Bottle gourd Pachadi : கோடையை குளுமையாக்கும் சுரைக்காய் தயிர் பச்சடி! கூட்டு, பொரியலுக்கு நல்ல மாற்று!
May 19, 2024, 12:57 PM IST
Bottle gourd Pachadi : கோடையை குளுமையாக்கும் சுரைக்காயில் தயிர் பச்சடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். இது கூட்டு, பொரியலுக்கு நல்ல மாற்றாகும்.
சுரைக்காயை வைத்து வழக்கமாக கூட்டு, பொரியல் என்று செய்து அசத்த முடியும். ஆனால் தயிர் பச்சடியும் அதில் இருந்து செய்ய முடியும். இதோ சுரைக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
கெட்டித்தயிர் – கால் கப்
சுரைக்காய் – 1
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (முழுதாக)
இஞ்சி – நறுக்கியது சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை – கொஞ்சம்
துருவிய தேங்காய் -2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
சுரைக்காயை சுத்தம் செய்து, தோல் நீக்கி, விதைகளையும் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் அதில் கால் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். கெட்டியான தயிரில் உப்பு கலந்து அடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
வேகவைத்த சுரைக்காயை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
தாளிப்பு கரண்டியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுந்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த சுரைக்காயை சேர்த்து, அதில் தயிரையும் சேர்த்து கலக்க வேண்டும்.
அதில் தாளித்தவற்றை சேர்த்து, மல்லித்தழை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்துவிட்டால் போதும். சுவையான சுரைக்காய் தயிர் பச்சடி தயார்.
இதை சாம்பார், ரசம் சாதம், வெரைட்டி சாதங்கள் மற்றும் வெஜி பிரியாணி என அனைத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
சுரைக்காயின் நன்மைகள்
நீர்ச்சத்துக்கள் நிறைந்தது
சுரைக்காய் நீர்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட ஒரு காய். அது உங்கள் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்வதுடன், உங்களின் தாகத்தை குறைக்கிறது. கோடை காலத்தில் தண்ணீர் அதிகம் உள்ள இந்த காய் உங்கள் உடலுக்கு கோடை காலத்திற்கு தேவையான தண்ணீர் சத்தை வழங்குகிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது
உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு, உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்களும் உங்கள் உடலுக்கு நல்லது.
கலோரிகள் குறைவாக இருந்தாலும், உங்கள் உடலில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு ஆகிய மினரல்கள் அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் சி மற்றும் பி ஆகிய முக்கியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
உடலுக்கு செரிமானத்தைக் கொடுக்கிறது
சுரைக்காய் உடலுக்கு செரிமானத்தை அளிக்கக்கூடிய உணவுகளுள் ஒன்று. இதில் உள்ள உயர் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள், உடலில் செரிமானத்தை ஏற்படுத்துகிறது. குடல் நுண்ணுயிர்களை காக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது.
குளிர்ச்சியை அதிகரிக்கும்
உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடிய உணவுகளுள் சுரைக்காயும் ஒன்று. இது உடலுக்கு நன்மையைக் கொடுக்கிறது. இது உடலில் பித்தத்தை கட்டுக்குள் வைப்பதுடன், கோடை வெப்பத்தை எதிர்த்து போராடுகிறது.
இதய ஆரோக்கியம்
சுரைக்காயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதனால் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
ரத்த அழுத்த முறைபாடு
சுரைக்காயில் உள்ள பொட்டாசியம், உடலில் சோடியத்தின் பாதிப்பை குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
உடல் எடை கட்டுப்பாடு
சுரைக்காயில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதில் கலோரிகள் குறைவாக உள்ளது. உடல் எடையை பராமரிப்பதில் உதவுகிறது. வயிறு நிறைந்த உணர்வை தருகிறது. இதனால், தேவையற்ற ஸ்னாக்ஸ் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. உடலில் கலோரிகளை குறைத்து, உடல் வளர்சிதையை பராமரிக்கிறது.
கழிவுநீக்கம்
சுரைக்காய் இயற்கை கழிவு நீக்கி, உடல் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் பெறுகிறது.
நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது
சுரைக்காயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடல் தொற்றுகள் மற்றும் நோய்ளுக்கு எதிராக போராடுவதை உறுதிசெய்கிறது. குறிப்பாக கோடை காலத்தில் உடல் நீர்ச்சத்தை இழக்காமல் பார்த்துக்கொள்கிறது.
டாபிக்ஸ்