Vijay: தி கோட் துப்பாக்கி சீனை இப்படி எடுக்க சொன்னது யார் - வெங்கட் பிரபு சொன்ன சுவாரஸ்யத் தகவல்
Sep 07, 2024, 04:15 PM IST
Vijay: தி கோட் துப்பாக்கி சீனை இப்படி எடுக்க சொன்னது யார் என்பது குறித்தும், வெங்கட் பிரபு சொன்ன சுவாரஸ்யத் தகவல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
Vijay: தி கோட் திரைப்படத்தில் துப்பாக்கி சீனை வைக்க சொன்னது யார் என்பது குறித்து வெங்கட் பிரபு சொன்ன சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்திருக்கிறார்.
தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தி கோட் தொழில்நுட்பக் குழுவினர் விவரம்:
இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகியிருக்கிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரிக்கின்றனர்.
‘’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' படத்துக்கு உண்டான ஒளிப்பதிவினை சித்தார்த்தா நுனி புரிய, வெங்கட் ராஜின் என்பவர் எடிட் செய்கிறார். இப்படத்துக்குண்டான வசனத்தை விஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
இப்படத்தில் கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகிய நால்வர் சேர்ந்து, படத்துக்குண்டான பாடல்களை எழுதியுள்ளனர்.
தி கோட் படத்தின் கதை:
கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், பயங்கவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர Special Anti terrorist squad team சார்பில் காந்தி ( விஜய்), அஜய் (அஜ்மல்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் ( பிரபு தேவா) ஆகியோர் கொண்டு செல்ல ஆயுதங்களுடன் களமிறங்க, அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மேனன் ( மோகன்) இறந்துவிடுவதாக காட்டப்படுகிறது.
இதற்கிடையே தாய்லாந்திற்கு மனைவி அனு ( சினேகா) உடன் செல்லும் காந்தி, தன்னுடைய மகனைப் பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது. ஆனால், பின்னாளில் அவனை காந்தி பிரச்சினை ஒன்றில் சந்திக்கிறார். அந்தப் பிரச்சினை என்ன? அதில் காந்திக்கு வில்லனாக மகன் மாறியது ஏன்? என்பது படத்தின் மீதிக்கதை.
தி கோட் துப்பாக்கி சீன் வைக்க சொன்னது யார் - வெங்கட் பிரபு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸான நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ படம், ரிலீஸாகி இரண்டு நாட்களிலேயே 70 கோடி ரூபாய்க்கும் வசூலித்துள்ளது.
விஜய்யின் தி கோட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் கேமியோவில், விஜய் பேசும் காட்சிகள், நடிகர் விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் என உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது.
இதை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் கேள்வியாக முன்வைக்கும் நடிகை சங்கீதாவிடம் இயக்குநர் வெங்கட் பிரபு மெய்சிலிர்த்துப் பதில் அளித்துள்ளார். அதில் பதில் சொல்லும் வெங்கட் பிரபு, ‘’ அது எவ்வளவு பெரிய விஷயம். அதை ஒத்துக்கிட்டு விஜய் சார் பண்ணணும்கிறதுதான். சிவகார்த்திகேயன் ஃபேன் பாய். சிவாவுக்கு விஜய் சார் ரொம்பப்பிடிக்கும். இந்தப் படத்தில் நான் எழுதினது இதை வச்சிக்கோங்க. சுட்ருங்கன்னு சொல்லி மிரட்டுங்கன்னு சொல்லிட்டுப் போவார். விஜய் சாராக தான் இதைப் போட்டார். துப்பாக்கியைப் பிடிங்க சிவா. துப்பாக்கி அவர் படம். துப்பாக்கியைப் பிடிங்க சிவா. எல்லாமே உன் கையில் தான் இருக்குது அப்படின்னு சொன்னவுடனே, அதாவது இங்க இருக்கிறவங்க உயிர் எல்லாம் உங்கள் கையில் தான் இருக்குது அப்படின்னு சொன்னதும் படத்திலேயும் கனெக்ட் ஆகும். ஃபியூட்டிஃபுல்லாக ஹேண்டில் பண்ணுனார். உடனே, சிவா சொல்வார். சார் நீங்க இதை விட பெரிய வேலைக்குப் போறீங்க. இதை நான் பார்த்துக்கிறேன். நீங்க அதைப்பாருங்கன்னு சொல்வார். உடனே, விஜய் சார் தம்ப்ஸ்அப் காட்டிட்டுப்போவார். அவர் மனசோட ஆழம் தெரியுது. எனக்கு அய்யோ அவர் சினிமாவிட்டுட்டுப் போறாரே, அப்படின்னு மனசு கஷ்டப்படுறதா, என்ன சொல்றதுன்னு குழப்பமாக இருந்துச்சு.
விஜய் சார் போனதற்குப் பின், சிவகார்த்திகேயன் சாருக்கும் மோகன் சாருக்கும் இடையில் என்ன நடந்தது அப்படின்னு ஒரு ஸீன் இருக்கும். எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஸீன் அது. படத்தின் நீளத்தால் பயன்படுத்த முடியலை. கண்டிப்பாக அது டெலீட்டட் ஸீனில் வெளியே வரும்’’ என்றார்.