Benefits of Chow Chow : குடல் ஆரோக்கியம் முதல் கர்ப்ப காலம் வரை காக்கும் சௌசௌவின் முத்தான 10 நன்மைகளை பாருங்கள்!
Sep 01, 2024, 07:40 AM IST
Benefits of Chow Chow : குடல் ஆரோக்கியம் முதல் கர்ப்ப காலம் வரை காக்கும் சௌசௌவில் உள்ள முத்தான 10 நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளுள் ஒன்றாக சௌசௌ உள்ளது. இது இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தக்காயை மழைக்காலத்தில் தொற்றுகளை அகற்றுவதற்காக பெங்காலிகள் சாப்பிடுகிறார்கள். இதில் உள்ள தோல் நீக்கப்பட்டு காய் மட்டும் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இதை சாம்பார், பொரியல், கூட்டு, பருப்பு கூட்டு அல்லது சட்னி என செய்து பல்வேறு வகைகளில் சாப்பிடுகிறார்கள். இந்தக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. சௌசௌவில் கலோரிகள் குறைவு, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ், காப்பர், வைட்டமின் சி, கே, பி6, பி9 ஆகிய சத்துக்கள் உள்ளன. இதில் கால்சியச்சத்து அதிகம் உள்ளது. இரும்புச்சத்துக்களும், நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இதில் கொழுப்பு மற்றும் சோடியம் இரண்டும் இல்லாததால், இந்தக்காய் உடல் எடை குறைப்பவர்களின் நண்பனாக உள்ளது.
சௌசௌவின் நன்மைகள்
இதயத்தை காக்கிறது
ஃபைட்டோகெமிக்கல்கள் நிறைந்தது. சௌசௌ ரத்த ஓட்டத்தை சீராக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உயர் ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது. இதில் உள்ள மைரிசிட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் வீக்கத்துக்கு எதிரான போராடுகிறது. கொழுப்பை குறைக்கிறது. நாள்பட்ட இதய நோய்களை தடுக்கிறது. உங்கள் இதயத்தை காக்க இந்த காயை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
கல்லீரல் பாதுகாப்பை அதிகரிக்கிறது
கொழுப்பு கல்லீரல் என்பது ஆபத்தான நிலை. இது மது அருந்தாதவர்களுக்கும் ஏற்படுகிறது. இந்த காயை சாப்பிடும்போது கொழுப்பு கல்லீரல் பிரச்னைகள் குணமாகிறது என்று எண்ணற்ற ஆய்வுகள் கூறுகின்றன. உடலின் கெட்ட கொழுப்பை அகற்றுகிறது. உடலின் வளர்சிதையை ஊக்குவித்து கல்லீரன் கொழுப்பை முறைப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது.
ரத்தச்சர்க்கரை அளவை அதிகரிக்கிறது
கார்போஹைட்ரேட்கள் குறைவானது மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தது. இது நீரிழிவு நோயின் அங்கம் ஆகும். எனவே இதை சாப்பிடும்போது, நீண்ட நேரம் நீங்கள் வயிறு நிறைந்த உணர்வைப் பெறலாம். ஆனால் இதில் உள்ள நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேட் உறிஞ்சும் திறனை அதிகரித்து ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது. இதில் உள்ள சில வேதிப்பொருட்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
கர்ப்ப கால ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
ஃபோலேட், கர்ப்பிணிகளின் முக்கிய உணவு. இது ஆரோக்கிய குழந்தைகள் பிறக்க வழிவகுக்கிறது. கர்ப்பமாக நினைப்பவர்களுக்கும் வைட்டமின் பி9 மற்றும் ஃபோலேட் பரிந்துரைக்கப்படுகிறது. இது குழந்தை மூளை, முதுகுத்தண்டு மற்றும் குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு அனறாட தேவையில் 40 சதவீத ஃபோலேட் கிடைக்கச் செய்கிறது. உங்கள் அன்றாட ஃபோலோட் தேவையை சௌசௌ பூர்த்தி செய்கிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
இதில் குயிர்செடின், மைரிசெடின், கெம்ப்ஃபெரோல், மூரின் போன்ற எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை உடலில் பல்வேறு நோய்களை எதிர்த்து போராடுகின்றன. நீரிழிவு, புற்றுநோய் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் மழைக்காலங்களில் ஏற்படும் பல்வேறு பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்களை எதிர்த்து போராடச் செய்கிறது.
புற்றுநோயைத் தடுக்கிறது
சௌசௌ, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது உடலில் உள்ள ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. புற்றுநோய் செல்கள் தோன்றுவதை தடுக்கிறது. ரத்தப்புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோயாளிகளுக்கு சிறந்தது. இதில் உள்ள ஃப்ளேவனாய்ட்கள், உடலில் கட்டிகள் ஏற்படாமல் காக்கிறது. புற்றுநோயாளிகளின் உணவில் கட்டாயம் இடம்பெறவேண்டியது.
வயோதிகத்தை குறைக்கிறது
சௌசௌ, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது. இந்த அழுத்தம் உங்கள் உடல் செல்களில் எதிர்மறை பாதிப்புக்களை அதிகரித்து, உங்கள் சருமத்தின் நிறத்தை குறைத்து, பொலிவிழக்கச்செய்கிறது. இது உங்கள் குழந்தையின் வளர்சிதையை ஊக்குவிக்கிறது. செல்களின் சேதத்தைக் குறைக்கிறது. உங்கள் சருமத்திற்கு பொலிவைத் தருகிறது.
குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது
உங்கள் செரிமான மண்டலம் சிறப்பாக இருந்தால்போதும், உங்கள் உடல் சீராகும். சௌசௌ சாப்பிடும்போது உங்கள் உடலின் செரிமான ஆரோக்கியம் அதிகரிக்கிறது. உடலின் கழிவுநீக்கத்தை முறைப்படுத்துகிறது. இதில் உள்ள ஃப்ளேவனாய்ட்கள், மலச்சிக்கலைப்போக்கி குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதன் மூலம் உங்கள் செரிமான மண்டலத்தின் பல்வேறு செயல்திறன்களையும் ஊக்குவிக்கிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது
கலோரிகள் குறைவான உணவுகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் பசியைக் கட்டுப்படுத்துகிறது.
முளையின் செயல்திறனை அதிகரிக்கிறது
நினைவாற்றல் இழப்பால் அவதியுறுபவர்களுக்கு, இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃப்ளேவனாய்ட்கள் உதவுகின்றன. மனஅழுத்தத்தை குறைக்கிறது. மனநிலையை மாற்றுகிறது. மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவாற்றலை மீட்கிறது.
டாபிக்ஸ்