பெற்றோராகப் போகிறீர்களா? வெயிட்! அதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?
Dec 21, 2024, 09:47 AM IST
உங்களுக்கு குழந்தை பிறக்கப்போகிறதா? வாழ்த்துக்கள். ஆனால் அதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?
நீங்கள் பெற்றோராகப் போகிறீர்கள் என்றால், அதற்கு முன்னதாக நீங்கள் என்ன தெரிந்துகொள்ளவேண்டும். உங்கள் காத்திருப்பு இரட்டிப்பை மகிழ்ச்சியைக் கொடுக்கப்போகிறதுதான். ஆனால் அதே நேரத்தில் நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டியது என்ன என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். ஏனெனில் பேரன்டிங் என்பது அத்தனை எளிமையான காரியமல்ல, குழந்தை பிறக்கும் அதே நாளில் பெற்றோர் மீண்டும் பிறக்கிறார்கள். சில விஷயங்களை பெற்றோர் பெற்றோர், பெற்றோர்கள் ஆனபின்னர்தான் புரிந்துகொள்கிறார்கள். எனவே நீங்கள் பெற்றோராகப் போகிறீர்கள் என்றால் முன்னதாகவே தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?
கூட்டத்துடன் இருக்கும்போதும், பெற்றோர்கள் தனிமையை உணர்கிறார்கள்,
ஒரு குழந்தை இருப்பதாலே உங்களுக்கு மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படாது. நீங்கள் மக்கள் சூழ்ந்து வாழலாம். இதை நீங்கள் உணர்வு ரீதியாகவும், மனரீதியாகவும் நீங்கள் தனிமையைத்தான் உணர்கிறீர்கள். எனவே கவனமாக இருங்கள்.
குழந்தைகளுக்கு ஒரே விதிமுறை கிடையாது
ஒவ்வொரு குழந்தையும் வித்யாசமானவர். உங்கள் நண்பரின் குழந்தைக்கு சரியானது உங்கள் குழந்தைக்கு சரியாகாது. உறக்கம் முதல் உணவு வரை ஒவ்வொன்றும் மாறுபடும். நெகிழ்தன்மை மற்றும் பொறுமை உங்களுக்கு அவசியம்.
உங்கள் பார்ட்னருடனான அவர்களின் உறவு மாறும்
உங்களால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கான தொடர்புகளை நீங்கள் குழந்தைகளை வைத்திருப்பது உருவாக்குகிறது. உறக்க குறைபாடு, பகிரப்பட்ட பொறுப்புகள், தங்களுக்கான நேரக் குறைபாடு என பல விதமான டென்சனை குழந்தை பிறப்பு கொண்டுவருகிறது.
தாய்ப்பால் இயற்கையான ஒன்று, ஆனால் எளிதான ஒன்றல்ல
பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள், தாய்ப்பால் கொடுப்பது எளிதான ஒன்று என்று. ஆனால், அது எப்போது உண்மை கிடையாது. பால் சுரப்பது, குழந்தை பருகுவது மற்றும் உடல் ரீதியான அசவுகர்யங்கள் என அதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன.
உறக்கத்தை தொலைக்கவில்லை முற்றிலும் இழக்கிறீர்கள்
ஒரு பெற்றோராக உங்களுக்கு இருக்கும் உறக்கக் குறைபாடு என்பது வேறு ஒருவருக்கும் இருக்காது. குறைவான உறக்கம் மட்டுமல்ல, உறங்கும்போது இடையூறு, நீங்கள் எண்ணிப்பார்க்க முடியாத நேரத்தில் உறக்கம் என அது உங்களை முற்றிலும் வெறுமை நிலைக்கு கொண்டு சென்றுவிடும்.
உங்கள் வீட்டின் நிலையும் மாறும்
ஆம், குழந்தைகள் இருப்பதற்கு முன்னர் இருந்த வீடாக உங்கள் வீடு இப்போது இருக்காது. உங்கள் வீட்டை அது விளையாட்டு சாமான்கள் நிறைந்ததாக மாற்றும். டயப்பர்கள், குட்டி சாக்ஸ்கள் என குப்பைகள் மேலும் சேரும். இது உங்களுக்கு புதிய இயல்பாகிவிடும். எனவே இதை நீங்கள் ஏற்க கற்றுக்கொள்ளவேண்டும்.
மைல்கற்கள் என்பது வழிகாட்டியாகும், முடிவல்ல
மற்றவர் குழந்தைகளைப்போல் சரியான காலத்தில் பேசுவது அல்லது நடப்பது போன்றவற்றை உங்கள் குழந்தை செய்யாவிட்டால் அது உங்களுக்கு கடும் மன உளைச்சலைத்தரும். ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் வழியில் ஒவ்வொன்றையும் செய்வார்கள். எனவே ஒப்பிட்டுப்பார்க்காமல், அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் சூழலில் கவனம் செலுத்துங்கள். அது தாய்-சேய் இருவருக்கும் நல்லது.
தவறுகள்
பேரன்டிங் என்று வரும்போது, நீங்கள் சில தவறுகளை செய்துதான் கற்றுக்கொள்வீர்கள். எண்ணற்ற தவறுகள் இருக்கும். நீங்கள் விரைவாக எதையும் செய்ய முடியாது. உங்கள் கற்றல் நேர்க்கோட்டில் இருக்காது. பேரன்டிங் என்பது தொடர்ச்சியான பயணமாக இருக்கும். ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இருக்கவேண்டும். அனைத்தையும் தெரிந்துகொள்ளாததற்கு உங்களை நீங்களே மன்னித்துவிடுங்கள்.
எதிர்பாராத வகையில் உங்கள் அடையாளம் மாறும்
உங்களை நீங்கள் இழந்துவிட்டதாக நீங்கள் உணர்வீர்கள். உங்களின் புதிய பலங்கள், ஆர்வங்கள் மற்றும் கோணங்களை நீங்கள் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பாக இந்த பேரன்டிங் காலம் இருக்கும். உங்களைப்பற்றி உங்களுக்கே புதிதாக தோன்றும்.
சிறிய நிகழ்வுகளில் மகிழ்ச்சி
ஒரு சிறிய விஷயங்கள் கூட உங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும். உறங்கும்போது அணைத்துக்கொள்வது, முதலில் அம்மா, அப்பா என்று அழைத்தது, என உங்கள் மனதில் நிறையும் சில தருணங்களை வாழ்வில் நீங்கள் எப்போதும் பெறவே முடியாத ஒன்றாக அமையும். ஹாப்பி பேரன்டிங்!
டாபிக்ஸ்