பால் மற்றும் பாதாம் கலந்த பால் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Oct 03, 2024
Hindustan Times Tamil
காலை நேரத்தில் பால் மற்றும் பாதாம் கலந்த பால் பருகுவது ஆரோக்கியமானது மட்டுமல்லாமல், உங்களது நாளை சிறப்பாக தொடங்குவதற்கான சிறந்த வழியாக உள்ளது
பாதாம் பால் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிரம்பியிருப்பதுடன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பேனி பாதுகாக்கிறது
பாதாம் பாலில் அதிகப்படியான புரதம் நிறைந்துள்ளது. இதன் மூலம் தசை வளர்ச்சி, அவை சேதமடைவதை தடுக்கிறது. புரதம் வயிறு நிரம்பிய உணர்வை தருவதுடன் எடையை நிர்வகிக்க உதவுகிறது
இந்த பாலில் புரதம், கால்சியம், வைட்டமின் டி, ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து போன்ற உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள் உள்ளன. உங்களது நாளுக்கு தேவையான எரிபொருளாக செயல்படுகிறது
பாதாமில் அதிகப்படியான நார்ச்சத்து நிரம்பியுள்ளது. செரிமானத்துக்கு உதவுவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை சீராக்குவதுடன், டயபிடிக்ஸ் நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக உள்ளது
பாலில் இருக்கும் தாதுக்களான கால்சியம் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது
பாதாமில் ஒற்றை நிறைவுறா கொழுப்புகள், கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. ஆரோக்கிய கொழுப்புகள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது
பாதாமில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பி இருக்கிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து செல்களை பாதுகாக்கிறது. உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது
நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்