உறவில் நெருக்கமில்லாமல் இருக்கிறீர்களா?.. இப்படி செய்து பாருங்கள்.. உங்கள் துணை காலத்துக்கும் நிற்கும்!
Dec 04, 2024, 05:50 PM IST
உறவில் நெருக்கமில்லாமல் இருக்கிறீர்களா? இப்படி செய்து பாருங்கள் உங்கள் துணை காலத்துக்கும் நிற்கும். அதற்கான வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம்.
ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ விரும்பினால், அவர்களுக்குள் அன்பும் நெருக்கமும் இருக்க வேண்டும். இருவருக்கும் இடையே ஒருவருக்கொருவர் அன்பு இருக்கும்போது, சேர்ந்து வாழ வேண்டிய ஆசையும் அவசியமும் ஏற்படுகிறது.
இருவரில் யாராவது ஒருவரிடம் காதல் குறைந்துவிட்டது போல் உணர்ந்தால், இதன் விளைவாக, ஒருவருக்கொருவர் அவநம்பிக்கை அதிகரிக்கிறது. இது அன்புக்குரியவர்களை என்றென்றும் அந்நியப்படுத்தும்.
அன்புடன் ஒருவருடன் நெருங்கிவிட்டால், அந்த அன்பிலிருந்து ஒருவர் மீண்டும் வெளியேறுவது மிகவும் கடினமான கட்டம் ஆகும். வாழ்க்கைத் துணை மீதான உங்கள் உணர்வுகள் மங்கத் தொடங்கும்போது, அவர்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
உங்கள் துணையுடன் பேசுவதை நீங்கள் மெல்லக் குறைப்பீர்கள். மேலும், இருவருக்கும் இடையிலான அன்பும் நெருக்கமும் மெல்ல குறையும்.
நீங்கள் முன்பு இருந்ததைப் போலவே அவர்களுடன் இணைவதை நிறுத்துவீர்கள். அவர்களை விலக்கி வைக்க முயற்சிப்பீர்கள். இதன் விளைவாக, உங்கள் நீண்டகால ரிலேஷன்ஷிப் சிறிது நாளில் முடிவுக்கு வரும்.
இது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். மீண்டும் ஒரு புதிய வாழ்க்கைக்குள்ளும்போக முடியாது.
இந்த நிலைமை ஏற்படக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், இதை இவ்வாறாக சரிசெய்யலாம். காலப்போக்கில், உங்கள் பிணைப்பு அதிகரிக்கும்.
உறவில் நெருக்கம்:
இருவருக்கும் இடையிலான நீண்டகால, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான உறவுக்கு அன்பு மிக அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நெருக்கம் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் இருவருக்கும் இடையிலான தொடர்பு உடைக்க முயற்சிக்கும் எவரையும் விட வலுவாக மாறும்.
உறவில் நெருக்கத்தை வளர்க்க உதவும் சில குறிப்புகள்:
கரங்கள் பற்றி இருக்கட்டும்:
உங்களுக்கும் உங்கள் இல்வாழ்க்கைத் துணைக்கும் இடையிலான நெருக்கம் குறைவதைத் தவிர்க்க, உங்களுக்கும் உங்கள் இல்வாழ்க்கைத்துணைக்கும் இடையிலான உடல் சார்ந்த தொடுதல் முக்கியமானது. இந்த வகையான உடல் தொடுதல் அவர்களுக்கு பாசத்தையும் ஆறுதலையும் தருகிறது. இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் கூட்டாளருடன் ஒரு வாக்கிங் செல்லும்போது, அவர்களுடன் உட்காரும்போது, உங்கள் கைகள் அவர்களுடன் வசதியாக பின்னிப்பிணைந்திருக்க வேண்டும். இது உங்களுக்கிடையேயான பிணைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும்.
மனம்விட்டுப் பேசுங்கள்:
இருவருக்கும் இடையிலான தொடர்பை இறக்காமல் வைத்திருக்க இருவரும் மனம் விட்டுப் பேசுவது மிக முக்கியம். உடல் ரீதியாக நெருக்கமாக இருப்பதால் பலர் ஒருவருடன் ஒருவர் பேசுவதைக் குறைத்துக் கொள்கிறார்கள்.
இந்த இடைவெளி படிப்படியாக அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் நீங்கள் அவர்களுடன் பேசவில்லை என்றாலும், அவர்கள் பழகிவிடுவார்கள். அதே நேரத்தில், அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த ஸ்பேஸ் கொடுங்கள். எனவே எப்போதும் வேடிக்கையாக இருங்கள். நக்கலாக பேசுங்கள். அவர்களின் தேவைகளை அறிந்து கொள்ளுங்கள். முடிந்தால் எப்போதும் ஒரு கப் காபிக்கு தயாராக இருங்கள்.
விட்டுக்கொடுத்தல்:
நீங்கள் மிகவும் தைரியமாகவும் புத்திசாலியாகவும் இருக்கலாம். இருப்பினும், நீங்கள் விரும்பும் நபரின் முன் பலவீனமான நபராக இருப்பது பரவாயில்லை.
உங்கள் வாழ்க்கைத்துணை உங்களை நன்கு புரிந்துகொள்வது என்பது அவர்களுக்காக நீங்கள் எப்படி விட்டுக்கொடுத்து நடக்குறீர்கள் என்பதைப் பொறுத்து அமையும். நீங்கள் தான் எல்லாம் என்று நினைக்காமல், எல்லாவற்றிலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து, மனம் திறந்து பேசி, நம்பிக்கை கொடுத்து, நல்ல முடிவை எடுப்பது உங்கள் கூட்டாளருடனான உங்கள் நெருக்கத்தை அதிகரிக்கும். உங்கள் அன்பு என்றும் பசுமையாக நிற்கும்.
டாபிக்ஸ்