தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உடல் எடை குறைக்க சாப்பாத்தி மட்டும் சாப்பிடுகிறீர்களா? இந்த தால் மட்டும் எடுத்துக்கங்க போதும்!

உடல் எடை குறைக்க சாப்பாத்தி மட்டும் சாப்பிடுகிறீர்களா? இந்த தால் மட்டும் எடுத்துக்கங்க போதும்!

Priyadarshini R HT Tamil

Nov 10, 2024, 04:48 PM IST

google News
உடல் எடை குறைக்க சாப்பாத்தி மட்டும் சாப்பிடுகிறீர்களா? இந்த தால் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் போதும். கலோரிகள் அதிகம் கூட்டாது. உடல் எடையை குறைக்க உதவும். (Pinterest)
உடல் எடை குறைக்க சாப்பாத்தி மட்டும் சாப்பிடுகிறீர்களா? இந்த தால் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் போதும். கலோரிகள் அதிகம் கூட்டாது. உடல் எடையை குறைக்க உதவும்.

உடல் எடை குறைக்க சாப்பாத்தி மட்டும் சாப்பிடுகிறீர்களா? இந்த தால் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் போதும். கலோரிகள் அதிகம் கூட்டாது. உடல் எடையை குறைக்க உதவும்.

உடல் எடையைக் குறைக்க நீங்கள் சப்பாத்தி அல்லது ஃபுல்கா அல்லது ரொட்டி மட்டும் சாப்பிடுபவரா? தொட்டுக்கொள்ள தால் மட்டும்தான் எடுக்கவேண்டும். அது அதிக கலோரிகளைக் கூட்டாது. ஆனால் நீங்கள் கிரேவி சாப்பிடும்போது, நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும். உடல் எடையைக் குறைக்க தால் மட்டும்தான் சாப்பிடவேண்டும். மற்ற கிரேவிகளை சாப்பிடுவது உங்கள் உடல் எடையை அதிகரித்து விடுகிறது. இதனால் நீங்கள் இந்த தாலை மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது.

தேவையான பொருட்கள்

பாசிபருப்பு – ஒரு கப் (10 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

சோம்பு – கால் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பச்சை மிளகாய் – 2

தக்காளி – 1 (பொடியான நறுக்கியது)

மல்லித்தழை – சிறிதளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – கால் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

வர மிளகாய் – 2

செய்முறை

ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து சீரகம், சோம்பு, பெரிய வெங்காயம், முழு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதக்கியவுடன், அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவேண்டும். அடுத்து ஊறவைத்த பாசிபருப்பு சேர்த்து மூடிவைத்து 2 விசில் விட்டு இறக்கவேண்டும்.

அடுத்து ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் அதில் கடுகு, உளுந்து, வர மிளகாய் சேர்த்து பொரியவிடவேண்டும். இதை இறக்கிவைத்த தாலில் சேர்த்து, மல்லித்தழை தூவி இறக்கவேண்டும். நீங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தில் இருப்பவர் என்றால், இதை மட்டும் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளவேண்டும். அதிகம் கலோரிகள் தரும் கிரேவிகளை உட்கொள்வது உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கும். உடல் எடையையும் குறைக்காது. அதிக கலோரிகளை உடலுக்கு கொடுத்துவிடும்.

இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

பாசிபருப்பின் நன்மைகள் மற்றும் அதில் உள்ள சத்துக்களை முதலில் தெரிந்துகொள்வது அவசியம். 100 கிராம் பாசிப்பருப்பில், 6 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் இ, சி, கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இது இந்திய சமையலில் அதிகளவில் இடம்பெறுகிறது. இது எளிதாக செரிக்கக் கூடியது. மற்ற பருப்புக்களுடன் ஒப்பிடும்போது, இந்த பாசிப்பருப்பில் கார்போஹைட்ரேட்கள் குறைவாக உள்ளது.

இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று. இதை நீங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. நார்ச்சத்துக்கள் நிறைந்தது. நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக் குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி