Wife Kidnapped : தகாத உறவு.. தட்டிகேட்ட மனைவியை பிளான் பண்ணி கடத்திய பாஜக பிரமுகர்.. மடக்கி பிடித்த போலீசார்!
BJP Sivakumar : மனைவியை கடத்திய பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் திருமணத்தை மறைத்து தன்னை 2ஆவது திருமணம் செய்து கொண்டதாக, சிவக்குமார் மீது பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் மனைவியை கடத்திய பாஜக பிரமுகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதை தட்டிக் கேட்டதால் பாஜக பிரமுகர் சிவக்குமார், அவரது மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நண்பர்களுடன் வந்து தன்னை கடத்திச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் சிவக்குமார், அஜித், |முருகேசன் உட்பட 9 பேர் மீது 5 பிரிவின் கீழ் பெரும்பாக்கம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்
முதல் திருமணத்தை மறைத்து தன்னை 2வது திருமணம் செய்து கொண்டதாக, சிவக்குமார் மீது பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார் அளித்துளார். மேலும் சிவக்குமார் தொழில் செய்வதற்காக வழங்கிய ரூ. 90 லட்சம் பணம் மற்றும் 500 கிராம் தங்க நகையை மீட்டுத் தரவேண்டும் எனவும் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவகுமார் பாஜக சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக அணியின் மாவட்ட தலைவராக உள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக இரண்டு மகன்களுடன் வாழ்ந்துவரும் நிலையில், சிவக்குமார் பாஜகவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பது தெரிந்து இருவருக்குள்ளும் பிரச்சனை எழுந்ததுள்ளது. இந்த பிரச்சனை முடிக்க பாஜக பிரமுகர் சிவக்குமார் அவரது மனைவியை கடத்த திட்டம் தீட்டி அதற்கு அவரது நண்பர்களை அழைத்துள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி மாலை லட்சுமிபிரியா கோயிலுக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.
மனைவியை கடத்திய பாஜக பிரமுகர்
லட்சுமி பிரியா வீட்டின் வெளியே கார் வந்து நின்றதும் காரை விட்டு கீழே இறங்குவதற்குள் ஒரு காரில் வந்த லட்சுமிபிரியாவின் கணவர் சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் காரில் வலுகட்டாயமாக இழுத்து அவரிடம் இருந்த காரின் சாவி பறித்து, கத்திமுனையில் அடித்து காரில் கடத்திச் சென்றுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் பெரும்பாக்கம் போலீசார் அவர்களை பள்ளிக்கரணை அருகே மடக்கி பிடித்து கடத்தப்பட்ட லட்சுமி பிரியா மற்றும் அவரது மகன் ரூபேஷ் ஆகியோரை மீட்டுள்ளனர்.
லட்சுமி பிரியா செய்தியாளர் சந்திப்பு
லட்சுமி பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,” எனது கணவர் முதல் திருமணத்தை மறைத்து என்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இது தெரிந்தும் 14 ஆண்டுகளாக பொறுத்துக் கொண்டு அவரோடு வாழ்ந்து வந்தேன். இந்நிலையில் பாஜகவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால் தன்னை வேண்டாமென்று கூறி விரட்டியடித்ததால் அவரை விட்டு செல்ல முடிவெடுத்து, நான் அவருக்கு தொழில் செய்ய கொடுத்த ரூ. 90 லட்சம் மற்றும் 500 கிராம் தங்க நகை உள்ளிட்டவற்றை திருப்பி கேட்டேன்.
இருவரும் சேர்ந்து ஒரு நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தோம். அதனுடைய பங்கையும் கொடுக்க வேண்டும். மேலும், என்னை கடத்திச் சென்றபோது எடுத்துச் சென்ற 5 சவரன் தங்க நகை, கார் மற்றும் நான் கொடுத்த பணம், எனது அலுவலகத்தில் இருக்கும் ஆவணங்களையும் மீட்டுத் தர வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.