பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் கேரட்டை ஜூஸாக பருகுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Nov 18, 2023
Hindustan Times Tamil
வைட்டமின் ஏ சத்துக்களின் சிறந்த ஆதாரமாக திகழும் கேரட்டை சிறு துண்டுகளாக கட் செய்து ஜூஸாகவும் தயார் செய்து பருகலாம்
இதய ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் முதல் கேரட் ஜூஸ் உடலுக்கு தரும் ஆரோக்கிய நன்மைகள் இதோ
உடலுக்கு அடிப்படையாக தேவைப்படும் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்திருக்கும் காய்கறியாக கேரட் உள்ளது. இதில் இடம்பிடித்திருக்கும் வைட்டமின் ஏ நோய் எதிர்ப்பு அமைப்பை பராமரிக்க உதவுகிறது
கேரட்டில் இருக்கும் பீட்டா கரோடீன் பண்புகள் ஆக்சிஜனேற்ற அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது
கேரட்டில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கார்டியோவாஸ்குலர் நோய் பாதிப்பை தடுக்கிறது
கேரட்டில் இடம்பிடித்திருக்கும் டயட்ரி நார்ச்சத்துகள் மலச்சிக்கல் ஏற்படுவதை தடுத்து குடல் இயக்கத்தை ஊக்கப்படுத்துகிறது
சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படுவதுடன், சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்பில் இருந்தும் தடுக்கிறது. உங்கள் சருமத்தின் இயற்கை பொலிவு மாறாமல் தடுக்கிறது
நாளை முதல் சூரியன் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டுவார் பாருங்க!