Benefits of Camphor:பருக்கள், சருமம், கூந்தல், வீக்கத்துக்கு அருமருந்து கற்பூரம்
- கற்பூரம் பல பிரச்னைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றி இங்கு காணலாம்.
- கற்பூரம் பல பிரச்னைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றி இங்கு காணலாம்.
(1 / 10)
கற்பூரம் மரம் மற்றும் ஊசியிலை மரத்தின் பட்டையிலிருந்து கற்பூரம் எடுக்கப்படுகிறது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. உடல் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை கற்பூர எண்ணெய் குணப்படுத்துகிறது.
(2 / 10)
வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க கற்பூர எண்ணெயைப் பயன்படுத்தலாம். முழங்கால்கள் மற்றும் இடுப்புப் பகுதிகளில் பலருக்கும் வலி இருப்பது சகஜமாகி வருகிறது. இந்த வlலியைப் போக்க ஆலிவ் எண்ணெய்யில் கற்பூரம் கலந்து சிறிது சூடு செய்து தடவினால் நிவாரணம் கிடைக்கும். இடுப்பு வலியைப் போக்க ஆலிவ் எண்ணெய்யில் கற்பூரம் கலந்து சிறிது சூடு செய்து தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
(3 / 10)
பருக்கள், சிவந்த சொறி, தோலில் ஏற்படும் அரிப்பு போன்றவற்றை குணப்படுத்த கற்பூரத்தை ஜெல் வடிவில் பயன்படுத்தலாம். கற்பூர எண்ணெயை தண்ணீரில் கலந்து பருக்கள் மீது தடவவும். முகப்பருவுக்கு சிறந்த நிவாரணி கற்பூரம், தினமும் தண்ணீரில் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால், நிவாரணம் கிடைக்கும். வாய்க்குள் போகாமல் பார்த்துக் கொள்ளவும்.
(4 / 10)
கற்பூர எண்ணெயின் நறுமணம் மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கிறது. தலையணை அல்லது கைக்குட்டையில் சில துளிகள் எண்ணெயை வைத்து அதன் அருகில் படுத்துக்கொள்வது தூக்கத்தை வரவழைக்கும்.
(5 / 10)
முடி பராமரிப்புக்கு, கெமிக்கல் முடி தயாரிப்புகளுக்கு பதிலாக கற்பூர எண்ணெயைப் பயன்படுத்துங்கள். கற்பூர எண்ணெயை கூந்தலுக்கு தடவினால் கூந்தல் மிருதுவாகி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதற்கு தினமும் எண்ணெயில் கற்பூரம் கலந்து தலைக்கு தடவ வேண்டும். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தலைமுடி வேர்களை பலப்படுத்தி, முடி வளர்ச்சிக்கு உதவும். கற்பூர எண்ணையை முட்டை மற்றும் தயிருடன் கலந்து தலைமுடி வேரில் தேய்த்து குளித்து வந்தால், முடி நன்றாக வளரும். தலையில் இருக்கும் பேன்களையும் விரட்டும்.
(6 / 10)
கால் வெடிப்பு இருந்தாலே மனது கஷ்டமாகவும், அசிங்கமாகவும் உணர நேரிடும். தண்ணீரில் கற்பூரம் கலந்து காலை சிறிது நேரம் ஊறவைத்து, பின்னர் தேய்த்துக் கழுவி, க்ரீம், பெட்ரோலியம் ஜெல்லி தடவி வர வெடிப்பு போயே போய்விடும்.
(7 / 10)
கர்ப்பம் தரித்த பெண்களுக்கு கீழ் வயிற்றில் வலி இருக்கும். சூடம் சிறிது ஆலிவ் எண்ணெய்யில் கலந்து தடவி வந்தால் வலி நீங்கும்.
(8 / 10)
நகத்தில் பூஞ்சை ஏற்பட்டால் தொடர்ந்து கற்பூரம் தேய்த்து வந்தால் குறையும். வராமல் தடுக்கப்படும். இதில் இயற்கையாகவே பூஞ்சையைப் போக்கும் நிவாரணி உள்ளது.
(9 / 10)
கற்பூர எண்ணெய் ஒரு இயற்கை பூச்சிக்கொல்லியாக செயல்படும். அதற்கு அரை கப் சுடுநீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அத்துடன் 20 துளிகள் கற்பூர எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து பூச்சி அல்லது கொசுக்கள் வரும் பகுதிகளில் தெளிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் 4-5 கற்பூரத்தைப் போட்டு அறையில் வைத்தால் கொசுக்கள் வராது.
மற்ற கேலரிக்கள்