தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Oil Brinjal Gravy : எச்சில் ஊறுவைக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு! மணக்க மணக்க மயக்கும் சுவையில் செய்வது எப்படி?

Oil Brinjal Gravy : எச்சில் ஊறுவைக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு! மணக்க மணக்க மயக்கும் சுவையில் செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
May 13, 2024 01:44 PM IST

Oil Brinjal Gravy : நாவில் எச்சில் ஊறுவைக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு. மணக்க மணக்க மயக்கும் சுவையில் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Oil Brinjal Gravy : எச்சில் ஊறுவைக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு! மணக்க மணக்க மயக்கும் சுவையில் செய்வது எப்படி?
Oil Brinjal Gravy : எச்சில் ஊறுவைக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு! மணக்க மணக்க மயக்கும் சுவையில் செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

கத்தரிக்காய் – 10 (சிறியது)

கடுகு – கால் ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பூண்டு – 10 பல்

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

(சின்ன வெங்காயமும் பெரிய வெங்காயத்துக்கு பதில் சேர்த்துக்கொள்ளலாம். பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும்)

தக்காளி – 2 (பொடியக நறுக்கியது அல்லது மிக்ஸியில் அரைத்தது)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒன்றரை ஸ்பூன்

புளிக்கரைசல் – ஒரு கப் (நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

தேங்காய்ப்பல் – ஒரு கப்

வரமல்லி – ஒரு ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சின்ன கத்தரிக்காயை நாலாக வகுந்து வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதே கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சீரகம், வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

அனைத்தும் பொரிந்தவுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும். அது பொன்னிறமானவுடன், அதில் தக்காளி விழுது அல்லது பொடியாக நறுக்கியதை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

இதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். இதில் ஏற்கனவே வதக்கிவைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

இப்போது மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கடாயில் எண்ணெய் சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே கொதித்து வரும் குழம்பில் இந்த மசாலாவை சேர்த்து மீண்டும் கொதிக்கவிட்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கினால் நாவில் எச்சில் ஊறவைக்கும் எண்ணெய் கத்தரிக்காய் மணக்கமணக்க மயக்கும் சுவையில் தயாராகிவிட்டது.

குறிப்புகள்

இதில் 10 புதினா இலைகள் தூவி பரிமாற வித்யாசமாக இருக்கும்.

இதை சூடான சாதத்தில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

நீங்கள் மதியம் சாப்பிடப்போகிறீர்கள் என்றால் காலையிலேயே சமைத்து வைத்துவிடவேண்டும்.

அனைத்து வகை புளிக்குழம்புகளுமே தாமதம் ஆக ஆகத்தான் சுவை நன்றாக இருக்கும். அடுத்த நாள் இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும். இதை 3 நாட்கள் வரை சுடவைத்து சாப்பிடலாம்.

இதை வெரைட்டி சாதங்கள், பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளலாம். டிபஃன், சாதம் இரண்டுக்கும் ஏற்ற வகையில் செய்யவேண்டுமெனில், இதில் புளிக்கரைசல் குறைவாக சேர்க்கவேண்டும்.

கத்தரிக்காயில் எண்ணற்ற வகைகள் உள்ளது. அதில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வதற்கு சிறிய அளவில் நல்ல அடர் கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும் கத்தரிக்காய்கள் தான் சிறந்தது.

அதேபோல், இந்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்புக்கு கத்தரிக்காய்களை நறுக்கக்கூடாது. முழு கத்தரிக்காயை ஒருபுறத்தில் மட்டும் நாலாக வகுந்து எடுக்க வேண்டும்.

கத்தரிக்காயை முதலிலே வறுக்கும்போது, எண்ணெய் கத்தரிக்காயில் இறங்கி ஊறி எண்ணெய் கத்தரிக்காய் குழம்புக்கு நல்ல சுவைத்தரும்.

WhatsApp channel

டாபிக்ஸ்