வாடகை தரவில்லை..அடியாள்களை வைத்து மிரட்டல்! இசையமைப்பாளர் தேவா மகள் மீது குற்றச்சாட்டு வைத்த பெண் - என்ன நடந்தது?
Oct 23, 2024, 08:44 AM IST
வாடகை தரவில்லை எனக்கூறி வீட்டில் வசித்த பெண்ணை அடியாள்களை வைத்து மிரட்டுவதாக இசையமைப்பாளர் தேவாவின் மகள் மீது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எழுத்து பூர்வமாக புகார் எதுவும் அளிக்கவில்லை
தமிழ் சினிமாவில் 90ஸ்களில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் தேனிசை தென்றல் தேவா. தற்போது அதிகமாக இவர் படங்களில் இசையமைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து இசை கச்சேரி நடத்தி வருவதுடன், சினிமாக்களில் பாடல் பாடியும் வருகிறார். தேவாவுக்கு ஸ்ரீகாந்த் தேவா என்ற மகனும், ஜெயப்பிரதா என்ற மகளும் உள்ளார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பாளராக இருந்து வருகிறார்.
தேவா மகள் ஜெயப்பிரதா மீது குற்றச்சாட்டு
சென்னை வடபழனியில் இசையமைப்பாளர் தேவா மகள் ஜெயபிரதாவுக்குச் சொந்தமா வீடு ஒன்று உள்ளது. இவரது வீட்டை தீபிகா, ஜெயக்குமார் தம்பதிகள் வாடகைக்கு வசித்து வருகிறார்கள். விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தீபிகா கதறி அழுதபடி பகிர்ந்திருக்கும் விடியோவில், "எனக்கும் எனது கணவரின் உயிருக்கும் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு காரணம் ஜெயபிரதா தான்" என்று கூறியுள்ளார்.
விடியோவில் அழுதவாறே பேசியிருக்கும் தீபிகா, "வீட்டில் கத்தியுடன் புகுந்த 7 நபர்கள் தன்னை மிரட்டிவிட்டு வீட்டிலிருந்த அனைத்துப் பொருள்களை அடித்து உடைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். அவர்கள் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்" என கூறியுள்ளார்.
புகார் அளிக்கவில்லை
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தீபிகா 100 எண்ணுக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த விசாரணை மேற்கொண்டனர். ஆனாலும் தீபிகா தரப்பில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஜெயப்பிரதாவின் வீட்டுக்கு தீபிகா வாடகைக்கு வந்துள்ளார். வீட்டின் வாடகையாக மாதம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. வீட்டில் குடியேறியதில் இருந்தே தீபிகா வீட்டுக்கான வாடகையை தராமலே இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் தேவாவின் மகள் ஜெயப்பிரதா, வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்போது நடந்த விசாரணையில் முறையாக வாடகை செலுத்துவதாகக் கூறிய தீபிகா மீண்டும் வாடகை அளிக்காமல் இருந்துள்ளார்.
தனது ஹார்டுவேர்ஸ் கடை நஷ்டத்தில் இயங்கி வருவதால் வாடகை தர இயலவில்லை என ஜெயப்பிரதாவிடம் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தனது குற்றச்சாட்டு தொடர்பாக தீபிகா எழுத்துபூரவமாக புகார் அளிக்காத நிலையில், போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.
டாபிக்ஸ்