நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் பயோபிக் உண்மையா? தயாரிப்பு நிறுவனம் கூட உறுதியாமே?
மறைந்த முன்னாள் நகைச்சுவை நடிகர் ஜே.பி.சந்திரபாபு அவர்களின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்பட உள்ளது இந்த படத்திலும் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நம்மிடையே வாழ்ந்து மறைந்த பல பிரபலங்களின் வாழ்க்கையை படமாக எடுக்கும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதில் சினிமா பிரபலங்களின் வாழ்க்கையையும் அவர்களது வரலாறையும் படமாக எடுத்து வருகின்றனர். இந்த படமும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தெலுங்கில் வெளியான சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநடி பெரும் வெற்றி அடைந்தது. மேலும் இப்படத்திற்கு கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருதும் கிடைத்தது. இது போன்ற படங்களுக்கு தற்போது ஆதரவு பெருகி வருகிறது.
நடிகர் தனுஷ்
இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் இடையே நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இது நிறுத்தப்பட வில்லை என ஒரு பிரபல பத்திரிகையாளர் அவரது youtube வீடியோவில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது மறைந்த முன்னாள் நகைச்சுவை நடிகர் ஜே.பி.சந்திரபாபு அவர்களின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்பட உள்ளது இந்த படத்திலும் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
சந்திரபாபு
தூத்துக்குடியைச் சேர்ந்த சந்திரபாபு நடிகராக வேண்டும் என பல போராட்டங்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். நகைச்சுவை நடிகராக திரைப்படங்களில் அறிமுகமாகி, பின்னர் இயக்குனர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், ஹீரோ, என திரை உலகின் உச்சத்தை அடைந்தவர். 1950-களிலேயே லட்சத்தில் சம்பளம் வாங்கியவரும் இவர் தான். எம். ஜி. ஆர் மற்றும் சிவாஜி போன்ற அன்றைய உச்ச நச்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது தத்துவும் மிக்க பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
