Bread - Egg Podimas : செம்ம ஸ்னாக்ஸ்ங்க இந்த பிரட் பொடிமாஸ்! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்! ஈசி ரெசிபி இதோ!-bread egg podimas these bread podimas are great snacks kids love it heres an easy recipe - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Bread - Egg Podimas : செம்ம ஸ்னாக்ஸ்ங்க இந்த பிரட் பொடிமாஸ்! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்! ஈசி ரெசிபி இதோ!

Bread - Egg Podimas : செம்ம ஸ்னாக்ஸ்ங்க இந்த பிரட் பொடிமாஸ்! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்! ஈசி ரெசிபி இதோ!

Priyadarshini R HT Tamil
Oct 01, 2024 02:49 PM IST

Bread - Egg Podimas : செம்ம ஸ்னாக்ஸ்ங்க இந்த பிரட் பொடிமாஸ், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நிமிடத்தில் எளிதாக செய்துவிடலாம் இந்த ரெசிபியை. இதோ எப்படி என்று பாருங்கள்.

Bread - Egg Podimas : செம்ம ஸ்னாக்ஸ்ங்க இந்த பிரட் பொடிமாஸ்! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்! ஈசி ரெசிபி இதோ!
Bread - Egg Podimas : செம்ம ஸ்னாக்ஸ்ங்க இந்த பிரட் பொடிமாஸ்! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்! ஈசி ரெசிபி இதோ!

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட முட்டையை நீங்கள் வழக்கம்போல் எடுத்துக்கொள்ளாமல் பிரட்டுடன் சேர்த்து வித்யாசமான மற்றும் ஈசியான இந்த ஸ்னாக்ஸ் ரெசிபியை செய்து சாப்பிடலாம். இது உங்களுக்கு மிகவும் பிடிக்கும். கட்டாயம் முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்

பிரட் – 2 துண்டு

எண்ணெய் – 4 ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1

உப்பு – சிறிதளவு

மிளகுத்தூள் – கால் ஸ்பூன்

கரம் மசாலா – அரை ஸ்பூன்

மல்லித்தழை – சிறிது

செய்முறை

பிரட்டை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும். உப்பு, மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்துவிடவேண்டும். வெங்காயம் நன்றாக கண்ணாடி பதம் வரும் வரை வதங்கியுவுடன் அதில் முட்டைகளை அடித்து சேர்த்து கிளறவேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து கிளறவேண்டும். கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையில் பிரட் பொடிமாஸ் தயார். இதை ப்ரேக் ஃபாஸ்ட் அல்லது ஸ்னாக்ஸாக சாப்பிடலாம்.

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கும் பிடிக்கும். இதை செய்வது எளிது. இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி கெட்அப் இருந்தாலே அல்லது ஒன்றும் கூட வைத்துக்கொள்ளாமலோ சாப்பிடலாம். ஒருமுறை ருசித்தால் மீண்டும் மீண்டும் வேண்டும் என்பீர்கள்.

குறிப்பாக காலையில் பள்ளி செல்லும் குழந்தைகள் ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட அடம் பிடிப்பார்கள். அவர்களுக்கு இதை செய்துகொடுத்தால் கட்டாயம் பட்னியாகச் செல்ல மாட்டார்கள். எனவே அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அசத்தலான ரெசிபிதான் இந்த பிரட் பொடிமாஸ்.

முட்டையைப் போலவே பிரட்டிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. குறிப்பாக கோதுமை பிரட்டுகளை உபயோகிப்பது மிகவும் நல்லது. கோதுமை பிரட்டுகளில் செய்யும்போது அதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய தகவல்கள், அழகுக் குறிப்புகள் என உங்களுக்காக ஹெச்.டி. தமிழ் தொகுத்து வழங்கி வருகிறது. இவற்றை படித்து தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள். இதுபோன்ற தகவல்களைப் பெற்று, ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிவகுத்துக்கொள்ளுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.