அதிகப்படியான புரதம்..கண்பார்வைக்கு நல்லது..அனைத்து வயதினருக்கும் நன்மை தரும் நன்னீர் மீன் வகையான கத்தி மீன்
- Chital or Clown Knifefish: வங்காள வீடுகளில் அதிகமாக சாப்பிடக்கூடிய மீன் வகைகளில் ஒன்றாக சிட்டாலா அல்லது சித்தல் என்ற மீன் இருக்கிறது. இந்திய கத்தி மீன் என்று அழைக்கப்படும் இந்த மீன் சாப்பிட்டால் உடலில் நிகழும் மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
- Chital or Clown Knifefish: வங்காள வீடுகளில் அதிகமாக சாப்பிடக்கூடிய மீன் வகைகளில் ஒன்றாக சிட்டாலா அல்லது சித்தல் என்ற மீன் இருக்கிறது. இந்திய கத்தி மீன் என்று அழைக்கப்படும் இந்த மீன் சாப்பிட்டால் உடலில் நிகழும் மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
(1 / 11)
முள்கள் அதிகமாக இருக்கும் மீன் வகையாக சிட்டாலா மீன் இருப்பதால் பலரும் இதை சாப்பிட விரும்புவதில்லை, பார்ப்பதற்கு கத்தி போல் கூர்மையான முன் மற்றும் பின் பகுதியை கொண்டதாக இந்த மீன் உள்ளது
(2 / 11)
இந்தியாவின் கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மகாநந்தா நதிகள், பாகிஸ்தானின் சிந்து மாகாணம், மியான்மர், தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் முழுவதும் எலாயாவில் சிட்டாலா மீன்கள் காணப்படுகின்றன
(3 / 11)
தட்டையாகவும், நீளமாகவும் இருக்கும் மீன் மூக்கு பகுதி செப்பு பழுப்பு நிறத்துடன், இருபுறமும் 15 வெள்ளி புள்ளிகளும் உள்ளன. அதன் தலைக்குப் பின்னால், முதுகு வில் போல வளைந்திருக்கும். வாலின் அடிப்பகுதியில் 5-8 ஒழுங்கற்ற கரும்புள்ளிகள் உள்ளன. இது சுமார் 120 செ.மீ நீளம் வரை வளரக்கூடியது
(4 / 11)
ஆறுகள், ஓடைகள், கால்வாய்கள், குளங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நன்னீர்களில் இந்த மீன் வாழ்கிறது. நன்னீர் மீன வகையாக இந்த மீன் இருப்பதுடன் மற்ற மீன்களை இரையாக உண்கிறது. அத்துடன் பல்வேறு பூச்சிகள் மற்றும் அவற்றின் லார்வாக்கள், ஓட்டுமீன்கள், நத்தைகள், சிறிய மீன்கள் போன்றவற்றை சாப்பிட்டு வாழ்கின்றன
(5 / 11)
மழைக்காலத்தில் சிட்டாலா இனம் பெருகும். நீர்நிலையின் அடிப்பகுதியில் உள்ள மண்ணில் தோண்டி கூடு கட்டி மரத்திலோ அல்லது அதுபோன்ற பொருட்களிலோ முட்டையிடும். சிட்டல் மீன் சாப்பிட சுவையாகவும், தேவை அதிகமாகவும் உள்ளது
(6 / 11)
இந்த மீன்களில் அதிக புரதச்சத்து உள்ளது. இது தவிர, இதில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் ஓரளவு உள்ளது. இந்த மீன் உடலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்
(7 / 11)
இந்த மீன்களில் முள்கள் சற்று அதிகமாக இருப்பதால் பலரும் இதனை சாப்பிட விரும்புவதில்லை. பலர் இந்த மீனை குறிப்பாக குழந்தைகளுக்கு உணவாக அளிப்பதில்லை. ஆனால் இதில் உள்ள உயர்தர புரதம் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. வயதானவர்களும் இதை உட்கொள்ளலாம்
(8 / 11)
இதில் பல வகையான வைட்டமின்கள் உள்ளன. மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க அவை பெரிதும் பயன்படும். எனவே வெவ்வேறு வயதுடையவர்கள் இந்த மீனை உண்ணலாம். குறிப்பாக சீசன் மாறும்போது இந்த மீனை அனைவரும் சாப்பிடலாம்
(9 / 11)
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த மீன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மீனில் அதிக புரதச்சத்து இருப்பதால் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். அதனால் அதிக உணவு சாப்பிடுவதை கட்டுப்படுத்தி எடையை குறைக்க உதவுகிறது
(10 / 11)
இந்த மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கண் பராமரிப்புக்கு பெரிதும் பயன்படும். கூடுதலாக, இந்த மீனின் பல்வேறு கூறுகளை எலும்பு வலிமை மற்றும் மூளை செயல்திறன் போன்ற பகுதிகளில் பயன்படுத்தலாம். மொத்தத்தில், இதை சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன
மற்ற கேலரிக்கள்