Deepika Padukone: தேடி வந்தவர்களுக்கு டாடா காட்டிய நடிகை... இதுக்கெல்லாம் கவலையே இல்ல... கேஷூவலா சொன்ன தீபிகா-actress deepika padukone express how she miss the hollywood chance - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Deepika Padukone: தேடி வந்தவர்களுக்கு டாடா காட்டிய நடிகை... இதுக்கெல்லாம் கவலையே இல்ல... கேஷூவலா சொன்ன தீபிகா

Deepika Padukone: தேடி வந்தவர்களுக்கு டாடா காட்டிய நடிகை... இதுக்கெல்லாம் கவலையே இல்ல... கேஷூவலா சொன்ன தீபிகா

Malavica Natarajan HT Tamil
Sep 22, 2024 02:21 PM IST

Deepika Padukone: தி ஃபாஸ்ட் அண்ச் ஃபியூரியஸ் திரைப்படத்தில் நடக்க அழைப்பு வந்ததாகவும், அதனை தான் மறுத்ததாகவும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கூறியுள்ளார்.

Deepika Padukone: தேடி வந்தவர்களுக்கு டாடா காட்டிய நடிகை...
Deepika Padukone: தேடி வந்தவர்களுக்கு டாடா காட்டிய நடிகை...

இந்நிலையில், இவரது நடிப்பைக் கண்டு வியந்த ஹாலிவுட் இயக்குநர் தீபிகா படுகோனை அவரது படத்தில் நடிக்க அழைத்ததாகவும் ஆனால் அதற்கு தீபிகா மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

தேடிவந்த வாய்ப்பு

தீபிகா ட்ரிபிள் எக்ஸ்: ரிட்டன் ஆஃப் ஷான்டர் கேஜ் எனும் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இதற்கு முன்னதாக உலகளவில் பெரும் புகழ் பெற்ற ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் தொடரின் 7ம் பாகத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளதாம். இந்தப் படத்தில் அவருக்கு புகழ் பெற்ற ராம்சே கதாப்பாத்திரம் வழங்கப்பட இருந்ததாம்.

கமிட்மெண்ட் ஆல் மிஸ் ஆன படம்

ஆனால் இவர் அந்தச் சமயத்தில் சஞ்சய் லீலா பன்சாலியின் கோலியோன் கி ராஸ்லீலா ராம்- லீலா திரைப்படத்தில் நடித்து தருவதாக முன்கூட்டியே ஒப்புக் கொண்டுள்ளாராம். இதனால், இந்தப் படத்தை முடித்த பிறகே தன்னால் பிற நடங்களில் நடிப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டாராம். இதனால், தீபிகாவின் ஹாலிவுட் பட வாய்ப்பு தள்ளிப் போனதுடன் ராம்சே கதாப்பாத்திரத்தில் நாதலி இம்மானுவேல் நடிக்க வேண்டிய நிலை வந்தது. இத்திரைப்படம் வெளியான பின் ராம்சே கதாப்பாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது குறிப்பிடப்பட்டது.

இதுதான் கேரியருக்கு முக்கியம்

ஆனால், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதில் தனக்கு எந்த வித வருத்தமும் இல்லை என நடிகை தீபிகா படுகோன் கூறியுள்ளார். ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படத்திற்கான அழைப்பு வந்த நேரத்தில் கோலியோன் கி ராஸ்லீலா ராம்- லீலா திரைப்படம் தான் என் கேரியருக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. 

ஹாலிவுட் படத்தில் நடிக்க முடியவில்லை என நான் எப்போதும் வருத்தப்படவும் இல்லை. நான் என்னுடைய வேலையை பாதியிலேயே விட முடியாது. கொடுத்த வாக்கை முதலில் காப்பாற்ற வேண்டும் என தீபிகா படுகோன் கூறியிருந்தார்.

பாராட்டு மழையில் தீபிகா

இவர் 2013ம் ஆண்டு பிடிஐக்கு கொடுத்த இந்த பேட்டி இப்போது வைரலாகி வருவதைத் தொடர்ந்து, தீபிகாவின் தொழில் அர்ப்பணிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், இந்த குணத்தால் தான் அவர் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் எனவும் வாழ்த்தி வருகின்றனர். 

அதுமட்டுமன்றி, ராம் லீலா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றிப் படமாகவே அமைந்தது. இந்தத் திரைப்படங்களின் மூலமே அவர் இந்தியாவின் சிறந்த நடிகையாகவும் அவர் வலம் வந்தார் என பல ரசிகர்களும் தீபிகாவை சிலாகித்து வருகின்றனர்.

நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங்- தீபிகா படுகோன் தம்பதிக்கு கடந்த 8ம் தேதி பெண் குழந்தை பிறந்த நிலையில், அவரது ரசிகர்கள் தீபிகாவை சோசியல் மீடியாவில் புகழ்ந்து வருகின்றனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner