Deva: கம்போசிங்கின்போது கே.எஸ்.ரவிக்குமார் என் முகத்தைப் பார்க்கமாட்டார் - தேவா
இசையமைப்பாளர் தேவா, கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்து பணிபுரிந்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வருபவர், தேவா. இவர் தமிழ்சினிமாவில் பாட்ஷா, அண்ணாமலை, ஆசை, பஞ்ச தந்திரம், வாலி, குஷி, நேருக்கு நேர் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் தேவா வலையொளிப்பக்கம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘நான் பணிபுரிந்த இயக்குநர்களிலேயே ரவிக்குமார் காமெடியானவர். கம்போசிங்கின்போது, என் முகத்தை பார்த்து பாடல் வாங்கமாட்டார். குனிந்துகொள்வார். கேட்டால், நீங்கள் முகபாவனைகளிலேயே என்னை ஏமாத்திருவீங்க அப்படின்னு சொல்வார். நட்புக்காக படத்தில், மீசைக்கார நண்பா பாடலை ஓகே பண்ணமாட்டேன்னு சொல்லி, கடைசியாக தயாரிப்பாளரால் ஓகே செய்தார். அவ்வை சண்முகி படத்திற்காக கமல் சார், கே.எஸ்.ரவிக்குமார் இணைந்து அமர்ந்து பாடல்களை உருவாக்கினோம். அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆகியது. ஆனால், அதற்குப்பின் கமல் சாரை வாய்ப்பு வேண்டும் என்றுபோய் கேட்டது கிடையாது’ என்று சொன்னார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்