நான் அதை ஏத்த ஜிம்முக்குப் போனேன்.. என் உடம்பினை நான் தேர்ந்தெடுக்க முடியாது.. மனம் திறந்த கேப்ரியல்லா சாரல்டான்
- நான் அதை ஏத்த ஜிம்முக்குப் போனேன்.. என் உடம்பினை நான் தேர்ந்தெடுக்க முடியாது.. மனம் திறந்த கேப்ரியல்லா சாரல்டான் வெளிப்படையாகப் பேட்டியளித்துள்ளார்.
- நான் அதை ஏத்த ஜிம்முக்குப் போனேன்.. என் உடம்பினை நான் தேர்ந்தெடுக்க முடியாது.. மனம் திறந்த கேப்ரியல்லா சாரல்டான் வெளிப்படையாகப் பேட்டியளித்துள்ளார்.
(1 / 6)
சிறுவயது முதலே தமிழில் சீரியல் மற்றும் சினிமா என கலந்துகட்டி நடித்துவருபவர், நடிகை கேப்ரியல்லா சாரல்டன். ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஜோடி ஜூனியர் என்னும் டான்ஸ் ஷோவில் பங்கேற்பாளராக இருந்து, அடுத்து ஜோடி நம்பர் ஒன் ஆறாவது சீசனில் என்னும் நடன நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்றவர். தவிர, தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக்பாஸ் நான்காவது சீசனில், கேப்ரியல்லா சாரல்டன் பங்கேற்று பலராலும் கவனிக்கப்பட்டார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மருமகள் என்னும் சீரியலில் நாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
(2 / 6)
இதுதொடர்பாக சீரியல் நடிகை கேப்ரியல்லா சாரல்டன் கலாட்டா பிங்க் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’ நான் வேலைக்குப் போயிட்டு வந்தேன் என்றால், மனது முழுக்க அங்கே தான் இருக்கும். அப்போது குடும்பத்தை என் அம்மா தான் முழுக்க முழுக்க பார்த்துக்கொள்கிறார்கள். எனக்கு சீரியலுக்குக் கிளம்பும்போதுகூட, எனக்கானவற்றை பேக் செய்துகொடுப்பார்கள்.நான் என் உடம்பை வைச்சுக்கிட்டு, ரொம்ப பாதுகாப்பின்மையாகத்தான் இருக்கேன். நாம் ஒல்லியாக இருந்தாலும் குண்டாக இருந்தாலும் எதையும் கண்டுக்கிறது இல்ல. நான் ஒல்லியாக இருக்கும்போதும் ட்ரோல் பண்ணுனாங்க. இப்போது வெயிட் போட்டுட்டேன். இப்போதும் ட்ரோல் தான் பண்ணுறாங்க. அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஒருத்தரை குறைகண்டுபிடிக்க ஆட்கள் இருக்கத்தான் செய்வான்’ என விளாசுகிறார், கேப்ரியல்லா.
(3 / 6)
'’எல்லோரும் ஜிம்முக்கு போய் வெயிட் குறைக்கத்தான் செய்வாங்க. நான் ஒல்லியாக இருக்கும்போது வெயிட் போடுவதற்காக ஜிம்முக்குப் போனேன். ஒரு நாளைக்குப் பத்து இட்லி எல்லாம் சாப்பிட ஆரம்பித்து, இடையில் கொஞ்சம் ஓவர் வெயிட் ஆகிட்டேன். சரி, இது நம்ம வயதுக்கு ஏற்ற எடைகிடையாது அப்படின்னு நினைத்து, குறைச்சுட்டேன்.என்னுடைய உடம்பினை நான் தேர்ந்தெடுக்க முடியாது. எனக்கு இந்த மாதிரி உடல்வாகு வந்திடுச்சு. நான் நார்மல் ட்ரெஸ் போட்டாலும், மாடர்ன் ட்ரெஸ் போட்டாலும் எல்லாத்துக்கும் கமெண்ட் செய்ய ஆட்கள் இருக்கு. எல்லாவற்றையும் ஆபாசமாகப் பார்க்க ஆட்கள் இங்கு இருக்காங்க. நான் யாரையும் கண்டுகொள்வதில்லை. நான் ஒரு கமெண்ட் கூட படிக்கவேமாட்டேன்’’.
(4 / 6)
'’நான் ஸ்கூலில் படிக்கும்போது எனது அப்பா எனக்கு ஒரு ட்ரெஸ் வாங்கிக் கொடுத்திருந்தார். அதைப்போட்டுட்டு போன படம் வெளியில் போய், அதையும் கமெண்ட் பண்ண ஆரம்பிச்சாங்க. அதைப் படிக்கும்போது நான் கொஞ்சம் வீக் ஆகுறமாதிரி உணர்ந்தேன். அதனால் கமெண்ட் எல்லாம் படிக்கிறதே இல்லை.இப்போது மொபைல் ஆப்ஸ் வைச்சு, இமேஜை எடிட் பண்ணியெல்லாம் போடுறாங்க இல்லையா. அதை எல்லாம் நான் கண்டுகொள்வதே கிடையாது’’.
(5 / 6)
‘’நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது முழுக்க முழுக்க படிப்பில் தான் கவனம் செலுத்திட்டு இருந்தேன். என் புகைப்படத்தை மார்பிங் பண்ணி போட்டு, வைரல் ஆனது. எனக்கே அது ஒருவேளை அது நான் தானோனு தோண ஆரம்பிச்சிருச்சு. வீட்டில் அம்மா செம அடி. நான் ஸ்கூல் போகலை. மூன்று நாட்கள் தூங்காமல் அழுதேன். எல்லோரும் அப்படித்தான் என்னைப் பார்த்திட்டு இருந்தாங்க’’.
(6 / 6)
‘’பிறகு, எனது அம்மா, அந்த மார்பிங் செய்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டு நான் படிக்கும் பள்ளியில் பிரின்ஸிபலிடம் தெரிவித்தார். உடன் படித்தவர்களே சிலர் அந்த மார்பிங் புகைப்படத்தை நம்புனாங்க. ஆனால், உண்மையான நண்பர்கள் அப்படி எதுவும் நினைக்கல. அதனால், அதன்பின் இந்த விவகாரத்தை எப்படி டீல் செய்யணும்னு தைரியம் வந்திடுச்சு’’எனப் பேசி முடித்தார், நடிகை கேப்ரியல்லா சாரல்டன்.
மற்ற கேலரிக்கள்