உள அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காக நீங்கள் தவிர்க்க வேண்டியவர்கள் யார்? – உளவியலாளர்கள் கூறுவது என்ன?
உள அமைதி மற்றும் மன மகிழ்ச்சிக்காக நீங்கள் யாரையெல்லாம் தவிர்க்க வேண்டும். இதுகுறித்து உளவியலாளர்கள் கூறுவது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் உங்களின் மன அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காகவும் 8 வகை மனிதர்களை கட்டாயம் தவிர்க்கவேண்டும். அவர்களை உங்கள் வாழ்வில் இருந்து விலக்கினால்தான், உங்களால் மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த நச்சு உறவுகளை நீங்கள் தவிர்க்கவேண்டும். தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டு இருப்பவர்கள் மற்றும் சுயநலவாதிகளாக இருப்பவர்களை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இருந்து கட்டாயம் நீக்கிவிடவேண்டும். இங்கு உங்களுக்கு நீங்கள் தவிர்க்கவேண்டிய சில வகை நச்சு உறவுகள் குறைத்து உங்களுக்கு பட்டியலிட்டுள்ளோம். இவர்களை தவிர்த்தால்தான் நீங்கள் மனஅமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வில் இருக்க முடியும். இதை உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
உணர்வுகளை மடைமாற்றும் நபர்கள்
இவர்கள் சூழ்நிலைகள் மறறும் மனிதர்களை அவர்களின் தேவைகளுக்காக மாற்றிக்கொள்ளும் நபர்களாக இருப்பார்கள். உங்களை மாற்ற நினைப்பவர்களுக்கு உங்களின் பலவீனம் நன்றாகத் தெரியும். அவற்றை அவர்கள் உணர்வு ரீதியாக தூண்டி அவர்களுக்கு தேவையான வழியில் எப்போதும் மாற்றிக்கொள்வார்கள்.
தொடர்ந்து விமர்சிப்பவர்கள்
உங்களிடம் தொடர்ந்து குறைகளை மட்டுமே கண்டுபிடிப்பவர்கள், எப்போதும் மற்றவர்களை மட்டம் தட்டிக்கொண்டேயிருப்பார்கள். மற்றவர்களை எதற்காகவும் பாராட்ட மாட்டார்கள். மற்றவர்களை மதிப்பில்லாதவர்கள் என்று உணர வைத்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் எதிர்மறை எண்ணங்கள், விரைவில் மற்றவர்களின் ஆற்றலை அழிக்க வல்லது. எனவே இதுபோன்ற நபர்களிடம் இருந்து தப்பித்துவிடவேண்டும்.