப் போக்க பூண்டுக்கு பெரிதும் உதவுகிறது. இந்த மூலப்பொருள் குளிர்கால நோய்களில் நம்மை பாதுகாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிப்பதில் பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சுவாச பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. பூண்டு பல்வேறு குளிர்கால நோய்களை அகற்ற உதவுகிறது.மூக்கில் அடைப்பு ஏற்பட்டாலும், நிவாரணம் பெற பூண்டு உதவுகிறது. அடைபட்ட மூக்கடைப்பை நீக்கி சுவாசத்தை இயல்பாக வைத்திருக்க பூண்டு உதவுகிறது.

மூட்டு வலியைப் போக்க பூண்டு மிகவும் உதவுகிறது. மூட்டு வலி குளிர்காலத்தில் அதிகரிக்கிறது, எனவே இந்த சமையலறை மூலப்பொருள் வலியைப் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்