தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Exclusive : இரவில் தாமதமாக உறங்கச் செல்லும் குழந்தையா? அச்சச்சோ எத்தனை ஆபத்து பாருங்கள் - அதிர்ச்சி ஆய்வில் விளக்கம்!

Exclusive : இரவில் தாமதமாக உறங்கச் செல்லும் குழந்தையா? அச்சச்சோ எத்தனை ஆபத்து பாருங்கள் - அதிர்ச்சி ஆய்வில் விளக்கம்!

Priyadarshini R HT Tamil

Nov 11, 2024, 07:00 AM IST

google News
குழந்தை வயதில் உறக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். குழந்தைகள் தாமதமாக உறங்கச் சென்றால் என்னவாகும் என்று இந்த ஆய்வு விளக்குகிறது. (Shutterstock)
குழந்தை வயதில் உறக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். குழந்தைகள் தாமதமாக உறங்கச் சென்றால் என்னவாகும் என்று இந்த ஆய்வு விளக்குகிறது.

குழந்தை வயதில் உறக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். குழந்தைகள் தாமதமாக உறங்கச் சென்றால் என்னவாகும் என்று இந்த ஆய்வு விளக்குகிறது.

இரவில் சீக்கிரம் உறங்க அடம்பிடிக்கும் குழந்தையா? அவர்களின் பெற்றோரும் டிவி பார்க்க அனுமதிக்கிறார்கள் என்றால், பெற்றோரும் குழந்தைக்காக விழித்திருக்கிறார்கள், வார இறுதி நாட்களில் குழந்தைகளை விழித்திருக்க அனுமதிப்பது என வீட்டுப்பாடங்களை முடிக்க வைக்க அவர்களை இரவில் நீண்ட நேரம் விழித்திருக்க அனுமதிப்பது என செய்லவது குழந்தைகளின் மூளையை பாதிக்கும். 

எனவே குழந்தைகளின் மூளைக்கு உறக்கம் மிகவும் முக்கியம் என்பதை பெற்றோர் அறிவுறுத்தவேண்டும். குழந்தைகள் விரைவில் உறங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். அது நல்ல பழக்கம் என்பதை அறிவுறுத்துங்கள். இளம் குழந்தைகள் உறக்கம் தொலைத்தால் என்ன நடக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறாது. அது தேசிய அறிவியல் அகாடமி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Exclusive : இரவில் தாமதமாக உறங்கச் செல்லும் குழந்தையா? அச்சச்சோ எத்தனை ஆபத்து பாருங்கள் - அதிர்ச்சி ஆய்வில் விளக்கம்!

மூளை வளர்ச்சிக்கும், உறக்கத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?

உறக்கம் மூளை ஆரோக்கியத்துக்கு உதவும், தரமற்ற உறக்கம் குழந்தைகளின் மூளை செயல்பாட்டை பாதிக்கும். பேராசிரியர் கிரஹாம், வடகரோலினாவில் உள்ளார். அவர் கூறுகையில், கற்றல் மற்றும் நினைவாற்றலை முக்கிய நரம்பு தொடர்புகளை மேம்படுத்த உறக்கம் எப்படி உதவுகிறது என்று கூறுகிறார். குழந்தைகளின் உறக்கத்துக்கும், பெரியவர்களின் உறக்கத்துக்கும் வேறுபாடுகள் உள்ளது.

பெரியவர்கள் உறங்குவது, நமது உடலில் உள்ள பாராமரிப்பு மற்றும் சரிபார்ப்பு வேலைகளுக்கு முக்கியம். ஆனால் குழந்தைகளுக்கு உறக்கத்தில்தான் முக்கிய வளர்ச்சிப்பணிகள் நடக்கிறது. எனவே மூளையின் வளர்ச்சியை பலப்படுத்துவதில் உறக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆராய்ச்சியை குழந்தைகள் மற்றும் எலிகளில் செய்து ஆராய்ச்சியாளர்கள் இந்த தகவல்களை கண்டுபிடித்துள்ளனர்.

பெரியவர்களைப்போல் குழந்தைகளுக்கு உறக்கம் வருவதில்லை. நல்ல உறக்கம் இல்லையென்றால் குழந்தைகளுக்கு மூளை இயக்கத்தில் குழந்தைகளுக்கு சிக்கல் ஏற்படும். இது நீண்ட நாள் தொடரும். எனவே குழந்தைகளிடம் நல்ல உறக்கப் பழக்கம் இருக்கவேண்டும் அவர்கள் இரவு சரியான நேரத்தில் உறங்கச் சென்று எவ்வித இடையூறும் இல்லாமல் உறங்கி எழுவதும் அவர்களின் மூளை வளர்ச்சிக்கு நல்லது.

நரம்பியல் வளர்ச்சி கோளாறுடன் உள்ள தொடர்பு

நரம்பியல் வளர்ச்சி கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் உறக்கத்துக்கும் உள்ள தொடர்பு இந்த ஆய்வின் முக்கிய அங்கமாகும். இவர்கள் எலிகளில், தரமற்ற உறக்கம் மூளைக்கு கிடைக்கவேண்டிய முக்கிய புரதச்சத்துக்கள் கிடைக்கப்பெறாமல் இருப்பதை கண்டுபிடித்தார்கள். இந்த புரதங்கள், மூளையின் இயக்கத்துக்கு மிகவும் முக்கியமானவை. குறிப்பாக கற்றல் மற்றும் நினைவாற்றலுக்கு தேவையானவை.

இந்த புரதங்கள் ஆட்டிச கோளாறுகளுக்கும் வழிவகுக்கும் மரபணுக்களுடன் தொடர்புடையவை என்பது மிகவும் முக்கியமானது. குழந்தைகளுக்கு ஆட்டிசக் கோளாறுகள் ஏற்பட்டால், உறக்கமின்மை அதை அதிகரிக்கும். நல்ல ஆரோக்கியமான உடலுக்கு உறக்கம் முக்கியமானது. அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் தேவையானதும் ஆகும்.

கிரஹாம் கூறுகையில், உறக்கம் வாழ்நாள் முழுமைக்குமே மிகவும் முக்கியமானது. குறிப்பாக குழந்தைகளுக்கு அது மிகவும் முக்கியமானது. இது வளர்ச்சி காலத்தில் மிகவும் முக்கியமானது. குழந்தை வயதில் முக்கியமான உறக்கத்தை நாம் இழந்துவிட்டால், அதை நாம் திரும்பப்பெற முடியாது. உறக்க இழப்பு உங்கள் குழந்தைகளின் மூளையை எதிர்மறையாக பாதிக்கலாம். ஒருமுறை மூளை வளர்ச்சியில் உறக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டால், நாம் மீண்டும் திரும்பிச் சென்று அந்த பாதிப்பை சரிசெய்ய முடியாது என்பதால் கவனம் தேவை. எனவே உங்கள் குழந்தைகளின் உறக்க நேரத்தில் மட்டும் சமரசமே வேண்டாம். அவர்களை இரவு சரியான நேரத்தில் உறங்க வைத்து, போதிய அளவு உறக்கத்தை அவர்களுக்கு இரவில் பரிசளியுங்கள். அதுதான் அவர்களின் எதிர்காலத்துக்கும், மூளை வளர்ச்சிக்கும் நல்லது. 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி