இந்த குட்டி, குட்டி விதைகளில் இத்தனை நன்மைகள் ஒளிந்துள்ளதா? என்னவென்று பாருங்கள்!
Nov 04, 2024, 06:00 AM IST
இந்த குட்டி, குட்டி விதைகளில் இத்தனை நன்மைகள் ஒளிந்துள்ளதா? உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க அன்றாடம் உணவில் நீங்கள் எந்தெந்த விதைகளை சேர்த்துக்கொள்ளலாம் பாருங்கள்.
உங்கள் அன்றாட உணவில் நீங்கள் சேர்த்துக்கொள்ளவேண்டிய விதைகள் மற்றும் அவற்றில் பொதிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் இந்த 8 விதைகளைத் தான் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். விதைகள் சிறியதாக இருந்தாலும், அவற்றில், எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நார்ச்சத்துக்கள், புரதம், ஆரோக்கிய கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் என எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை உங்களுக்கு கொடுக்கின்றன. மேலும் இவற்றை உங்கள் உணவுகளில் சேர்த்துக்கொள்வதால் அது செரிமானத்துக்கு உதவுகிறது. இதய ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலனையும் காக்கிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த விதைகளை உங்கள் அன்றாட உணவில் நீங்கள் ஏன் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
ஃப்ளாக்ஸ் விதைகள்
ஃப்ளாக்ஸ் விதைகளில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது உங்கள் இதய ஆரோக்கியம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க சிறந்தது. இதில் அதிகம் உள்ள லிக்னன்கள் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் வகை உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும். பொடித்த ஃப்ளாக்ஸ் விதைகளை நீங்கள் உங்கள் தயிர் அல்லது ஸ்மூத்திகளில் தூவி சாப்பிடலாம். இது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு வலுசேர்க்கும்.
சியா விதைகள்
சியா விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இது நிறைய தண்ணீரை உறிஞ்சி, ஜெல்லி போல் உருவாகி, பசியை கட்டுப்படுத்துகிறது. செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள், புரதச்சத்துக்கள் மற்றும் மினரல்களால் இதை நீங்கள் உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள தூண்டுகின்றன. இதை ஓட்ஸ், புட்டிங்குகள் மற்றும் ஸ்மூத்திகளில் நீங்கள் பயன்படுத்தலாம்.
பரங்கிக்காய் விதைகள்
பரங்கி விதைகள் பெப்பிடாஸ் என்று அழைக்கப்படுகிறது. இதில் உள்ள மெக்னீசியச் சத்துக்கள், உங்கள் தசைகளின் இயக்கத்துக்கு உதவுகிறது. இது எலும்பு ஆரோக்கியத்துக்கும் வழி வகுக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள், உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. வீக்கத்தைக் குறைக்கின்றன. வறுத்த பரங்கிக்காய் விதைகளை சாலட்கள், சூப்களில் சேர்த்தோ அல்லது ஸ்னாக்ஸ்காவோ சாப்பிட்டு மகிழலாம்.
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் இ சத்துக்கள் உள்ளன. இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இது உங்கள் சரும ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் என அனைத்தும் அதிகரிக்க உதவுகிறது. இதில் செலினியம் அதிகம் உள்ளது. இது தைராய்ட் ஆரோக்கியத்துக்கு சிறந்தது. இந்த விதைகளை உங்கள் சாலட்கள், யோகர்ட்கள் மற்றும் வீட்டில் தயாரிக்கும் ஊட்டச்சத்து பானங்களில் சேர்ததுக்கொள்ளலாம். இது சாப்பிடுவதற்கு மொறுமொறுப்பாக இருக்கும்.
ஹெம்ப் விதைகள்
ஹெம்ப் விதைகள் முழு புரதம் நிறைந்தது. இதில் உடலுக்குத் தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் ஆரோக்கிய கொழுப்புகள், குறிப்பாக ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. இது உங்கள் இதய ஆரோக்கியம் மற்றும் மூளை இயக்கத்துக்கு உதவுகின்றன. ஸ்மூத்தி மற்றும் சாலட்களில் ஹெம்ப் விதைகளை தூவி சாப்பிடலாம். வீட்டில் தயாரிக்கும் எனர்ஜ் பார்களில் சேர்த்துக்கொள்ளலாம்.
எள்ளு
எள்ளில் செசாமைன் மற்றும் செசாமோல் என்ற இரு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. வீக்கத்தைக் குறைக்கின்றன. இதில் உள்ள கால்சியச் சத்துக்கள் உங்கள் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. எள்ளையும் நீங்கள் ஸ்டிர் ஃப்ரைகள், சாலட்கள், பிரட்களில் தூவி சாப்பிடலாம்.
வெந்தயம்
உங்கள் உடலுக்கும் தேவையான எண்ணற்ற நன்மைகளைத் தருவதில் வெந்தயம் முக்கிய இடம் வகிக்கிறது. இது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. உடலில் கொழுப்பு அளவையும் முறைப்படுத்துகிறது. இந்த விதைகள் இந்திய உணவுகளில் முக்கிய இடம் வகிக்கின்றன. இதை பொடித்து, பல உணவுகளிலும் தூவி சாப்பிடலாம்.
அலிவ் விதைகள்
அலிவ் விதைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கால்சியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி, இ மற்றும் ஏ ஆகியவை ஆகும். இதன் ரத்தத்துக்கு ஊட்டமளிக்கும் குணங்கள், உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவை கட்டுப்படுத்துகின்றன. உங்கள் சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்துக்கு நல்லது.
டாபிக்ஸ்