தங்க கட்டிகளை தானம் செய்தாரா..! உலகத்தின் பணக்கார பேரரசர்.. இன்று வரை அசைக்க முடியாத மான்சா மூசா..!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  தங்க கட்டிகளை தானம் செய்தாரா..! உலகத்தின் பணக்கார பேரரசர்.. இன்று வரை அசைக்க முடியாத மான்சா மூசா..!

தங்க கட்டிகளை தானம் செய்தாரா..! உலகத்தின் பணக்கார பேரரசர்.. இன்று வரை அசைக்க முடியாத மான்சா மூசா..!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 20, 2024 10:29 AM IST

Mansa Musa: அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய உலக பணக்காரர் இவர்தான். இந்திய ரூபாயின் மதிப்பின்படி 32 லட்சம் கோடி சொத்தை இந்த பேரரசர் மான்சா மூசா வைத்திருந்திருக்கிறார். இன்று வரை உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர் இவர்தான்.

தங்க கட்டிகளை தானம் செய்தாரா..! உலகத்தின் பணக்கார பேரரசர்.. இன்று வரை அசைக்க முடியாத மான்சா மூசா..!
தங்க கட்டிகளை தானம் செய்தாரா..! உலகத்தின் பணக்கார பேரரசர்.. இன்று வரை அசைக்க முடியாத மான்சா மூசா..!

இவருடைய சொத்து மதிப்பு 234 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. நமது இந்திய நாட்டின் ரூபாய் மதிப்பின்படி 20 லட்சம் கோடி ஆகும். அதேபோல பலருடைய பெயர்களும் இந்த பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் தொடங்கி ஹைதராபாத்தில் இருக்கும் நிஜாம் வரை பலருடைய பெயர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

தற்போது இருக்கக்கூடிய மக்கள் தொகை மற்றும் தொழில்நுட்பம் போன்றவைகளை பயன்படுத்தி பலரும் பணக்காரர்களாக மாறி வருகின்றனர். ஆனால் 800 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்திலேயே ஒருவர் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார் என்று கூறினால் நம்புவது சற்று கடினமாகத்தான் இருக்கும்.

ஆம், ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த அரசர் ஒருவர் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரராக திகழ்ந்து வந்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கக்கூடிய ஒரு நாட்டை ஆட்சி செய்தவர்தான் பேரரசர் மான்சா மூசா. 14ஆம் நூற்றாண்டில் இவர் ஆட்சி செய்துவந்துள்ளார். அவருடைய அப்போதைய சொத்து மதிப்பு 400 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய உலகப் பணக்காரர் இவர்தான். இந்திய ரூபாயின் மதிப்பின்படி 32 லட்சம் கோடி சொத்தை இந்த பேரரசர் மான்சா மூசா வைத்திருந்திருக்கிறார். இன்று வரை உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர் இவர்தான்.

மான்சா மூசா

இவர் 1280 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். பிறகு மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கக்கூடிய வாஸ்ட் மாலி என்ற நாட்டின் அரசராக 1312 ஆம் ஆண்டு முடி சூட்டினார். இவர் திம்புக்குடு வாசா என்ற இடத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்து வந்துள்ளார். இவருக்கு எப்படி இத்தனை கோடி சொத்து கிடைத்தது என்ற கேள்வி அனைவருக்கும் எழும்.

இவருடைய முக்கிய வருமானமாக உப்பு மற்றும் தங்கம் ஏற்றுமதி இருந்து வந்துள்ளது. உலகில் இருக்கக்கூடிய பல நாடுகளுக்கு தங்கம் மற்றும் உப்பை இவர் ஏற்றுமதி செய்துவந்துள்ளார்.

மெக்கா பயணம்

சவுதி அரேபியாவில் இருக்கக்கூடிய மெக்கா நகரம் இஸ்லாமியர்களின் புனித நகரமாக திகழ்ந்து வருகிறது. இதற்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். 1324 ஆம் ஆண்டு மான்சா மூசா மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார். இவருடைய மெக்கா பயணம் மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாக இருந்து வருகிறது.

மிகப்பெரிய வாகனத்தில் பயணம் செய்தார். இவருடைய வாகனம் தான் இன்றுவரை சகாரா பாலைவனத்தில் நுழைந்த மிகப்பெரிய வாகனமாக கூறப்படுகிறது. மெக்கா பயணத்தின் பொழுது மான்சா மூசா தன்னோடு நூற்றுக்கும் மேற்பட்ட ஒட்டகங்களை அழைத்துச் சென்றுள்ளார். மேலும் பணிவிடை செய்வதற்காகவே 12 ஆயிரம் ஊழியர்களை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். ஏராளமான தங்கத்தை கொண்டு சென்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மான்சா மூசா தன்னோடு 8000 பேரை மெக்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இன்றும் இவரைப் பற்றி வரலாறு கூறுவதற்கு காரணம் இவர் வைத்திருந்த சொத்து மட்டும் கிடையாது. மற்றவர்களுக்கு செய்யும் எண்ணம் இவரிடம் தாராளமாக இருந்தது என கூறப்படுகிறது.

தங்க கட்டிகள் தானம்

தன்னைத் தேடி வருபவர்களுக்கு பொன் மற்றும் பொருளை தாராளமாக அள்ளிக் கொடுக்கும் குணம் கொண்டவராக திகழ்ந்து வந்துள்ளார். இவரை அவருடைய குடிமக்கள் அரசர்களுக்கெல்லாம் அரசர் என போற்றி புகழ்ந்துள்ளனர். அனைவருக்கும் தங்கத்தை அள்ளிக் கொடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இவருடைய ஆட்சி காலத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக இவர் திகழ்ந்து வந்துள்ளார்.

இன்று வரை இவருடைய சொத்து மதிப்பை எவரும் தாண்டி செல்லவில்லை என்பதுதான் உண்மை. தன்னைத் தேடி வரும் அனைவருக்கும் தங்க கட்டிகளை தானமாக கொடுத்து வந்துள்ளார் இந்த பேரரசர் மான்சா மூசா. அதன் காரணமாகவே இன்றுவரை வரலாறு இவரை நினைவு கூர்ந்து வருகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.