இந்த தீபாவளிக்கு கட்டாயம் செஞ்சுட வேண்டியதுதான்! பாசிப்பயிறு லட்டு! ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும்!
Oct 29, 2024, 07:12 PM IST
இந்த தீபாவளிக்கு கட்டாயம் செஞ்சுட வேண்டியதுதான், பாசிப்பயறு லட்டு. ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் இந்த ரெசிபியை செய்து எப்போதும் செய்து சாப்பிடுவது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரும்.
200 கிராம் பாசிப்பருப்பில், 212 கலோரிகள் உள்ளது. கொழுப்பு 0.8 கிராம், புரதம் 14.2 கிராம் கார்போஹைட்ரேட் 38.7 கிராம், நார்ச்சத்துக்கள் 15.4 கிராம், ஃபோலேட் 80 சதவீதம், மேங்கனீஸ் 30 சதவீதம், மெக்னீசியம் 24 சதவீதம், வைட்டமின் பி1 22 சதவீதம், பாஸ்பரஸ் 20 சதவீதம், இரும்புச்சத்து 16 சதவீதம், காப்பர் 16 சதவீதம், பொட்டாசியம் 15 சதவீதம், சிங்க் 11 சதவீதம், வைட்டமின் பி2, 3, 5, 6 மற்றும் செலினியம் ஆகிய அனைத்தும் நிறைந்தது. பாசிபயிறில் புரசத்த்து நிறைந்துள்ளது. இதி ஃபினைலாலானைன், ஐசோலிசியூன், வாலைன், லைசைன், அர்ஜினைன் உள்ளிட்ட பல முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. இந்த முக்கிய அமிலங்களை உங்கள் உடல் தானாக சுரக்காது. இந்த பயிறை முளைக்கட்டி சாப்பிடும்போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மாறிவிடும். இதில் கலோரிகளும், அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் முளை கட்டாததைவிட அதிகம். ஃபைடிக் அமில அளவு முளைகட்டும்போது குறைகிறது. அது உடலுக்கு தேவையற்றது. இது உடலில் சிங்க், கால்சியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை குறைக்கிறது.
பாசிப்பயிறின் நன்மைகள்
அதிக ஆன்டிஆக்ஸிடன்ட் அளவுகள் நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதை குறைக்கிறது.
வெயில் காலத்தில் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் வராமல் தடுக்கிறது.
உடலில் சேரும் கெட்ட கொழுப்பை குறைத்து இதயத்தை காக்கிறது.
பொட்டாசிய, மெக்னீசிய, நார்ச்சத்துக்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
செரிமான உறுப்புக்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
பசியை கட்டுப்படுத்தி, எடை குறைப்புக்கு உதவுகிறது.
ஆரோக்கியமான கர்ப்ப காலத்துக்கு உதவுகிறது.
எளிதாக உங்கள் உணவில் சேர்க்கலாம்
இதை சாலட், சூப், குழம்பு என எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது கொஞ்சம் இனிப்பாக இருக்கும். இதில் இனிப்பு கஞ்சி கூட வெல்லம் சேர்த்து செய்யலாம். இதை ஊறவைத்து வேகவைத்து சமைக்க வேண்டும். இதை முளைக்கட்டி பச்சையாகவும் சாப்பிடலாம். இதில் இருந்து எப்படி லட்டு தயாரிப்பது என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
பாசிப்பயிறு – ஒரு கப்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி – கால் கப்
பாதாம் – கால் கப்
பிஸ்தா – கால் கப்
ஃபுட் கலர் கிரீன் – கால் ஸ்பூன் (தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்)
மில்க் கிரீம் – அரை கப்
சர்க்கரை - அரை கப் (பொடித்தது)
செய்முறை
கடாயில் சிறிது நெய் சேர்த்து பாசிப்பயிறை சேர்த்து நல்ல பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். நல்ல பொன்னிறமானவுடன், இறக்கி ஆறவைத்துக்கொள்ளவேண்டும். ஆறியவுடன் காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பொடியாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி, பாதாம், பிஸ்தாவை வறுத்து எடுத்து தனியாக வைத்துவிடவேண்டும்.
ஒரு கடாயில் நெய் சேர்த்து அரைத்த பாசிப்பயிறை சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும். அதில் ஃபுட் கலர், மில்க் கிரீம் சேர்த்து நன்றாக வறுத்துக்கொண்டே இருக்கவேண்டும். நல்ல பச்சை வாசம் போகும் வரை வறுத்துவிட்டு, இறுதியாக வறுத்துவைத்துள்ள முந்திரி, பாதாம், பிஸ்தாவை சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.
இறக்கி, கை பொறுக்கும் அளவுக்கு சூடு வந்தவுடன், சர்க்கரைப்பொடியை சேர்த்து சிறு லட்டுகளாக பிடித்துக்கொள்ளவேண்டும். இந்த தீபாவளிக்கு சூப்பர் சுவையான பாசிப்பயிறு லட்டுகள் தயார்.
இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், அரிய ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை தேர்ந்தெடுத்து ஹெச்.டி தமிழ் உங்களுக்காக வழங்கிவருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தீபாவளி சிறப்பு இனிப்புகள் உள்ளிட்ட தொடர்பான விஷயங்களை கொடுக்கிறோம். எனவே இதுபோன்ற தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள். இந்த ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.